Google search engine
சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய விவகாரத்தில், அவர் வேண்டுமென்றே தன் மீது குற்றம்சாட்டுவதாகவும், கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் என்றால் நிரூபிக்கட்டும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுகளை வீசிய சம்பவத்தை ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் சார்பில் கண்டித்து இருக்கிறேன். இவ்விவகாரத்தில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்தில் இருந்து...
காரண​மாக, அரசு போக்​குவரத்து கழகங்​கள் சார்​பில், சென்னை உட்பட பல்​வேறு இடங்​களில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் 31 வரை போதிய அளவில் சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. அதன்​படி, சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்​சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்​கோ​வில், கன்​னி​யாகுமரி, துாத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்​பூர் ஆகிய இடங்​களுக்கு வரும் 28-ம் தேதி 460 சிறப்பு பேருந்துகளும், 29-ம் தேதி 530 சிறப்பு...
பூந்தமல்லி - போரூர் வரையில் 8 கி.மீ. தொலைவுக்கு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் ஏப்.20-ம் தேதிக்கு பிறகு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் மெட்ரோ ரயில் பணிகளில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலான வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். பல்வேறு இடங்களில் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. குறிப்பாக போரூர் - பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன....
திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல்யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் மலைக்கு இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுவதை எதிர்த்தும், திருப்பரங்குன்றம் மலையைக் காக்க வலியுறுத்தியும் சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி சார்பில் வடசென்னை மாவட்ட...
மெட்ரோ ரயில் தூணில் இருசக்கர வாக​னம் மோதிய விபத்​தில் மாணவர்​கள் இரு​வர் உயி​ரிழந்​தனர். சென்னை ராமாபுரத்​தைச் சேர்ந்​தவர் கெல்​வின் கென்னி ஜெயன் (21). இவர் சென்​னை​யில் உள்ள கல்​லூரி ஒன்​றில் 2-ம் ஆண்டு பட்​டப்​படிப்பு படித்து வந்​தார். இவரது நண்​பர் சித்​தார்த் (20). சென்னை அண்ணா பல்​கலைக்​கழகத்​தில் முதலா​மாண்டு படித்து வந்​தார். இரு​வரும், சென்னை சேப்​பாக்​கத்​தில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற கிரிக்​கெட் போட்​டியை காணச் சென்​றனர். இதற்​காக தங்​களது...
வீடு வழங்கக் கோரி சென்னை பெரியமேடு பகுதி மக்கள் நேற்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். சென்னை பெரியமேடு வி.வி.சாலை பகுதியில் பல ஆண்டுகளாக 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களுக்கு தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களது கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தற்போது...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கோ-ஆப்டெக்ஸ் புதிய விற்பனை நிலையத்தை திறக்கவிருப்பதாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, பிற மாநிலங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் அமைக்கப்படுமா என்று பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஆர்.காந்தி பதில் அளித்து பேசியதாவது: இந்தியா முழுவதும் 150 கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 106 விற்பனை நிலையங்களும், பிற மாநிலங்களில் 44 நிலையங்களும்...
மக்​களவை தொகுதி மறு​வரையறை தொடர்​பாக அமைக்​கப்​பட்​டுள்ள கூட்டு நடவடிக்கை குழு​வின் முதல் ஆலோ​சனை கூட்​டம் சென்​னை​யில் முதல்​வர் ஸ்டா​லின் தலை​மை​யில் கடந்த 22-ம் தேதி நடந்​தது. இதில், கேரளா, தெலங்​கா​னா, பஞ்​சாப் முதல்​வர்​கள், கர்​நாடகா துணை முதல்​வர் உட்பட மொத்​தம் 6 மாநிலங்​களில் இருந்து 14 அரசி​யல் கட்​சிகளின் பிர​தி​நி​தி​கள் பங்கேற்​றனர். இந்த கூட்​டத்​தில் ஆந்​திர மாநில துணை முதல்​வர் பவன் கல்​யாணின் ஜனசேனா கட்​சி​யும் கலந்து கொண்​ட​தாக கூறப்​பட்ட...
அறிவியல் கண்காட்சி மற்றும் செயல்முறை விளக்கங்களுடன் பிரம்மாண்டமான சென்னை அறிவியல் விழா இன்று (25-ம் தேதி) தொடங்குகிறது. இதில் அறிவியல் கருத்துகளை விவரிக்கும் வகையில் பொம்மலாட்டம், தெருக்கூத்து, வில்லுப்பாட்டு, கிராமிய பாடல்கள் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக தமிழக அரசின் அறிவியல் நகரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: உயர்கல்வித் துறையின் ஓர் அங்கமாக இயங்கிவரும் அறிவியல் நகரம் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இடையே அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு...
ஜாமீன் கிடைத்த பிறகும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவி்ல்லை என கூறி கைதிகளை தொடர்ந்து சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல் என கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பாக மாநில சட்டப்பணிகள் ஆணை குழுவும், சிறைத்துறை நிர்வாகமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளில் கைதிகள் தங்களுக்கு ஜாமீன் கிடைத்தும், நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் சிறைகளிலேயே அடைத்து...