“நேற்று வரை இலையாக இருந்தவர்கள் இன்று களையாக எப்படி மாறினார்கள்?” – சீமானுக்கு எதிராக சீறும் காளியம்மாள் நேர்காணல்
admin - 0
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் பி.காளியம்மாள் கடந்த பிப்ரவரியில் அந்தக் கட்சியிலிருந்து விலகினார். அப்போது, “தமிழ்த் தேசியத்தை விதைக்கும் வகையில் எம் பயணம் தொடரும்” என அறிவித்திருந்தவர், இதுவரை எந்தக் கட்சியிலும் இணையாமல் இருக்கிறார். இந்த நிலையில், நாதக-வில் தனக்கு என்ன நடந்தது... விலகலுக்கான காரணம்... எதிர்கால திட்டம் உள்ளிட்டவை குறித்து ‘இந்து தமிழ் திசை’யிடம் மனம்திறந்து பேசினார் காளியம்மாள்.
மீனவக் குடும்பத்தில் பிறந்து ஒரு சமூக...
துணைவேந்தர் நியமனம் தொடர்பான தீர்ப்புக்காக மே 3-ல் முதல்வருக்கு பாராட்டு விழா: அமைச்சர் தகவல்
admin - 0
துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து மே 3-ம் தேதி முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தபோவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை மாநில அரசே மேற்கொள்ளும் மகத்தான அறிவிப்பை உச்ச நீதிமன்றம் சென்று பெற்றுவந்த முதல்வருக்கு மே 3-ம் தேதி சென்னையில் பாராட்டு விழா...
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியை இன்றே தொடங்குங்கள் என்று அதிமுக மாவட்ட செயலாளர்களை கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலையில்...
பல்கலைக்கழக துணைவேந்தர்களை போலீஸார் மிரட்டியதால்தான், அவர்கள் துணைவேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவனில் நேற்று தொடங்கிய துணைவேந்தர்கள் மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கிவைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
தமிழகத்தில் கல்வித்தரம் கவலை அளிக்கிறது. மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்கள் முனைவர் பட்டம்...
தாய் மொழியில் மருத்துவம், பொறியியல், உயர்கல்வி படிக்கலாம்: குடியரசு துணைத் தலைவர் பெருமிதம்
admin - 0
தேசிய கல்விக் கொள்கை மூலம் தாய்மொழியில் மருத்துவம், பொறியியல் பயிலலாம் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 4-வது ஆண்டாக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. ஊட்டி ராஜ்பவனில் நடந்த மாநாட்டுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆர்.கிரிலோஸ்குமார் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கிவைத்து குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது:
பயங்கரவாதம் என்பது ஒற்றுமையாக கையாளப்பட வேண்டிய,...
இளம் மருத்துவர்களுக்கு அறநெறி, பரிவு அவசியம்: ராணுவ மருத்துவ சேவைகள் டைரக்டர் ஜெனரல் ஆர்த்தி சரீன் அறிவுரை
admin - 0
போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 39-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. ராணுவ மருத்துவ சேவைகள் துறையின் டைரக்டர் ஜெனரல் வைஸ் அட்மிரல் ஆர்த்தி சரீன் சிறப்பாக தேறிய 29 மாணவர்களுக்கு 40 தங்க பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் மாணவி வி.சஞ்சனா 5 தங்கப் பதக்கங்களை பெற்றார்.
பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் மருத்துவம், பொறியியல் மற்றும் மேலாண்மை துறைகளில் 637 முனைவர், முதுநிலை, இளநிலை மாணவ,...
காவிரி வழித்தடங்கள், கால்வாய்கள், வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மே மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து நன்னிலம் எம்எல்ஏ ஆர்.காமராஜ் (அதிமுக) பேசும்போது, ‘‘நீர்நிலைகள் மற்றும் அதன் வழித்தடங்களில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதத்துக்குள் தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது அவசியம்.
இந்த ஆண்டு...
ஆளுநருக்கு எதிரான வழக்கில் திறம்பட வாதாடிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் நாளை தேநீர் விருந்து
admin - 0
ஆளுநருக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை பெற்றுத்தந்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை பாராட்டு விழா நடைபெறும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது சட்டவிரோதமானது. அந்த சட்ட மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம்...
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனாக கே.சாந்தாராமன் நியமனம்: 34 ஆண்டுகள் அனுபவமிக்கவர்
admin - 0
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீனாக கே.சாந்தாராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையாக சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை திகழ்கிறது. சென்னை மருத்துவக் கல்லூரியுடன் (எம்எம்சி) இணைந்துள்ள இம்மருத்துவமனையில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன.
மொத்தமுள்ள 42 துறைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தினமும் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை...
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கும், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கும் நேற்று மாலை 5 மணியளவில் இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
தகவலறிந்த உடன் வெடிகுண்டுகளைக் கண்டறிந்து அகற்றும் பிரிவினர், பழனிசாமி வீட்டுக்கு விரைந்து சென்று, சோதனை செய்தனர். மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் மூலம் அங்கு பல மணி...










