தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்வு: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
admin - 0
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுசெய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கான விபத்து மரண உதவித்தொகை ரூ.8 லட்சமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சி.வி.கணேசன் பதிலளித்து பேசியதாவது: தமிழகம் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் மாநிலமாகும். அதன்படி மொத்தம் 49 நிறுவனங்களில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள்...
சட்ட போராட்டத்தை தொடர்ந்தால் நீட் விலக்கு பெறலாம்: அனைத்து கட்சி கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
admin - 0
சட்ட போராட்டத்தை தொய்வின்றி தொடர்ந்தால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்று, நீட் தேர்வு தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்தார்.
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில், முதல்வர் பேசியதாவது: நுழைவுத் தேர்வு என்பது ஏழை...
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் கோவி.செழியன் தகவல்
admin - 0
திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 32 கலைக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோ.வி.செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது அந்தியூர் தொகுதி எம்எல்ஏ ஏ.ஜி.வெங்கடாசலம் பேசும்போது, அந்தியூரில் கலைக் கல்லூரி தொடங்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அளித்த பதில்:
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் 2022-23 கல்வியாண்டு முதல் புதிய அரசு கலை மற்றும் அறிவியல்...
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நாகையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அகில இந்திய விவசாயிகள் சங்கமாநாடு வரும் 15, 16, 17-ம் தேதிகளில் நாகையில் நடைபெற உள்ளது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, தமிழக அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
பாஜகவின் நிர்பந்தம் காரணமாகவே தமிழக அரசுக்கு எதிராக அதிமுக...
நவீன வசதிகளுடன் தேவநேயப்பாவாணர் அரங்கம் புதுப்பிப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்
admin - 0
சென்னையில் ரூ.1.32 கோடியில் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட தேவநேயப்பாவாணர் அரங்கத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள மாவட்ட நூலக ஆணைக்குழு கட்டிடத்தின் முதல் தளத்தில் தேவநேயப் பாவாணர் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கம் ரூ.1.32 கோடியில் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதி, 280 இருக்கைகள், லைவ் கேமரா உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய ஒலி, ஒளி அமைப்புகள் மற்றும் உணவுக்...
தமிழகத்தில் சிறுதொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்
admin - 0
சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் குறு சிறு நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு...
சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், பொன்னேரி - கவரைப்பேட்டை இடையே பொறியியல் பணி நடக்க உள்ளதால், ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் 20 மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
அதன் விவரம்: ஏப்ரல் 10, 12-ம் தேதிகளில் சென்னை சென்ட்ரல் - சூலூர்பேட்டை காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05 மணி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அதேபோல, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி...
சென்னையில் முதல்முறையாக அமைகிறது மாற்று திறனாளி வீரர்களுக்காக விளையாட்டு விடுதி: உதயநிதி ஸ்டாலின் தகவல்
admin - 0
சென்னையில் முதல்முறையாக மாற்றுத் திறனாளி வீரர்களுக்காக விளையாட்டு விடுதி அமைக்கப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் டெல்லியில் நடைபெற்ற கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 62 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.1.11 கோடி மதிப்பிலான உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா, நேரு உள் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்குத் தலைமை தாங்கிய துணை முதல்வர்...
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு: மத்திய அரசு தேவைப்பட்டால் முழு விளக்கம் கேட்கும் – ராம ஸ்ரீனிவாசன் தகவல்
admin - 0
ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக, தேவைப்பட்டால் மத்திய அரசு முழு விளக்கம் கேட்கும் என்று பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் கூறினார்.
ஒட்டன்சத்திரத்தில் பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட அலுவலகத்தை மாநிலப் பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்களின் கோபத்தை, தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து சரிசெய்து விடலாம் என்ற திமுகவின் அணுகுமுறை 2026...
மகாவீர் ஜெயந்தி வரும் 10-ம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சென்னை மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள் மற்றும் தமிழ்நாடு மதுபானம் விதிகளின்கீழ் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதை சார்ந்த பார்கள், உரிமம் பெற்ற கிளப் பார்கள், ஓட்டல் பார்கள், மதுபான விற்பனையகங்கள், மதுபானக் கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.
மதுபானம் விற்பனை செய்யக் கூடாது. மீறி விற்றால் கடுமையான...










