தவெக தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்துக்கு வந்த வடமாநில இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். சேலம் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் பகுதியில் உள்ள தாள முத்து நடராஜன் மைதானத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்த, வடமாநில இளைஞர் சிராஜ் (37) வந்திருந்தார். அவர் கடந்த 20 ஆண்டு களாக மனைவி, மகன், மகளுடன் சேலத்தில்...
கொலை வழக்கில் 14 பேரை விடுவித்த கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து: மீண்டும் தண்டனை விதித்த ஐகோர்ட்
admin - 0
15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் 14 பேரை விடுதலை செய்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம், தற்போது உயிருடன் உள்ள 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்து உத்தரவிட்டுள்ளது.
திருவான்மியூர் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்த ரவி என்பவரைக் கொலை செய்த வழக்கில் தொடர்புடைய சின்னையா என்ற ஏழுமலையை ஒரு கும்பல் கடந்த 2010 ஜூன் 14 அன்று அவரது வீட்டின் முன்பாக வெட்டி படுகொலை...
லஞ்சப் பணம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர். சென்னை காவல் துறையில் உள்ள பாலியல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராஜலட்சுமி.
இவர் குடும்பத்தோடு சென்னை திருமங்கலம், வெல்கம் காலனியில் வசித்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் இவரது வீட்டுக்கு லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸார் சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 4 மணி நேர சோதனைக்குப் பிறகு...
சரும பொலிவு சிகிச்சைகளை மருத்துவர் அல்லாதோர் செய்தால் நடவடிக்கை: மருத்துவ கவுன்சில் எச்சரிக்கை
admin - 0
அண்ணா நகர் பகுதியில் மிஸ்டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்தது. அங்கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்சைகள் மேற்கொள்வது கண்டறியப்பட்டதால், 3 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த சிகிச்சை மையத்துக்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
படித்த இளைஞர்களும், பெண்களுமே இத்தகைய மோசடிகளால் அதிகம் பாதிக்கப்படுவதால், தேசிய மருத்துவ ஆணையத்தின் (என்எம்சி) வழிகாட்டுதல்களை மேற்கோள் காட்டி மாநில மருத்துவ...
பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டம், `தாய்மை செயலி' திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் ரூ.8.07 கோடியில் பச்சிளம் குழந்தை பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தாய்மார்களுக்கு பெட்டகத்தை வழங்கிய அமைச்சர், தாய் மற்றும் சேய் நலனை மேம்படுத்தும் நோக்கில், பேறுகால மற்றும் குழந்தை...
“தவெகவுக்கு பெருகும் மகளிர் ஆதரவே திமுக ரூ.2000 கோடைகால சிறப்புத் தொகை வழங்கக் காரணம்” – விஜய்
admin - 0
“கோடைக் காலச் சிறப்புத் தொகை ரூ.2000 வழங்க, ஒட்டுமொத்த மகளிரின் விசில் சின்னத்துக்கான பேராதரவு அலையைக் கண்டு உண்டான அச்சம் மட்டுமே. திமுகவை வலிய நல்லது செய்ய வைக்கும் வலிமையான அரசியல் பெருவிசையும் நாம்தான்.” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் மகளிர் உரிமைத் தொகை, குறிப்பாக இன்று 13-ம் தேதி வரவு...
தேர்தல் நேரத்தில் ரூ.5000 வரவு வைக்கும் திமுகவின் ‘பேட்ச் ஒர்க்’ வேலையை மகளிர் நம்பமாட்டார்கள்: பழனிசாமி
admin - 0
“சிறுமி முதல் மூதாட்டி வரை எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை சீர்குலைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்து பணம் வரவு வைக்கும் இந்த ‘Patchwork’ வேலையை தமிழ்நாட்டுப் பெண்கள் நம்பி விடுவார்களா என்ன?” என மகளிர் உரிமைத் தொகையோடு கோடைக்கால சிறப்பு நிதியாக ரூ.2000 சேர்த்து மொத்தம் ரூ.5000 வரவு வைக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல்...
டிஎன்பிஎஸ்சி தேர்வு ரத்து விவகாரத்தில் எதிர்குரல் கொடுக்காமல், கூட்டணி கட்சிகள் திமுகவுக்கு தாலி கட்டிய மனைவி போல் ஆகிவிட்டன என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
‘விடியா ஆட்சி, உங்கள் வீட்டு பில்லே சாட்சி’ என்ற தலைப்பில், அதிமுக சார்பில் பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. இது தொடர்பான செயலி மூலம் வீடுகள்தோறும் கணக்கெடுக்கும் பணியை, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்...
“குலவிளக்கு திட்டம் மூலம் மகளிருக்கு ரூ.2000 தருவோம் என அதிமுக தந்த தேர்தல் வாக்குறுதியால், திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் மகளிருக்கு ரூ.5000 கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என திமுக நினைக்கிறது” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5,000 இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பிப்ரவரி மாதத்துக்கான ரூ.1,000 உரிமைத்தொகையுடன், மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கு...
“புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக்கணிக்க தயார்” – பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
admin - 0
புதுவை சட்டப்பேரவையில் நேற்று, அரசின் கூடுதல் செலவினங்களுக்கான விவாதம் நேற்று நடந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சிவா குறுக்கிட்டு, “புதுவை எங்கும் போராட்டம் நடக்கிறது. ஒப்பந்த ஆசிரியர்கள், தற்காலிக பொதுப்பணி ஊழியர்கள், தேசிய சுகாதார இயக்க ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்துகின்றனர். இந்தப் போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வரவில்லை.
‘இரட்டை இன்ஜின்’ அரசு என்று கூறினீர்கள். தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. இலவசங்களை மட்டும் மக்களுக்கு அளித்துள்ளீர்கள்....








