திமுக-வில் மாவட்ட வாரியாக உதயநிதி ஆதரவாளர்களின் கை மெல்ல மெல்ல ஓங்கி வருவதால் சீனியர்கள் எல்லாம் ஜெர்க் ஆகி வருகிறார்கள். அந்த வகையில், ஈரோடு மாவட்ட திமுக-வின் அதிகார மையாக இருந்து வரும் அமைச்சர் முத்துசாமியின் ஆதரவாளர்களையும் இந்த அச்சம் சூழ்ந்துள்ளது.
ஈரோடு முத்துசாமிக்கு 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட திமுக வாய்ப்பளித்தது. இருமுறையும் தோற்றுப்போன முத்துசாமி, 2021 தேர்தலில், விட்ட இடத்தைப் பிடித்து அமைச்சரவையிலும் அங்கமானார். அதன்...
தேர்தலில் நீங்கள் தனித்து நில்லுங்கள் பார்ப்போம்: பேரவையில் திமுகவினரை பார்த்து செல்லூர் ராஜூ சவால்
admin - 0
கடந்த 2016 தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றது அதிமுக. நீங்கள் நில்லுங்கள் பார்ப்போம் என்று சட்டப்பேரவையில் முனனாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திமுகவினரைப் பார்த்து கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடங்கி வைத்து அதிமுக உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ பேசியதாவது: பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குறிக்கோளையும், கோட்பாட்டையும் நிறைவேற்றுவதாக இந்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. அப்படி ஒன்று கூட என் கண்ணுக்கு தெரியவில்லை. கலைஞர்...
தமிழகத்தில் மார்ச் 22-ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையத்தின் இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மார்ச்...
அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டாகியும் காற்றாலை மின்நிலையங்கள் தொடங்கப்படவில்லை: தொழில் துறையினர் அதிருப்தி
admin - 0
‘அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகி 2 ஆண்டுகளாகியும், இதுவரை தொடங்கப்படவில்லை’ என தொழில் துறையினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10,900 மெகாவாட் திறனில் காற்றாலை மின்நிலையங்கள் உள்ளன. அதில், 9,150 மெகாவாட் தமிழக மின்வாரிய மின்வழித் தடத்தில் இணைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள, 1,750 மெகாவாட் மத்திய மின்தொடரமைப்பு கழகத்தின் வழிடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு மொத்த மின்னுற்பத்தியில் 50 சதவீதத்தை...
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் கைது: வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
admin - 0
நெடுந்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் ராமேசுவரம் மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்குச் சென்றனர். கென்னடி என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு அருகே சிறைபிடித்தனர். எல்லை தாண்டி வந்து...
தமிழ்நாடு விவசாயிகள் - தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழக கட்டிடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநில செயற் குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் பொன்.குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் எஸ்.ஜெகதீசன், ஜெகமுருகன், வி.சுப்பராயலு, மாநிலப் பொருளாளர் ஆர்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய முயற்சிக்கும் மத்திய அரசின் செயலால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின்...
ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தர்ம வைத்திய சாலைக்கு வயது நூறு: மார்ச் 22-ம் தேதி நூற்றாண்டு விழா
admin - 0
சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் முக்கிய அங்கமான தர்ம வைத்திய சாலையின் நூற்றாண்டு விழா மார்ச் 22-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடம், 1897-ல் சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலால் உருவானது. இம் மடத்தின் முக்கியமான சேவைகளுள் ஒன்றான தர்ம வைத்தியசாலை, 1925-ம் ஆண்டு டாக்டர் பி.ராகவேந்திர ராவால் தொடங்கப்பட்டது. நோயாளிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவை வழங்குவதே இதன் நோக்கம்.
இந்த மருந்தகத்தில் எல்லா நோயாளிகளுக்கும் ஒரு ரூபாயில் மருத்துவ...
தொகுதி மறுவரையறை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் 3 மாநில முதல்வர்கள் பங்கேற்பதாக திமுக மருத்துவர் அணி செயலாளரும் எம்எல்ஏவுமான நா.எழிலன் தெரிவித்தார்.
சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தொகுதி மறுசீரமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் சென்னையில் மார்ச் 22-ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், கேரளா முதல்வர் பினராயி விஜயன், கோவிந்த், பினாய் விஷ்வம், கும்பகடி சுதாகரன், கேரள காங்கிரஸ் பி.ஜே.ஜோசப், மணி, எம்.கே.பிரேம சந்திரன்,...
மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் இன்று ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
இது தொடர்பாக தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது: 2013-ம் ஆண்டுக்குப் பிறகு ஆட்டோவுக்கான மீட்டர் கட்டணம் மாற்றியமைக்கப்படவில்லை. இது தொடர்பான கோப்பு முதல்வர் மேஜையில் இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். வாடகை வாகனங்களுக்கான கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டவிரோதமாக 1.8 கி.மீ.க்கு ரூ.76 வசூலிக்கின்றன.
அத்தகைய நிறுவனங்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. ரூ.100-க்கு ரூ.30 வரை...
அமைச்சர் பொன்முடியைப் பின்பற்றி, அதிமுக முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகமும் 2026 தேர்தலில் பாதுகாப்பான தொகுதிக்கு இடம் மாறுகிறார் - தற்போது விழுப்புரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் இதுதான். திக பேச்சாளராக இருந்த பேராசிரியர் க.தெய்வசிகாமணி என்கிற பொன்முடியை உட்கட்சி புகைச்சலை சமாளிப்பதற்காக 1989-ல் விழுப்புரம் தொகுதியில் நிறுத்தியது திமுக தலைமை.
அந்தத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரான அப்துல் லத்தீபை சுமார் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்...










