சென்னையில் இயக்கப்படும் ஏசி பேருந்துகளில் பயணிப்பதற்கான ரூ.2 ஆயிரம் பயண அட்டையை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று அறிமுகம் செய்தார்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தின் கீழ் 50 ஏசி பேருந்துகள் உட்பட 3,056 பேருந்துகள் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படுகின்றன. இவற்றில் ஏசி பேருந்துகள் தவிர்த்து இதர பேருந்துகளில் பயணிக்கும் வகையில் ரூ.320 முதல் ரூ.1000 விலையிலான பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.
ஏசி பேருந்துகளிலும் பயணிக்கும் வகையில் பயண அட்டையை...
அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் இல்லை என்று தலைமைச் செயலர் நா.முருகானந்தம் எச்சரித்துள்ளார். இதையடுத்து, அடுத்த கட்ட போராட்டங்களை அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்து வருகின்றன.
பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய முரண்பாடுகளை களைவது, அரசு துறைகளில் காலியிடங்களை நிரப்புவது, மீண்டும் ஈட்டிய விடுப்பு பலன் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்து நடத்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் பழைய...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மழைநீர் வடிகால் துறைக்கு ரூ.1032 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி நிலைக்குழு தலைவர் (வரி விதிப்பு மற்றும் நிதி) சர்பஜெயா தாஸ் மாநகராட்சி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவரது பட்ஜெட் உரையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் வரும்...
சென்னை மாநகரில் பெண்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யும் வகையில் ‘இளஞ் சிவப்பு ஆட்டோக்கள்’ (பிங்க் ஆட்டோக்கள்) வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக 100 பயனாளிகளுக்கு, கடந்த 8-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆட்டோக்களை வழங்கினார்.
2-ம் கட்டமாக தற்போது விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட ஓட்டுநர் உரிமம் பெற்ற, சென்னையை சேர்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது...
ஆட்டோ தொழிலாளர்கள் பிரச்சினையை தீர்க்காவிட்டால் தலைமை செயலகத்தை முற்றுகையிடுவோம்: சிஐடியு கூட்டமைப்பு சங்கங்கள்
admin - 0
ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடுவோம் என சிஐடியு கூட்டமைப்பு சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
மீட்டர் கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி, எச்எம்எஸ், தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்சி ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் மூன்று அணிகளாக சென்னையில் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன.
சென்னை அண்ணாசாலை தாராப்பூர் டவர் அருகே நடைபெற்ற கண்டன போராட்டத்தில்...
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்பட உள்ள ஏசி மின்சார ரயிலுக்கு 12 நிறுத்தங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் இயக்க வேண்டும் என்று பல தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு ரயில்வேக்காக 2 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து வழங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டது.
இதன்பேரில், முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டு,...
அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் 6 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்
admin - 0
கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை முதல் 26-ம் தேதி வரை சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், நாளை (மார்ச் 21) முதல் 26-ம் தேதி வரை அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் குடிநீர்...
போக்குவரத்து நெரிசல் காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையர் அருண் உத்தரவு
admin - 0
போக்குவரத்து நெரிசல் காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த காவல் ஆணையர் அருண் தடை விதித்துள்ளார். சென்னையில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த சைதாப்பேட்டை பனகல் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட சில இடங்களில் போலீஸார் அனுமதி அளித்து வருகின்றனர்.
அதன்படி, சென்னையின் மையப் பகுதியான நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டத்தில், அடிக்கடி போராட்டம் நடைபெறும். இதனால்...
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்க கோரி போராட்டம்
admin - 0
அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்களை நியமிக்கக்கோரி அரசு மருத்துவர்கள் சென்னையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு சார்பில் தர்ணா போராட்டம் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்தில் நேற்று நடைபெற்றது.
சட்டப்போராட்டக் குழுவின் தலைவர் மருத்துவர்...
‘எங்களுக்கு பெண் கொடுக்க மறுக்கிறார்கள்..!’ – அரசை நம்பி பி.எட். முடித்த கணினி அறிவியல் பட்டதாரிகளின் பரிதாப நிலை
admin - 0
“அரசு கொடுத்த வாக்குறுதியை நம்பி பி.எட் படித்த நாங்கள் கண்டுகொள்ள ஆளில்லாமல் கண்ணீராகி நிற்கிறோம்” என வெதும்புகிறார்கள் கணினி அறிவியல் படித்த பட்டதாரி ஆசிரியர்கள். மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் பயிற்றுவிப்பதற்காக ஐசிடி (இன்ஃபர்மேஷன் கம்யூனிகேஷன் டெக்னாலஜி) என்ற பாடத்திட்டத்தை அமல்படுத்தி, கம்பியூட்டர் லேப் அமைக்கவும், பயிற்றுநர்களை நியமிக்கவும் நிதி ஒதுக்கி வருகிறது.
அதன்படி தமிழகத்துக்கு...










