Google search engine
தெலங்​கா​னா​ மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலை​யில் உள்ள ரியாக்​டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்​தில் சம்பவ இடத்​தில் 5 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். படு​கா​யம் அடைந்த 60-க்​கும் மேற்​பட்​டோர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் சேர்க்​கப்​பட்​டனர். இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயி​ரிழந்​தனர். சிகாச்சி ஆலை​யின் துணை தலை​வர் எல்​.எஸ் கோஹன் உட்பட இது​வரை 36 பேர் உயி​ரிழந்துள்​ளனர். தெலங்​கானா மாநில முதல்​வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து...
பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: காங்​கிரஸ், ஊழல் மற்​றும் அடிமைத்​தனம். இந்த வகைப்​படுத்​தப்​ப​டாத ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க புல​னாய்வு அமைப்​பால் (சிஐஏ) வெளி​யிடப்​பட்​டது. அதில், மறைந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் எச்​.கே.எல்​.பகத் தலை​மையி​லான 150-க்​கும் மேற்​பட்ட எம்​.பி.க்​கள், ரஷ்​யா​வின் உளவாளி​யாக செயல்பட அந்த நாட்​டிட​மிருந்து நிதி பெற்​ற​தாகக் கூறப்​பட்​டுள்​ளது. காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது, ரஷ்ய புல​னாய்வு அமைப்​பைச் சேர்ந்த 1,100...
குஜ​ராத் மாநிலம் கண்ட்லா துறை​முகத்​தில் இருந்து ஓமன் நாட்​டின் ஷினாஸ் துறை​முகம் நோக்கி 'எம்டி யி செங் 6’ என்ற எண்​ணெய் கப்​பல் சென்று கொண்​டிருந்​தது. பலாவு நாட்டு கொடி​யுடன் சென்ற இந்த கப்​பலில் இந்​திய மாலுமிகள் 14 பேர் இருந்​தனர். இந்த கப்​பலின் இன்​ஜின் அறை​யில் திடீரென தீப்​பற்​றியது. இதுகுறித்து ஓமன் வளை​கு​டா​வில் இருந்த, இந்​திய கடற்​படை​யின் ஐஎன்​எஸ் தபார் போர்க் கப்​பலுக்கு நேற்று முன்​தினம் தகவல் தெரிவிக்​கப்​பட்​டு,...
இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்​கு​கள் (எஸ்​டிஜி) - நேஷனல் இண்​டிகேட்​டர் பிரேம்​வொர்க் முன்​னேற்ற அறிக்கை 2025’ என்​பது இந்​தி​யா​வின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதா​ரங்​களை வழங்​கு​கிறது. புள்​ளி​யியல் தினத்தை முன்​னிட்டு வெளி​யிடப்பட்​டுள்ள இந்த அறிக்​கையில், வறுமை​யில் வாடும் அனைத்து வயது ஆண்​கள், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் விகிதம்...
​விசா மறுக்​கப்​பட்​ட​தால் சட்​ட​விரோத​மாக எல்லை கடந்து இந்​தியா வந்த, பாகிஸ்​தான் தம்​ப​தி​தார் பாலை​வனத்​தில் பரி​தாப​மாக உயி​ரிழந்த சம்​பவம் நடந்​துள்​ளது. பாகிஸ்​தானின் சிந்து மாகாணம் கோட்கி மாவட்​டம் மிர்​பூர் மத்​தல்லோ பகு​தி​யைச் சேர்ந்​தவர் ரவிக்​கு​மார் (17). இவரது மனைவி சாந்​தி​பாய் (15). இவர்​களுக்கு கடந்த 4 மாதங்​களுக்கு முன்பு திரு​மணம் நடை​பெற்​றது. இந்​நிலை​யில், பாகிஸ்​தானில் ரவிக்​கு​மாருக்கு சரி​யான வேலை இல்லை. இந்​தி​யா​வுக்​குச் சென்​றால் நல்ல வேலை கிடைத்து மனை​வி​யுடன் சுக​மாக வாழலாம்...
பிரபல பாலிவுட் நடிகை ஷெபாலி ஜரி​வாலா (42) கடந்த வெள்​ளிக்​கிழமை இரவு மும்​பை​யில் உள்ள தனது வீட்​டில் இறந்து கிடந்​தார். அவர் மாரடைப்​பால் இறந்​த​தாக குடும்​பத்​தினர் தெரிவிக்​கின்​றனர். எனினும் இறப்​புக்​கான காரணம் இன்​னும் உறுதி செய்​யப்​பட​வில்​லை. இதுகுறித்து பிரபல தனி​யார் மருத்​து​வ​மனை ஒன்​றின் இதயநோய் மருத்​து​வர் திரேந்​திர சிங்​கானியா கூறிய​தாவது: மாரடைப்பு அபா​யத்​திற்கு ஸ்டீ​ராய்​டு​கள், தூக்​கமின்மை மற்​றும் ஹார்​மோன் சிகிச்​சைகள் (குறிப்​பாக பெண்​களுக்​கு) காரணங்​களாக உள்ளன. பிரபல​மாக இருந்​தா​லும் சரி,...
கர்​நாடக தலைநகர் பெங்​களூருவைச் சேர்ந்த யூ டியூபர் பிரி​யம் சரஸ்​வத். இவர் உள்​நாடு மற்​றும் வெளி​நாடு​களில் சுற்​றுப் பயணம் செய்​து, புது​மை​யான வீடு​களை வீடியோ எடுத்து சமூக வலை​தளங்​களில் பதி​விட்டு வரு​கிறார். இந்த வரிசை​யில் மத்​திய பிரதேசம் இந்​தூரில் 24 கேரட் தங்​கத்​தால் அலங்​கரிக்​கப்​பட்ட வீடியோவை பிரி​யம் சரஸ்​வத் நேற்று முன்​தினம் தனது சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்​டார். இந்த வீடியோ அனைத்து சமூக வலை​தளங்​களி​லும் வைரலாக பரவி வரு​கிறது. யூ...
மதம் மாற்றி தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​படுத்த உத்​தரபிரதேசத்​திலிருந்து கடத்தி வரப்​பட்ட 15 வயது சிறுமியை போலீ​ஸார் மீட்​டுள்​ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்​தீப் சிங் குணாவத் கூறிய​தாவது: உத்​தரபிரதேச மாநிலம் பிர​யாக்​ராஜ் மாவட்​டம் பூல்​பூர் பகு​தி​யைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒரு​வரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்​சனா பானு என்​பவர் கேரளாவுக்கு கடத்​திச் சென்​றுள்​ளார். மதமாற்​றம் செய்​ய​வும், தீவிர​வாதச் செயல்​களில் ஈடு​பட​வும்...
ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது. இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-வது கட்​டாய மொழி பாட​மாக இந்தி கற்​பிக்​கப்​படும் என்று...
தெலங்கானா மாநிலத்தில் ஒரு பெண் தனது காரை ரயில் தண்டவாளத்தின் மீது ஓட்டியதால், அந்த மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரம் வரை ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லக்னோவை சேர்ந்தவர் ரவிகா சோனி (33). ஹைதரபாத்தில் ஒரு சாஃப்ட் வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வைரல் செய்வது வழக்கம். சமீபத்தில் இவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி,...