இந்திய ராணுவத்துக்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுக்கப்பட்ட 6 ஹெலிகாப்டர்களில், முதல் 3 ஹெலிகாப்டர்கள் இம்மாதம் விநியோகிக்கப்பட உள்ளன.
அமெரிக்காவின் போயிங் நிறுவனம் அபாச்சி கன்ஷிப்ஸ் ரக ஹெலிகாப்டர்களை தயாரிக்கிறது. இதில் இயந்திர துப்பாக்கி, வானிலிருந்து தரை இலக்குகளை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் குண்டுகள் பொருத்தப்பட்டிருக்கும். இது ‘வானில் இயங்கும் டேங்க்’ என அழைக்கப்படுகிறது. இந்திய விமானப் படைக்கு 22 அபாச்சி ஹெலிகாப்டர்கள்...
உ.பி.யில் அரசியலாகும் காவடி யாத்திரை: தாபா உரிமையாளர்களை சோதனை செய்ய களம் இறங்கிய 30 இந்து அமைப்புகள்
admin - 0
உத்தர பிரதேச மாநிலத்தில் ஸ்ரவண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் பாதைகளில் உணவகம் நடத்தும் உரிமையாளர் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை அமல்படுத்துகின்றனரா என்று பிரபல துறவி யோகா குரு யஷ்வீர் மஹராஜ் தனது 5,000 சீடர்களுடன் சோதனை நடத்தி வருகிறார். அதன்படி உணவக பணியாளர்களின் ஆடைகளை அவிழ்த்து சோதித்தது சர்ச்சையானது. எனினும்,...
காங்கிரஸ் கட்சியின் ஊடக மற்றும் விளம்பரத் துறை தலைவர் பவன் கேரா கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தீவிர சிறப்பு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இது, பிஹார் வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதற்கும் அவர்களின் அடிப்படை வாக்களிக்கும் உரிமையை மறுப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியாகும். இதனால், 2 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகி உள்ளது.
அதிகாரம் என்பது நிலையற்றது. அது நாளை யார் கையில் வேண்டுமானாலும் வரலாம். நீங்கள் ஏன் அவர்களுக்கு...
பாஜக நிர்வாகி கொலை வழக்கில் தலைமறைவான பிஎஃப்ஐ நிர்வாகி விமான நிலையத்தில் கைது: என்ஐஏ நடவடிக்கை
admin - 0
கர்நாடகாவில் பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல் ரஹ்மானை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் கேரளாவில் உள்ள கண்ணூர் விமான நிலையத்தில் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் தக்ஷின கன்னடா மாவட்ட பாஜக இளைஞர் அணி செயலாளர் பிரவீன் நெட்டூரு (28) கடந்த 2022-ம் ஆண்டு மர்ம நபர்களால் அடித்துக் கொல்லப்பட்டார். தேசிய புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து, 14 பேரை கைது...
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான், சீனா, துருக்கியை எதிர்கொண்டோம்: ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தகவல்
admin - 0
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 நாடுகளை எதிர்கொண்டோம் என்று இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த ஃபிக்கி நிகழ்ச்சியில் இந்திய ராணுவ துணை தளபதி ராகுல் ஆர். சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசியதாவது:
பஹல்காம் தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத...
பிஹாரின் பாட்னா பல்கலைக்கழகத்தின் கீழ் மகத் மகளிர் கல்லூரி, பாட்னா கல்லூரி, பாட்னா அறிவியல் கல்லூரி, வனிஜா மகாவித்யாலயா, பாட்னா சட்டக் கல்லூரி ஆகிய 5 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக இருந்தன.
புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்தன. குறிப்பாக அரசியல் ரீதியாக அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து குலுக்கல் முறையில் புதிய முதல்வர்களை தேர்வு செய்ய ஆளுநர் மாளிகை...
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் முன்னாள் மாணவர் மற்றும் 2 சீனியர் மாணவர்களால் 24 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் 3 பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் நீதிபதி சவுமன் சென் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரமாண...
உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் ஸ்வரண மாதத்தை முன்னிட்டு காவடி யாத்திரை தொடங்க உள்ளது. யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள உணவகங்களில் கடை உரிமையாளர் பெயர் உட்பட முழு விவரங்களை அறிவிப்பு பலகைகளில் எழுதி வைக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்கள் 5,000 பேர் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒரு குழுவினர் முசாபர்நகரின் ‘பண்டிட்ஜி வைஷ்னோவ்...
இமாச்சலபிரதேசம், மண்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை 10 மேகவெடிப்புகள், 3 திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கோஹர், துனாக், கர்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில் மேலும் இருவரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டதை தொடர்ந்து உயிரிழப்பு 13 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை தேடும் பணி நடைபெறுகிறது. இந்தப் பேரிடரில் 162 கால்நடைகள் இறந்தன. மேலும்...
கனமழை காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் சோன்பிரயாக் அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால், கேதார்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் சோன்பிரயாக் அருகேயுள்ள முங்காட்டியா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேதார்நாத் யாத்திரையை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கவுரிகுந்த் பகுதியிலிருந்து திரும்பிய சில பக்தர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சிக்கினர். அவர்களை மாநில பேரிடர் மீட்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டு...










