Google search engine
மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களில் பெட்​ரோல், டீசல் விலை​யில் உள்ள வேறு​பாடு​கள் குறித்த கேள்விக்​கு, மத்​திய இணை அமைச்​சர் சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் அளித்த பதில்: நாட்​டில் உள்ள சிறிய, பெரிய மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களை விட ஆந்​திர மாநிலத்​தில்தான் பெட்​ரோல், டீசல் விலை அதி​க​மாக உள்​ளது. அமராவ​தி​யில் ஒரு லிட்​டர் பெட்​ரோல் ரூ.109.74 க்கு விற்​பனை செய்​யப்​படு​கிறது. குறைந்​த​பட்​ச​மாக நாட்​டில் அந்​த​மான் - நிக்​கோ​பார் தீவு​களில் ஒரு...
வாக்​காளர் பட்​டியலில் உள்ள குறை​களை நீக்​கவே வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​த (எஸ்ஐஆர்) பணி நடை​பெறுகிறது என்று மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் ஜே.பி. நட்டா தெரி​வித்​தார். மாநிலங்​களவை​யில் நேற்று நடை​பெற்ற தேர்​தல் சீர்​திருத்​தம் தொடர்​பான விவாதத்​தில் கலந்​து​கொண்டு மத்​திய அமைச்​சர் நட்டா பேசி​யதாவது: வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் ​(எஸ்ஐஆர்) மூலம் வாக்​கு​களை திருட பாஜக முயற்​சிக்​கிறது என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் புகார் கூறுகின்​றன. தேர்​தல் ஆணை​யத்​தின் மீதான செயல்​பாடு​கள்...
நேபாள அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் தெரி​வித்​துள்​ள​தாவது: உயர் மதிப்​புள்ள இந்​திய கரன்​சிகளை கொண்டு செல்​வதற்​கான ஒரு தசாப்த கால தடை, முடிவுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது. தற்​போது தளர்த்​தப்​பட்​டுள்ள கட்​டுப்​பாடு​களின்​படி ஒரு நபர் அதி​கபட்​ச​மாக ரூ.25,000 மதிப்​புள்ள 200, 500 ரூபாய் இந்​திய நோட்​டு​களை வைத்​திருக்க முடி​யும். திங்​கள்​கிழமை நடை​பெற்ற அமைச்​சரவை கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டது. திருத்​தப்​பட்ட விதி​யின்​படி, நேபாள மற்​றும் இந்​திய குடிமக்​கள் இரு​வரும் உயர் மதிப்​புள்ள ரூபாய் நோட்​டு​களை இந்​தி​யா​விலிருந்து...
​மும்பையில் உள்ள பாந்த்ரா பகு​தி​யில் ரூ.14.4 கோடி செல​வில் ஏழு​மலை​யான் கோயில் கட்ட, திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு​வில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. திரு​மலை​யில் உள்ள அன்​னமைய்யா பவனில், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தான அறங்​காவலர் குழு கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. தேவஸ்​தான தலை​வர் பிஆர் நாயுடு தலை​மை​யில் நடை​பெற்ற இதில் பல்​வேறு தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்​டன. இதுகுறித்து அறங்​காவலர் பிஆர் நாயுடு மற்​றும் நிர்​வாக அதி​காரி அனில் குமார் சிங்​கால் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம்...
உத்தர பிரதேச மாநிலம் வாராணசி​யில் காசி விஸ்​வ​நாதர் உள்​ளிட்ட பல முக்​கிய​மானக் கோயில்​கள் உள்​ளன. இவற்​றில் பல்​வேறு பிரிவு​களின் துறவி​களுக்​கான மடங்​கள், தர்ம சத்​திரங்​களும் உள்​ளன. இவை அனைத்​துக்​கும் வாராணசி மாநக​ராட்சி வரி வசூலிக்​கிறது. வரி பாக்கி தொடர்​பாக மாநக​ராட்சி கால அவகாசத்​துடன் நோட்​டீஸ் அளித்​திருந்​தது. வரி செலுத்​தாதவர்​களுக்கு ஜப்தி அறி​விப்​பும் ஒரிரு நாட்​களுக்கு முன்​னர் வழங்​கப்​பட்​டது.இதற்கு துறவி​களும், மடங்​களின் தலை​வர்​களும் கடும் எதிர்ப்பு தெரி​வித்​துள்​ளனர். வாராணசி பாதாளபுரி மடத்​தின் தலை​வர்...
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது எக்ஸ் பக்கத்தில் நேற்று கூறியதாவது: மகாத்மா காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் பொட்டி ஸ்ரீராமுலு. உப்பு சத்யாகிரகப் போராட்டத்திலும், வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் அவர் தீவிரமாக பங்கேற்றார். அவரது நினைவு நாளில் அவருக்கு தலைவணங்கி நான் அஞ்சலி செலுத்துகிறேன். அதேபோல், சுதந்திரத்துக்குப் பின்னர் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகப் பாடுபட்டவர் சர்தார் வல்லபபாய் படேல். சுதந்திரத்துக்குப் பின்னர் மக்கள் அமைதியான வாழ்க்கை...
தலைமை தகவல் ஆணை​ய​ராக முன்​னாள் ஐஏஎஸ் அதி​காரி ராஜ்கு​மார் கோயல் நேற்று பதவி​யேற்​றார். தலைமை தகவல் ஆணை​ய​ராக இருந்த ஹீராலால் சமாரி​யா​வின் பதவிக் காலம் கடந்த செப்​டம்​பர் 13-ம் தேதி முடிவடைந்​தது. இதையடுத்து பிரதமர் நரேந்​திர மோடி, மத்திய உள்​துறை அமைச்சர் அமித் ஷா, மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு ஆலோ​சனை நடத்தியது. இ​தில் அந்​தப் பதவிக்கு ராஜ்கு​மார் கோயல் தேர்வு செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில்...
தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களை தொடங்க அனும​திக்​கு​மாறு சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசின் சார்​பில் தாக்​கல் செய்த மேல்​முறை​யீடு மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.​வி. நாகரத்​னா, ஆர்.மகாதேவன் அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. தமிழக அரசின் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் பி.வில்​சன் ஆஜராகி, ”ஜவஹர் நவோதயா பள்​ளி​களில் மும்​மொழிக் கொள்கை பின்பற்றபடு​கிறது. ஆனால் தமிழக அரசு இரு​மொழி கொள்கையை சட்​ட​மாக்​கி​யுள்​ளது” என வாதிட்டார். அப்​போது நீதிப​தி​கள்,...
கேரள மாநில அமைச்சர் வி.சிவன்குட்டி செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: ஏற்கெனவே நடைமுறையில் உள்ள 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து புதிதாக 4 சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதில் தொழிலாளர்களுக்கு எதிரான பல அம்சங்கள் உள்ளன. இந்த சட்டங்களைக் கண்டித்து வரும் 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் தொழிலாளர் மாநாட்டை கேரள அரசு நடத்தவுள்ளது. மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கவுள்ளார். மாநில அரசுகளின் கொள்கைகளுக்கு எதிராகவும், தொழிலாளர் நலனுக்கு...
பிஹார் மாநில அமைச்​ச​ராக உள்ள நிதின் நபின் (45), பாஜக​வின் தேசிய செயல் தலை​வ​ராக நேற்று முன்​தினம் நியமிக்​கப்​பட்​டார். இந்த தகவலை பாஜக தேசிய பொதுச் செய​லா​ளர் அருண் சிங் தெரி​வித்​திருந்​தார். இவர் ஜே.பி.நட்​டாவுக்கு அடுத்​த​படி​யாக தேசிய தலை​வ​ராக நியமிக்​கப்​படலாம் என கூறப்​படு​கிறது. இந்​நிலை​யில், நிதின் நபின் பாட்​னா​விலிருந்து நேற்று மதி​யம் டெல்லி இந்​தி​ரா​காந்தி சர்​வ​தேச விமான நிலை​யம் வந்​தார். அங்கு அவரை டெல்லி முதல்​வர் ரேகா குப்தா உள்​ளிட்ட கட்சி...