Google search engine
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்​சி​யில் நேற்று சட்​டப்​பேரவை நோக்கி பேரணி​யாக சென்ற மாணவ, மாண​வியர் மீது போலீஸார் தடியடி நடத்தி கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசினர். இதில் பலர் காயமடைந்​தனர். ஜார்க்​கண்ட் அரசு பணி​யாளர் தேர்​வாணைய முறை​கேடு தொடர்பாக கடந்த ஜூலை 25-ம் தேதி தலைநகர் ராஞ்​சி​யில் மாணவ, மாண​வியர் உண்​ணா​விரத போராட்​டத்தை தொடங்கினர். மாணவர் சங்​கத்​தின் மூத்த தலை​வர்​கள் தேவேந்​திர நாத் மஹதோ (33), ராகுல் கிராந்தி (40), ரூபேஷ் குமார்...
அ​சாமில் தொடர் வெள்​ளப்​பெருக்​கால் உயிரிழந்தவர்​களின் எண்​ணிக்கை 100 ஆக உயர்ந்​துள்ள நிலையில், 10 மாவட்​டங்​களைச் சேர்ந்த 1.37 லட்​சத்​துக்​கும் அதிகமான மக்​கள் கடுமை​யாகப் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். இது தொடர்​பாக அசாம் மாநில பேரிடர் மேலாண்​மைத் தகவல் மையம் ஓர் அறிக்கை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, கோலா​காட், சிவ​சாகர், ஹோஜாய், தர்​ராங், லக்​கீம்​பூர், ஜோர்​ஹாட், கார்பி ஆங்​லாங், சராடியோ, நகோன் மற்​றும் விஸ்​வ​நாத் ஆகிய 10 மாவட்​டங்​கள் வெள்​ளத்​தால் சூழப்​பட்​டுள்​ளன. இங்​குள்ள 28 வருவாய்...
நீட் வினாத்​தாள் கசிவுக்கு எதி​ராக போராடிய மாணவர்​கள் மீதான காவல் துறை நடவடிக்​கைக்கு மத்​திய அரசு பொறுப்​பேற்க வேண்​டுமென ராகுல் காந்தி கூறி​யுள்​ளார். ‘தி இந்​து’ ஆங்​கில நாளிதழில் அவர் எழு​தி​யுள்ள கட்​டுரை​யில் கூறி​யிருப்​ப​தாவது: டெல்லி ஜந்​தர் மந்​தரில் போராட்​டம் நடத்​தி​ய​போது மாணவர்​கள் மீது காவல் துறை ‘முட்​கள் பதிக்​கப்​பட்ட லத்தி​கள்’ மற்​றும் துகள் துப்​பாக்​கி​களை (பெல்​லட் கன்​ஸ்) பயன்படுத்​தி​யது. இதில் பல மாணவர் போராளி​களுக்கு எலும்பு முறி​வு, வெட்​டுக்​கா​யம் மற்​றும்...
 ராஜஸ்தானில் திருட்டிலிருந்து பாதுகாக்க ரூ.5 லட்சம் பணத்தை தனது வயலில் புதைத்து வைத்த விவசாயி, அந்த இடத்தை மறந்துவிட்டார். ஓராண்டுக்குப் பிறகு அந்தப் பணம் திரும்ப கிடைத்தபோது, கரையான்கள் அரித்திருந்ததால், அதைப் பயன்படுத்த முடியாமல் அவர் வேதனை அடைந்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், தனக்குச் சொந்தமான நிலத்தை சுமார் ஓராண்டுக்கு முன்பு விற்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த ரூ.5 லட்சம் பணத்தை வைத்து வீடு கட்ட அவர் திட்டமிட்டிருந்தார்....
கேரளாவின் எர்ணாகுளம் பகு​தி​யில் உள்ள தேவாலயத்துக்​காக இரு தரப்​பினர் கடும் மோதலில் ஈடு​பட்​டனர். இதுதொடர்​பாக பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்​ளது. கேரள மக்​கள் தொகை​யில் சுமார் 18.4 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் ஆவர். அந்த மாநிலத்​தில் பல்​வேறு கிறிஸ்தவ சபைகள் செயல்​படு​கின்​றன. இந்த சபைகளுக்கு இடையே அவ்வப்​போது மோதல்​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. கேரளா​வின் எர்ணாகுளம் மாவட்​டம், பிரமடத்​தில், செயின்ட் ஜான்ஸ் பெத்லேகம் தேவால​யம்...
டெல்லி ஐஐடி கல்வி நிறு​வனத்​தின் 57-வது பட்​டமளிப்பு விழா நேற்று நடை​பெற்​றது. இதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்று மாணவ, மாண​வியருக்கு பட்​டங்​களை வழங்​கி​னார். 3,000-க்​கும் மேற்​பட்​டோருக்கு இளநிலை பொறி​யியல் பட்​டங்​களும், 587 பேருக்கு பிஎச்டி பட்​டங்​களும் வழங்​கப்​பட்​டன. இவ்​விழா​வில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: அனைத்து துறை​களி​லும் சுய​சார்பை எட்ட இலக்கு நிர்​ண​யித்து உள்​ளோம். இந்த லட்​சி​யத்தை எட்ட இளம் தலை​முறை​யினர் உறு​துணை​யாக இருப்​பார்​கள் என்று நம்​பு​கிறேன். அவர்​கள் மீது...
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அமைந்துள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கடந்த 2024-ல் பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அம்மாநிலத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது நினைவு நாளையொட்டி கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் உள்ள சித்பூரில் மருத்துவ முகாம் ஒன்றை எளிய மக்களுக்காக இன்று ஏற்பாடு செய்துள்ளனர் மேற்குவங்க ஜூனியர் மருத்துவ சங்கத்தினர். கடந்த...
நாட்டின் 80-வது சுதந்திர தினம் ஆக.15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றி உரையாற்றுகிறார். அதற்காக சுமார் 20,000 பாதுகாப்புப் படையினருடன் தலைநகரில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை 15-ம் தேதி கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். அதை முன்னிட்டு டெல்லி செங்கோட்டை...
 திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் கார் மீது நேற்று கல்வீச்சு நடந்தது. மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், காஞ்சரபாரா நகரைச் சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் பிர்ஜு கியோட் என்பவர் போலீஸ் காவலில் உயிரிழந்தார். அவரது வீட்டுக்குக் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி நேற்று சென்றார். அப்போது அவரது காரை வழிமறித்து கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காலணிகள், சேறு வீசப்பட்டது, கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதுகுறித்து மம்தா...
கடந்த 4-ம் தேதி தாய்​லாந்​தின் புக்கேட் நகரில் இருந்து ஏர் இந்தியா விமானம் டெல்​லிக்கு புறப்​பட்​டது. இதில் 137 பயணிகள், விமானிகள் உட்பட 8 ஊழியர்கள் பயணம் செய்​தனர். நடு​வானில் விமானம் பறந்​த​போது திடீரென 300 அடிக்கு கீழே இறங்​கியது. இதனால் விமானம் குலுங்​கி, நிலை தடு​மாறியது. இதில் விமானத்​தில் இருந்த 13 பயணி​கள், 4 ஊழியர்​கள் காயமடைந்​தனர். இதில் தலைமை விமானி கஞ்சா போதை​யில் இருந்​தது உறுதி செய்​யப்​பட்​டிருப்​ப​தாகக்...