நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் 2 கட்டங்களாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், 3-வது கட்டமாக எஞ்சிய 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. இருப்பினும், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் தற்போதைக்கு எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாது என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
இதுகுறித்து...
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் தேர்தலுக்குப் பின்னர் மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. மேலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தின் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தி தீவைத்தனர் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரிணமூல்...
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் வழிபட அனுமதித்த தீர்ப்புக்கு எதிரான மறு ஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் பி.வி நாக ரத்தினா, எம் எம் சுந்தரேஷ், ஏ.அமானுல்லா, ஏ.ஜி. மசி, பி.பி. வர்லே, ஆர். மகாதேவன், ஜோய்மால்யா பக் ஷி ஆகியோரை கொண்ட 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
நேற்று நடைபெற்ற 16-வது நாள்...
வரும் ஜூன் 21-ம் தேதி இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
முன்னதாக, வினாத்தாள் கசிந்த விவகாரத்தின் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 3-ம் தேதி (மே.3) நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை...
எரிபொருள் சிக்கன கோரிக்கைக்கு முன்னுதாரணமான பிரதமர் மோடி – பாஜக முதல்வர்களின் வாகன எண்ணிக்கை குறைப்பு
admin - 0
அமெரிக்க – ஈரான் போர் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பிரதமர் மோடி கடந்த 10ம் தேதி முன்வைத்தார்.
அதன்பின், பிரதமர் மோடியே முன்னுதாரணமாக தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை 15-ல் இருந்து 4 ஆக குறைத்துள்ளார். மேலும் தனது பயணத்தில் மின்சார வாகனங்களை அதிகரிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதுபோல் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங்கும் பாதுகாப்பு வாகனங்களை...
மணிப்பூரில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், 3 சர்ச் தலைவர்கள் உயிரிழந்தனர். உடனடியாக தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டு மர்ம நபர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.
மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தைச் சேர்ந்த சர்ச் பாதிரியார்கள், சுராசந்த்பூர் மாவட்டம் லம்கா பகுதியில் ‘தடோவ் பேப்டிஸ்ட் அசோசியஷன்’ ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பின்னர் 2 வாகனங்களில் பாதிரியார்கள் மீண்டும் காங்போக்பிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அடையாளம்...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் மத மாற்றம் செய்ய முயன்றதாகவும் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அதன் ஊழியர் நிடா கானுக்கு முக்கிய பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த நிடா கான் கடந்த மே 7ம் தேதி சத்ரபதி சம்பாஜி நகரில் (அவுரங்காபாத்) கைது செய்யப்பட்டார். அவருக்கு ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்தவரும் சத்ரபதி சம்பாஜி நகர்...
ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடை செய்ய கோரி, மே 20-ம் தேதி நாடு தழுவிய அளவில் மருந்தகங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.
சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடக் கூடும் என்பதால் நாடு முழுவதும் மருந்து விநியோகம் பாதிக்கப்படும் என தெரிகிறது.
இது தொடர்பாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது: முறைப்படுத்தப்படாத ஆன்லைன் மருந்து விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்புக் குப் பெரும் அச்சுறுத்தல்...
கேரள முதல்வராக கே.சி.வேணுகோபாலை நியமித்தால், வயநாடு அமேதியாக மாறும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் வயநாடு தொகுதியில் ஒட்டப்பட்டுள்ளன.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. தேர்தல் முடிவு வெளியாகி 10 நாட்களாகியும் இன்னும் முதல்வரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடிக்கிறது. குறிப்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மூத்த தலைவர்களான வி.டி.சதீசன்,...
75-வது ஆண்டு நிறைவை ஒட்டி குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயில் குடமுழுக்கு விழாவில் மோடி பங்கேற்பு
admin - 0
குஜராத்தின் சோம்நாத் கோயில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார்.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல் உள்ளிட்டோரால் புதுப்பிக்கப்பட்டு கடந்த 1951-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை ஒட்டி சோம்நாத் கோயிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி...










