Google search engine
தமிழக இந்து அறநிலையத் துறைக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் இந்து அறநிலையத் துறை சட்டங்களை எதிர்த்து தயானந்த சரஸ்வதி சுவாமி, சுப்ரமணியன் சுவாமி உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை கடந்த ஆண்டு ஏப்ரலில் விசாரித்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாநில உயர் நீதிமன்றங்களை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில்...
உ.பி.யில் சாலைகளில் தொழுகை நடத்த அனுமதி இல்லை, மீறினால் கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். உ.பி.யில் வெள்ளிக்கிழமை தொழுகை மற்றும் சிறப்பு தொழுகையின்போது மசூதிகள் நிறைந்து விடுவது உண்டு. இதனால் முஸ்லிம்கள் மசூதிக்கு வெளியே சாலை அல்லது தெருக்களிலும் நின்று தொழுகை செய்து வந்தனர். இதற்கு உபி அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து லக்னோவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:...
ஜார்க்கண்டில் பெட்ரோல் நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படும் நிலையில் ஆசிரியர் ஒருவர் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கு குதிரையில் செல்கிறார். 2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முதல் கட்டமாக வீட்டு வசதி பற்றிய கணக்கெடுப்பு ஜார்க்கண்டில் மே 16-ம் தேதி தொடங்கியது. இதற்காக வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்த ஆசிரியர்களை மாநில அரசு நியமித்துள்ளது. இந்நிலையில் கர்வா மாவட்டம், துர்கி ஒன்றியம் தட்டிதிரி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்...
கர்​நாடக மாநிலம் குடகில் காவிரி ஆற்​றில் குளித்துக் கொண்​டிருந்த யானை​களுக்கு இடையே ஏற்​பட்ட சண்டை​யில் சிக்கி சென்​னையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாய்சி உடல் நசுங்கி உயி​ரிழந்​தார். கணவரின் கண் முன்​னால் நிகழ்ந்த இந்த சம்​பவத்​தின் வீடியோ வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்படுத்​தி​யிருக்​கிறது. சென்னை பல்​லா​வரத்தை சேர்ந்த ஜாய்சி (33), தனது கணவர் மற்றும் குழந்​தை​யுடன் கர்​நாடக மாநிலம் குடகிற்கு சுற்​றுலா சென்​றார். இங்கு நேற்று பிற்​பகல் 2 மணி​யள​வில் மடிகேரியை...
சு​மார் 20,000 டன் எரிவாயுவை (எல்​பிஜி) ஏற்றி வந்த மார்​ஷல் தீவு​களின் கொடி பொருத்​தப்​பட்ட சரக்​குக் கப்​பல், குஜராத்​தின் கட்ச் மாவட்​டத்​தில் உள்ள கண்ட்லா துறை​முகத்தை வந்​தடைந்​துள்​ள​தாக ஏஎன்ஐ செய்தி நிறு​வனம் தெரி​வித்​துள்​ளது. ‘சிமி' என்று அடை​யாளம் காணப்​பட்ட அந்​தச் சரக்​குக் கப்​பல், உலக அளவில் மிக முக்​கியப் பாதை​யாகக் கருதப்​படும் ஹார்முஸ் ஜலசந்​தியை கடந்த மே 13 அன்று கடந்​து, இந்​தி​யத் துறை​முகத்தை வந்​தடைந்​த​தாக அறிக்​கை​யில் குறிப்பிடப்பட்டுள்​ளது. இந்​தி​யா​வில்,...
ம.பி.​யின் தார் நகரில் உள்ள போஜ்​சாலாவில் உள்ள சர்ச்சைக்குரிய இடம் சரஸ்வதி தேவி கோயில்தான் என்று உயர் நீதி​மன்​றம் தீர்ப்பளித்​துள்​ளது. ம.பி. உயர் நீதி​மன்​றத்​தின் இந்த தீர்ப்பை தாங்​கள் ஏற்​க​வில்லை. உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீடு செய்​யப் போவ​தாக​வும் முஸ்​லிம் தரப்​பினர் அறிவித்துள்​ளனர். இந்நிலையில், அயோத்தி விவ​காரத்​துக்கு பிறகு, பிற வழக்குகளிலும் இதே​போன்ற முடிவு​கள்எடுக்​கப்​படுமா என்ற கேள்​வி எழுந்துள்ளது. தற்​போது நாட்​டில் மசூ​தி- கோ​யில் சர்ச்சை தொடர்​பாக 10 வழக்​கு​கள் நீதி​மன்​றங்​களில்...
நீட் வினாத்தாள் கசிவு எதிரொலியாக தேசிய தேர்வு முகமையில் (என்டிஏ) புதிதாக 4 மூத்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு நீட், ஜேஇஇ, கியூட், சிமாட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) முன்னாள் தலைவர் பிரதீப் குமார் ஜோஷி என்டிஏ தலைவராகவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அபிஷேக் சிங் இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மேலும்...
போக்சோ சட்​டத்​தின் கீழ் பதிவு செய்​யப்​பட்​டுள்ள வழக்கு தொடர்​பாக, தனது மகனை போலீ​ஸில் ஒப்​படைத்ததாக மத்​திய அமைச்​சர் பண்டி சஞ்​சய் குமார் தெரி​வித்​தார். பாஜக​வின் தெலங்​கானா மாநில முன்​னாள் தலை​வரும், தற்​போதைய மத்​திய உள்​துறை இணை அமைச்​சரு​மான பண்டி சஞ்சய் குமார் இது தொடர்​பாக எக்ஸ் பக்​கத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறி​யிருப்​ப​தாவது: சத்​யமேவ ஜெயதே (வாய்​மையே வெல்​லும்). சட்​டம் மற்​றும் நீதித்​துறை மீதான மிகுந்த மரியாதையுடன், எனது மகன் பண்டி பகீரத்...
வி​மானப்​படை பயன்​பாட்​டுக்​காக குஜ​ராத்​தின் வதோதரா நகரில் உள்ள டாடா - ஏர்​பஸ் மையத்​தில் தயாரிக்கப்பட்ட ஏர்​பஸ் சி-295 போக்​கு​வரத்து விமானம் பரிசோதனைக்கு தயார் நிலை​யில் உள்​ளது. இந்​திய விமானப்​படை​யில் வீரர்​கள் மற்​றும் சரக்கு போக்​கு வரத்துக்கு பயன்​படுத்​தப்​பட்ட ஆவ்ரோ -748 விமானங்​களுக்கு மாற்​றாக ஏர்​பஸ் நிறு​வனத்​தின் சி-295 ரக விமானத்தை சேர்க்க முடிவு செய்​யப்​பட்​டது. இதில் 70 வீரர்​கள் பயணிக்​கலாம், ராணுவத் தளவாட பொருட்​களை​யும் எடுத்​துச் செல்​லலாம். குறுகிய ஓடு​தளத்​தில்...
டெல்லி செங்​கோட்டை கார் குண்​டு​வெடிப்பு வழக்கில் 7,500 பக்க குற்​றப்​பத்​திரி​கை​ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்​பர் 10-ம் தேதி டெல்லி செங்​கோட்டை முன் தீவிர ​வா​தி​களின் கார் குண்​டு​வெடிப்பு நிகழ்ந்​தது. இதில் 11 பேர் உயி​ரிழந்​தனர். என்ஐஏ வசம் ஒப்​படைக்​கப்​பட்ட இந்த வழக்​கில் 10 பேர் கைதாகினர். காரை ஓட்​டிவந்து வெடிக்​கச் செய்த முக்​கிய குற்​ற​வாளி புல்​வா​மாவைச் சேர்ந்த டாக்​டர் உமர் உன் நபி என தெரிய​வந்​தது. டெல்லி பாட்​டி​யாலா...