மும்பையில் உள்ள நெஸ்கோ மையத்தில் கடந்த 11-ம் தேதி இரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரூ.2,000 நுழைவுக் கட்டணம் செலுத்தி சுமார் 4,000 பேர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்ட சிலர் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ போதைப் பொருளை உட்கொண்டதாக கூறப்படுகிறது, இதனால் இரவு 12 மணியளவில், 3 மாணவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 24 வயது...
கோடை காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் வரும் மே 1ம் தேதி முதல் ஜூன் மாதம் 30ம் தேதி வரை தொடர்ந்து 2 மாதங்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் மற்றும் ஸ்லாட்டட் சர்வ தரிசனம் (எஸ்எஸ்டி) அதாவது சர்வ தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன் வழங்குதலை நிறுத்த தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இதனால் முன்கூட்டியே சர்வ தரிசன டோக்கன்கள் வழங்காமல், நேரடியாக சர்வ...
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் மோடி தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருக்கு நினைவுப் பரிசாக முருகன் படத்தை சிபிஆர் வழங்கினார்.
இது குறித்து குடியரசு துணைத் தலைவர் சிபிஆர், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் இன்று குடியரசு துணைத் தலைவர் மாளிகையில், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன். அனைவருக்கும்...
சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள பெரிய பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் சூழ்ந்ததால் தொழிலாளர்கள் உயிருக்குப் பயந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
முதற்கட்ட...
இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல் திட்டத்திற்காக, 18 அதிநவீன ‘கமேவா' வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்ஸ்பெர்க் மேரிடைம் நிறுவனம் பெற்றுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படைக்கு தேவையான வாட்டர்ஜெட் கருவிகளை வழங்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான கப்பல்களில் காணப்படும் விசிறி போன்ற புரொப்பல்லர் அமைப்பிற்கு மாற்றாக, இந்த வாட்டர்ஜெட் தொழில்நுட்பம் நீரை உள்ளிழுத்து, அதிக வேகத்தில் வெளியேற்றுவதன்...
பிஹார் தலைநகர் பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்களின் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் அந்த மாநிலத்தின் புதிய முதல்வர் தேர்வு செய்யப்பட உள்ளார்.
பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்), இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் மோர்ச்சா கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பிஹார் முதல்வராக...
கடந்த 2004-2009-ம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி ஆட்சி செய்தபோது ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு ரயில்வே துறையில் பலருக்கு வேலை அளித்ததாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினருக்கு எதிராகச் சிபிஐ கடந்த 2022-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி லாலு பிரசாத் யாதவ் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச...
மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை சுமார் 70 தொகுதிகள் தீர்மானிக்கும் எனக் கருதப்படுகிறது. இந்த தொகுதிகளில் கடந்த தேர்தல்களில் பதிவான வெற்றி-தோல்வி வாக்கு வித்தியாசத்தை விட, தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
மொத்தம் 294 உறுப்பினர்களை கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வழக்கத்துக்கு...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திராவை சேர்ந்த இளம் பொறியாளர் தனது பிறந்தநாளன்றே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டம், பொப்பிலி பகுதியை சேர்ந்தவர் சிங்கிரெட்டி சாய் ஸ்ரீஹரிகிருஷ்ணா (26). இவர் அமெரிக்காவின் மிசோரி அருகே செயிண்ட் லூயிஸ் பகுதியில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் எனும் இடத்தில் தனது நண்பர்களுடன் வசித்து வந்தார். பொறியியல் பட்ட மேற்படிப்பு (எம்எஸ்) முடித்து அங்குள்ள ஒரு நிறுவனத்தில்...
டெல்லி சட்டப்பேரவையை ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு மூலம் தகர்ப்போம் என மர்ம நபர்கள் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.
டெல்லி சட்டப் பேரவை அலுவலகம் மற்றும் சபாநாயகர் விஜேந்திர குப்தாவுக்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். முழுவதும் இந்தியில் அனுப்பப்பட்ட அந்த இ-மெயிலில் கூறியிருப்பதாவது:
பிராமணராக இருக்கும் எஸ்.வி.சேகர் திமுகவில் சேர்ந்துள்ளார். அவரை பாஜக.,வின் பிராமின் ஏஜென்டாக நீங்கள் அனுப்பியுள்ளீர்கள். அதனால்தான் டெல்லி சட்டப்பேரவையை நாங்கள் 15 ஆர்டிஎக்ஸ்...










