உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி
admin - 0
உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார்.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஐஐஎம் உயர்கல்வி நிறுவனத்தின் 15-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: உலக நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
கோவிட்19, உலக அளவில் எழுந்த பொருளாதார சவால்கள், பருவநிலை மாற்றங்கள் போன்ற பல்வேறு பிரச்சினைகளை உலக நாடுகள்...
ஹரியானாவில் தலைக்கவசம் அணியாத 19,603 வாகன ஓட்டிகள்: மார்ச் மாதம் மட்டும் ரூ.1.9 கோடி வசூலித்த காவலர்!
admin - 0
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவர்களிடம் மார்ச் மாதத்தில் ரூ.1.9 கோடியை வசூலித்துள்ளார் போக்குவரத்துக் காவலர்.
ஹரியானா மாநிலத்தில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு அல்லது காயங்கள் ஏற்படுவதற்கு தலைக்கவசம் அணியாததே காரணமாக உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் பாதுகாப்பான பயணம் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், குருகிராமில் போக்குவரத்து இணைக் கமிஷனராக பிரதீக் கெலாட் நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்ற...
ஆந்திராவின் மச்சேர்லா நகரைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் சவ்டேஸ்வரி என்பவர் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி கடந்த மாதம் 4-ம் தேதி காதல் திருமணம் செய்தார்.
இதையடுத்து மகள் சவ்டேஸ்வரியை காணவில்லை என அவரது தந்தை சந்திர சீனு மச்சேர்லா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் கடந்த மாதம் 15-ம் தேதி சவ்டேஸ்வரியை கண்டுபிடித்தனர். அவரை மிரட்டி பெற்றோரிடம் இன்ஸ்பெக்டர் ஒப்படைத்துள்ளார்.
மூன்று நாட்களுக்குப் பின் சவ்டேஸ்வரி...
பார்க்கிங் செய்ய முயன்ற பேரனுக்கு உதவிய பாட்டி ‘ஹேண்ட் பிரேக்’ போடாததால் கார் மோதி உயிரிழப்பு
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் பரூக்காபாத்தைச் சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி சரளா கத்தியார்.
சரளாவின் பேரன் அண்மையில் புதிதாக மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடல் காரை வாங்கினார். பாட்டி சரளா வீட்டுக்குப் புதிய காரில் பேரன் கடந்த வியாழக் கிழமை வந்தார். அப்போது காரை வீட்டில் பார்க்கிங் செய்வதற்காக பேரனுக்கு சரளா கத்தியார் உதவியுள்ளார்.
அப்போது அவரது பேரன் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக சரளா மீது மோதியது....
கல்வியறிவு பெற்ற கேரள மக்களை கல்வியறிவு பெறாத குஜராத் மக்களைப் போல ஏமாற்ற முடியாது என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியுள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. இதில் வரும் 9-ம் தேதி அன்று கேரளா, அசாம் மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் இந்தப் பகுதிகளில்...
“மக்கள் சேவையே மகேசன் பணி” என்ற கொள்கையுடன் அரசு ஊழியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு ஊழியர்களுக்காக 'கர்மயோகி சாதனா சப்தாஹ்' என்ற பெயரில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன்படி ஏப்ரல் 2 முதல் 8-ம் தேதி வரை சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக...
மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816 ஆக உயர்த்த வகை செய்யும் மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டம் ஏப்ரல் 16-ம் தொடங்குகிறது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 28 முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. இதன் 2வது அமர்வு மார்ச் 9-ம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில்...
மேற்கு வங்க நிலக்கரி ஊழல் வழக்கில், தேர்தல் வியூகம் வகுத்து தரும் ஐ-பேக் நிறுவனத்தின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் டெல்லியில் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனை நடைபெற்ற இடங்களில் ஐ-பேக் இணை நிறுவனர் மற்றும் இயக்குநர் ரிஷி ராஜ் சிங்கின் வீடும் அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலக்கரி ஊழல் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை...
கடந்த 5 ஆண்டுகளில், தினமும் சராசரியாக 20-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துந்துள்ளதாகவும், பெரும்பாலான உயிரிழப்பு வளைகுடா நாடுகளில் நிகழ்ந்துள்ளதாகவும் அரசின் புள்ளி விவரத்தில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான தரவுகளை வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கடந்த ஜனவரி 29ம் தேதி மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான பதிலில் அளித்துள்ளார். இதன்படி 2021 முதல் 2025 வரை வெளிநாடுகளில் உயிரிழந்த இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 37,740-ஐ எட்டியுள்ளது. இந்த உயிரிழப்புகளுக்கான...
டெல்லி மதுபான கடைகள் ஒதுக்கீட்டு வழக்கில் கடந்த 2024ம் ஆண்டில் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
அப்போது ஆம் ஆத்மி சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இதில் மாநிலங்களவை எம்.பி.யான ராகவ் சத்தா பங்கேற்கவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் மதுபான ஒதுக்கீட்டு வழக்கில் கேஜ்ரிவால் விடுதலை செய்யப்பட்டார். அப்போதும் ராகவ் சத்தா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆம் ஆத்மியின் வெற்றி கொண்டாட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.
கடந்த 2025ம்...










