Google search engine
மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சத்ரபதி சிவாஜி உள்ளிட்டவர்களின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதான தளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், அந்த சிலைகள் தற்போது இருந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டு பழைய கட்டிடத்தின் புல்வெளி பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று பழங்குடியின தலைவர் பிர்சா முண்டா மற்றும் மகாராணா பிரதாப் ஆகியோரின் சிலைகளும் பழைய நாடாளுமன்ற கட்டடம் மற்றும் நாடாளுமன்ற நூலகத்துக்கு இடையே இடமாற்றம் செய்யப்படுகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்...
ஆந்திரா, பிஹாருக்கு சிறப்புஅந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றுவாரா என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து ‘எக்ஸ்' தளத்தில்காங்கிரஸ் பொதுச் செயலாளர்ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: மோடியின் மூன்றாவது அரசு மத்தியில் அமைய உள்ளது. ஆனால் இது இம்முறை மோடியின் மூன்றில் ஒரு பங்கு அரசாகத்தான் இருக்கும். ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என்று கடந்த 2014 ஏப்ரல் 30-ம் தேதி திருப்பதியில் பிரதமர்...
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. அதன் தோழமை கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி வென்றது. ஆளும் கட்சியாக இருந்த ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில்...
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸுக்கு பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்கு பிறகும் பாஜக தொண்டர்களை ஆளும் திரிணமூல் கட்சியின் குண்டர்கள் தாக்குவது வழக்கமாக உள்ளது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுஇதுவரை 20 வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதனால் சுமார்10 ஆயிரம் பேர் வீடற்றவர்களாக உள்ளனர். அவர்கள் பாஜக சார்பில் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் மத்திய...
தேர்தல் கருத்துக் கணிப்பு நடத்தும் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா நேற்று நடைபெற்ற நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுதார். முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை நிச்சயம் வெல்லும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டது ’ஆக்சிஸ் மை இந்தியா’. 350-400 தொகுதிகள்: இந்நிறுவனம் மட்டுமின்றி இந்ததேர்தல் குறித்து ’இந்தியா டுடே’, ‘ரிபப்ளிக் டிவி’ உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் வெளியிட்ட...
கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை சமாளிக்க, பாஜக கூட்டணியின் சார்பில் களமிறக்கப்பட்ட குமாரசாமி, பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர் ஆகிய‌மூன்று முன்னாள் முதல்வர்களும் அமோகமாக வெற்றி பெற்றுள்ளனர். ஹாவேரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை, காங்கிரஸ் வேட்பாளர் கட்டாதேவர்மத்தை 43ஆயிரத்து 513 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தொகுதியில் வெற்றிப் பெற்றதன் மூலம், அவர் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள ஷிகோன் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை...
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “உத்தர பிரதேசத்தின் மகராஜ்கன்ஜ், பன்சி, மீரட், முசாபர்நகர் ஆகிய மாவட்டங்களின் தேர்தல் அலுவலர்களுக்கு தொலைபேசி வாயிலாக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்தால் இதுபோன்ற ஜனநாயக இடையூறை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 150 மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசியில் மிரட்டுவதாக ஏற்கெனவே ஜெய்ராம் ரமேஷ்...
தேசிய ஜனநாயக கூட்டணியின் 3-வது ஆட்சியில் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் அவர் பேசியதாவது: மக்களவைத் தேர்தலில் 64 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து புதிய சாதனை படைத்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மக்கள் பெருந்திரளாக வாக்களித்து உலகத்துக்கு உண்மை நிலவரத்தை உணர்த்தி உள்ளனர். இந்த நேரத்தில் மக்களவைத் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த...
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் (டிஆர்டிஓ) மற்றும் ரஷ்யாவின் ராணுவ தொழில் கூட்டமைப்பு (என்பிஓ) ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. பிரம்மோஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரிலுள்ள ஏவுகணை மையத்தில் 4 ஆண்டாக பொறியாளராக பணியாற்றினார் நிஷாந்த் அகர்வால். ஏவுகணை தொழில்நுட்ப ரகசியங்களை பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கு (ஐஎஸ்ஐ) வழங்கியதாக நிஷாந்த் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2018-ம்ஆண்டு நிஷாந்த் கைது செய்யப்பட்டார்....
நாடு முழுவதும் 2 வாரங்களுக்கு முன்பே மக்களவை தேர்தல் முடிவுகள் தொடர்பான சூதாட்ட சந்தை தொடங்கிவிட்டது. குறிப்பாக, டெல்லியில் உள்ளசூதாட்டக்காரர்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 341 முதல் 343 இடங்கள் கிடைக்கும் என்றும் இண்டியா கூட்டணிக்கு 198 முதல் 200 இடங்கள் கிடைக்கும் என்றும் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தனியாக 310 முதல் 313இடங்களிலும் காங்கிரஸ் தனியாக 57 முதல் 59 இடங்களிலும் வெற்றி பெறும்...