Google search engine
ஜப்பானிலிருந்து புல்லட் ரயில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் அதிக தாமதம் ஏற்படுவதால், மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் சூரத் - பிலிமோரா இடையே அடுத்தாண்டு...
சிஏஜி அறிக்கைப்படி ரூ.382 கோடி ஊழலில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருக்கிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தலைமை கணக்கு தணிக்கையாளர் அமைப்பு (சிஏஜி) 14 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது....
திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் கடந்த 10-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அதன் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்காக கடந்த 9-ம்தேதி அதிகாலை 5 மணி முதல் இலவச டோக்கன் வழங்க திருப்பதியில் 8 இடங்களை திருமலை...
தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடரவும், சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தவும் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேசிய சுகாதார திட்டத்தை மேலும் 5 ஆண்டுகள் தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் தேசிய சுகாதார திட்டம் பல சாதனைகளை படைத்ததாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்....
கடந்த 2024-ம் ஆண்டில் டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பொருட்களை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் (சிஐஎஸ்எப்) உரிய விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தபோது தவறவிட்ட பயணிகளின் உடமைகள் உரிய விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.40.74 லட்சம் ரொக்கம், 89 லேப்டாப், 193 செல்போன்கள், 40 வாட்ச், 9 மங்கள்சூத்ரா எனப்படும்...
வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள், மரங்களைத் தூக்கிச் செல்லும் தொழிலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் பழக்கப்பட்ட யானைகள், வெட்டப்படும் மரங்களை தூக்கிச் செல்லும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் வன்தாரா திட்டத்தின் கீழ் 20 யானைகள் அண்மையில் மீட்கப்பட்டன. வன்தாரா மீட்பு மையத் திட்டமானது, யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் திரிபுரா மாநில உயர் நீதிமன்றத்தின்...
அரசு பணியை உதறிவிட்டு மாவோயிஸ்ட் தலைவராக உருவான சலபதியின் வீழ்ச்சி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. சத்தீஸ்கர் - ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 27 மாவோயிஸ்ட்கள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். இதில் தமிழகம் - ஆந்திர எல்லையில் உள்ள சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம் ரெட்டி என்கிற சலபதியும் (60), கொல்லப்பட்டார். அரசு பணியை உதறிவிட்டு, மாவோயிஸ்ட் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டு மாவோயிஸ்ட் அமைப்பின் மத்திய...
பாஜக அரசின் வரி தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர வர்க்கத்தினர், குழந்தை பெற்றுக் கொள்ளக் கூட தயங்குகின்றனர் என ஆம் ஆத்மி தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி சட்டப் பேரவை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால், சமூகத்தில் அதிகம் உள்ள நடுத்தர வர்க்கத்தினர் சந்திக்கும் பிரச்சினைகளை எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது: சில தேர்தல் வாக்குறுதிகள்,...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாடு உடனான வர்த்தக உறவுகளை மேம்படுத்தவும், இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் திறமையான தொழிலாளர்களுக்கு எளிதில் விசா கிடைக்கச் செய்வதிலும் இந்தியா ஆர்வமாக உள்ளது. கடந்தாண்டில் இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் 118 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது. இந்நிலையில், அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், இந்திய பொருட்களுக்கும் அதேபோல் வரி...
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா 8 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சர்வதேச தொழில்நுட்ப நிறுவனமான என்எல்பி சர்வீசஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெறும் மகா கும்பமேளா 1.2 மில்லியன் அதாவது 12 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைவார்கள். இந்த தற்காலிக வேலைவாய்ப்புகள் நாட்டின்...