வங்கதேசத்தில் வாழும் இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு அரசிடம் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி வலியுறுத்தி உள்ளார்.
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த...
மதம் மாற மனைவியும் அவரது குடும்பத்தினரும் கட்டாயப்படுத்தியதாக கூறி சத்தீஸ்கரில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
சத்தீஸ்கரின் அர்ஜுனி காவல் எல்லைக்குட்பட்ட பொட்டியாதி கிராமத்தை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை தனது வீட்டில் தூக்கில் சடலமாக காணப்பட்டார். அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார், அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
இதில் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் பதிவில் தன்னை மதம் மாறுமாறு தனது மனைவியும்...
சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சி ஒவ்வொரு துறையிலும் தெளிவாக தெரிகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உலகளாவிய முதலீடு உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு துறையிலும் தெளிவாக காணமுடிகிறது. மிக நெருக்கடியான காலகட்டத்திலும், வலுவாக செயல்படக்கூடிய பொருளாதாரம்தான் இன்றைய உலகத்துக்கு தேவை. இதற்கு, இந்தியாவில் மிகப் பெரிய...
நிரந்தர கணக்கு எண் (பான்) என்றாலே வருமான வரி தாக்கல் செய்வதற்கு மட்டும்தான் என்ற நிலை மாறிவிட்டது. குடும்ப அட்டை எவ்வளவு முக்கியமோ அதேபோல் அனைத்து நிதி சம்பந்தமான பரிவர்த்தனைகளுக்கும், தங்கம், நிலம் வாங்குவதற்கும் பான் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால்தான் வருமான வரிதாரர்கள் எண்ணிக்கை 8.62 கோடியாக இருந்தபோதிலும், சுமார் 78 கோடி மக்கள் பான் கார்டு வாங்கியுள்ளனர்.
இந்நிலையில், பான் 2.0 திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது....
“சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும்” – விஎச்பி நிகழ்ச்சியில் அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி பேசியது என்ன?
admin - 0
இந்துத்துவா அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) நடத்திய நிகழ்ச்சியில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கலந்துகொண்டார். பொது சிவில் சட்ட அவசியம் குறித்து அவர் உரையாற்றினார்.
பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் ஒரு பிரிவாக இருப்பது விஎச்பி. இது, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாபர் மசூதியை இடிக்க கரசேவை நடத்தியது. முஸ்லிம்களுக்கும் அவர்களது மசூதிகளுக்கும் எதிராக சர்ச்சையான கருத்துகளை விஎச்பி பலமுறை வெளியிட்டுள்ளது. இதன்...
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92.
கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று (டிச.10) 2.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியை போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
1932-ல் கர்நாடக மாநிலத்தின் சோமஹல்லியில்...
மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகர மின்சாரப் பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதிய விபத்தில் 3 இளைஞர்கள் உள்பட 4 பேர் பலியாகினர். 36 பேர் காயமடைந்தனர். மும்பை குர்லா மேற்கில் உள்ள எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில் அன்ஜும் இ இஸ்லாம் பள்ளி அருகே திங்கள்கிழமை இரவில் இந்த விபத்து நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அஃப்ரீன் ஷா (19), அனம் ஷேக் (20), சிவம் கஷ்யப் (18) மற்றும்...
தலைநகர் தலைநகர் டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ - மிரட்டல் மின்னஞ்சல் scottielanza@gmail.com என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர்,...
திருப்பதி ஏழுமலையான் குடிகொண்டுள்ள கர்ப்பக் கிரகம் உட்பட தங்க விமான கோபுரத்தின் கீழே உள்ள சுவர்கள் முழுவதும் வேலூர் பொற்கோயில் போன்று தங்க தகடுகள் பொருத்த வேண்டும் என 2008-ல் அப்போதைய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவுலு நாயுடு விரும்பினார். இதற்கு அறங்காவலர் குழுவும் ஒப்புதல் அளித்தது. இதனைத் தொடர்ந்து, இதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கத்தை நன்கொடையாக பெறுவது என தீர்மானிக்கப்பட்டது.
இது குறித்து அறிவிப்பு வந்ததும் பலர்...
ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகைக்காக பந்தய சேவல் விற்பனை தொடங்கி உள்ளது. ஒவ்வொரு சேவலும் ஆன்லைனில் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்க தொடங்கி உள்ளது.
ஆந்திராவில் பொங்கல் பண்டிகை வந்தால் தொடர்ந்து 3 அல்லது 4 நாட்களுக்கு கோதாவரி மாவட்டங்களில் சேவல் பந்தயங்கள் களை கட்டுவது வழக்கம். இதற்கு இந்த ஆண்டும் விதி விலக்கல்ல எனும் வகையில் இப்போதே சேவல் விற்பனை தொடங்கிவிட்டது. வெளிநாடு வாழ்...










