மணிப்பூரில் 2 பெண்கள் உட்பட 11 தீவிரவாதிகள் கைது

0
30

மணிப்​பூரில் பாது​காப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்​டை​யில் குகி மற்றும் மைதேயி தீவிரவாத அமைப்பு​களைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

மணிப்​பூரில் மைதேயி, குகி இனத்​தவர்​களுக்கு இடையில் கடந்த 2023 மே மாதத்​தில் இருந்து நடைபெற்று வரும் மோதலில் பலர் கொல்​லப்​பட்​டனர். பலரை காணவில்லை. பலர் மாநிலத்தை விட்டு வெளி​யேறினர். இந்நிலை​யில், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி கடந்த வாரம் அமல்​படுத்​தப்​பட்​டது. இதையடுத்து அங்கு அமைதியை நிலைநாட்ட சிஆர்​பிஎப் வீரர்​கள், போலீ​ஸார் குவிக்​கப்​பட்​டுள்​ளனர். பதற்​றமான பகுதி​களில் அவர்கள் தீவிர கண்காணிப்​பில் ஈடுபட்​டுள்​ளனர்.
இந்நிலை​யில், குகி தேசிய படையை (கேஎன்ஏ) சேர்ந்த தீவிர​வா​திகள் 7 பேரை பாது​காப்புப் படையினர் நேற்று கைது செய்​தனர். சுராசந்த்​பூர் பகுதி​யில் நடைபெற்ற தேடுதல் வேட்​டை​யின் போது அவர்கள் சிக்​கினர் என்று போலீ​ஸார் தெரி​வித்​தனர்.

இம்பால் கிழக்கு மாவட்டம் ஹூய்​காப் கிராமத்​தில் நடை பெற்ற மற்றொரு தேடுதல் வேட்​டை​யில் மைதேயி தீவிரவாத அமைப்பான கங்கிலீ பாக் கம்யூ னிஸ்ட் அமைப்பை (மக்கள் போர்க் குழு அல்லது கேசிபி) சேர்ந்த 2 பெண்கள் உட்பட 4 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here