Google search engine
புதிதாக 10 ஆயிரம் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் நிதியாண்டில் மருத்துவப் படிப்புகளுக்குக் கூடுதலாக 10 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து 10 ஆயிரம் முதுநிலை படிப்புக்கான இடங்களை உருவாக்கும் முயற்சியில் மத்திய அரசு இரங்கியுள்ளது. தற்போது நாடு முழுவதும் 1.2 லட்சம் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன....
சீன படைகள் இந்திய மண்ணில் ஊடுருவியுள்ளதாக நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசியதற்காக அவருக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என சபாநாயகரிடம் பாஜக எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே நாடாளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: ராகுல் தனது உரையில் கொஞ்சமும் கூச்சமின்றி வரலாற்று மற்றும் ஆதாரப்பூர்வமான உண்மைகளை திரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், தாய்நாட்டை கேலி செய்து நமது குடியரசின்...
தேச நலன் சார்ந்த விஷயங்​களில் ராகுல் காந்தி பொறுப்​பற்ற அரசியல் செய்​வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்​டி​யுள்​ளார். சீனா​வுடனான எல்லைப் பிரச்​சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்​தும் மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி விமர்​சனம் செய்திருந்​தார். சீனர்கள் நமது எல்லைக்​குள் இருப்​பதாக ராணுவத் தளபதி கூறுகிறார் என்றும் ராகுல் காந்தி கூறி​யிருந்​தார். இதுகுறித்து எக்ஸ் தளத்​தில் பாது​காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறி​யிருப்​ப​தாவது: இந்தியா மற்றும்...
தெலங்கானாவில் 1.12 கோடி குடும்பத்தாரிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுளது. இது அரசின் நலத்திட்ட உதவி வழங்க பயன்படுத்தப்படும் என முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறினார். இதுகுறித்து தெலங்கானா சட்டப்பேரவையில் முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: தெலங்கானாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது என கடந்த 2024 பிப்ரவரியில் தீர்மானிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏற்கெனவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய கர்நாடகா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அதன் பிறகு தெலங்கானாவில் தொடர்ந்து 50...
கர்நாடகாவில் 6 மாத குழந்தைக்கு காது குத்துவதற்காக மயக்க ஊசி செலுத்தியதால், உடல் நிலை பாதிக்கப்பட்டு குழந்தை உயிரிழந்தது. கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் குண்டுலுபேட்டையை அடுத்துள்ள ஷெட்டிஹள்ளியை சேர்ந்தவர் ஆனந்த் (32). தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நேற்று முன் தினம் காது குத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். காது குத்தும் போது வலி தெரியாமல் இருப்பதற்காக ஊசி...
தலைநகர் டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. டெல்லியில் மொத்தம் 1.56 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 83.76 லட்சம் பேர் ஆண்கள், 72.36 லட்சம்...
அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ச்சி அடைந்த பாரதம் உருவாகும். இது 140 கோடி மக்களின் கனவு என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் மக்களவையில் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பங்கேற்று பேசினர். இந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி...
டெல்லி சட்டப்பேரவைக்கு இன்று (பிப்.5) காலை 7 மணி தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி 8 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ம் தேதியுடன் முடிகிறது. இங்கு மொத்தம் 70 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் இன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. கடும் குளிர் காரணமாக வாக்குப்பதிவு...
மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பான பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் முறையிட தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மவுனி அமாவாசையை ஒட்டி கடந்த 29-ம் தேதி பிரயாக்ராஜில் சுமார் 10 கோடி பக்தர்கள் திரண்டனர். அன்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட ஒரே நேரத்தில் சுமார் 10...
மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்ததற்கு சதிச் செயல் காரணமாக இருக்கலாம் என பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 2025-26 பட்ஜெட் தாக்கல் மற்றும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நேற்று விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, பாஜக எம்.பி. ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றும் வரும் மகா கும்பமேளாவில்...