டெல்லி சட்டப்பேரவைத் தலைவராக பாஜகவைச் சேர்ந்த விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த ரேகா குப்தா முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், ரோஹினி தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு டெல்லி சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில், தற்காலிக சட்டப்பேரவைத் தலைவராக அர்விந்தர் சிங் லவ்லிக்கு...
சம்பல் மசூதி நிர்வாகம் பொது இடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாக உத்தர பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் 16-ம் நூற்றாண்டில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட ஷாஹி ஜமா மசூதி உள்ளது. அந்த இடத்தில் கோயில் இருந்ததாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பயங்கர கலவரம் வெடித்தது....
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்தில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி வெளிநடப்பு
admin - 0
எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வலியுறுத்தி பட்ஜெட் கூட்டத்திலிருந்து முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் வெளிநடப்பு செய்தார்.
ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று அமராவதியில் தொடங்கியது. பேரவை, மேலவை ஆகியவற்றின் கூட்டுக்கூட்டத்தில் ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர் பேரவையில் நேற்று உரையாற்றினார்.
இந்நிலையில் பல நாட்களாக பேரவை கூட்டங்களுக்கு வராமல் இருந்த முன்னாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட 11 உறுப்பினர்களும் நேற்று காலை அவைக்கு வந்தனர்.
அப்போது ஆளுநர் தனது...
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கை சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் மார்ச் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக உ.பி.யின் சுல்தான்பூரில் பாஜக தொண்டர் ஒருவர் புகார் அளித்தார்.
இப்புகார் மீதான வழக்கில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து ராகுல் காந்தி கடந்த 2023 டிசம்பரில் சுல்தான்பூர்...
பேருந்து நடத்துநர் தாக்கப்பட்ட விவகாரம்: கர்நாடகா – மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து நிறுத்தம்
admin - 0
கர்நாடகாவில் உள்ள பெலகாவியில் மாநில அரசு பேருந்தின் நடத்துநர் மராத்தியில் பேசாததால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து நடந்துவரும் போராட்டத்தால் 3 நாட்களாக கர்நாடகா, மகாராஷ்டிரா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கடந்த 21-ம் தேதி மாநில அரசுப் பேருந்தின் நடத்துநர் மல்லப்பா ஹுக்கேரிக்கும் பேருந்தில் பயணித்த 15 வயது சிறுமிக்கும் இடையே கன்னடத்தில் பேசுவதா? மராத்தியில் பேசுவதா? என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பேருந்தில் இருந்த மற்ற...
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் (கேடிஎஸ்) 3.0 நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடந்த 2023 நவம்பரில் நடத்தப்பட்ட கேடிஎஸ் 2.0 வில் அகத்தியர் பிறந்த நாள் விழா மற்றும் அவரை பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இந்த ஆண்டு கேடிஎஸ் நிகழ்ச்சியில் அகத்தியர் கருப்பொருளாக தேர்வு செய்யப்பட்டார்.
காஷ்மீர் பண்டிட் சமூகத்தை சேர்ந்த வழக்கறிஞர் ஷாமா பட்டின் பெற்றோர், பல ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகாவுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்....
காங்கிரஸுக்கு நான் தேவையில்லை என்றால் உலகளவில் எனக்கு வேறு வாய்ப்புகள் நிறைய உள்ளன – சசிதரூர் எம்.பி. தகவல்
admin - 0
‘‘காங்கிரஸ் கட்சிக்கு எனது சேவை தேவையில்லை என்றால், எனக்கு வேறு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன’’ என்று கட்சி மேலிடத்துக்கு சசிதரூர் எம்.பி. திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி சசிதரூர் எம்.பி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக 4-வது முறை எம்.பி. பதவி வகிக்கிறார். இவர் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியை அவ்வப்போது பாராட்டி வருகிறார். சமீபத்தில் கூட பிரதமர் மோடி அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப்பை...
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம்: பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
admin - 0
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக ரூ.2 ஆயிரம் உதவித் தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார்.
பிரதமரின் கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, நாடு முழுவதும் உள்ள சுமார் 11 கோடி சிறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும்...
விண்வெளியில் சதம் அடித்து இந்தியா சாதனை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
விண்வெளியில் பாரதம் 100-வது சதம் அடித்திருக்கிறது. சந்திரயான், மங்கள்யான், ஆதித்யா எல்-1 என பல்வேறு வரலாற்று சாதனைகளை இஸ்ரோ படைத்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மனதின் குரலின் 119-வது நிகழ்ச்சி வானொலியில் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: கிரிக்கெட்டில் சதம் அடிக்கும்போது ஏற்படும் அளவற்ற மகிழ்ச்சியை நாம் அறிவோம். அதைவிட பெருமகிழ்ச்சியாக கடந்த மாதம் இஸ்ரோவின் 100-வது ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக சீறிப்...
மகா கும்பமேளாவில் இதுவரை 62 கோடி பக்தர்கள் புனித நீராடல்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தகவல்
admin - 0
மகா கும்பமேளாவுக்கு இதுவரை 62 கோடி பக்தர்கள் வந்துள்ளனர் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் நடைபெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மாநாட்டுக்கு உங்களை வரவேற்கிறேன். இதையும் ஸ்டார்ட் அப் உலகின் யுனிகார்ன் மகா கும்பமேளா என அழைக்கலாம். ஆன்மீகமும்,...









