சீனாவின் ஏகபோக ஆதிக்கத்துக்கு போட்டியாக அமெரிக்கா, இந்தியா இடையே முக்கிய தாதுக்கள் ஒப்பந்தம்
admin - 0
சீனாவின் ஆதிக்கத்துக்குப் போட்டியாக, முக்கிய தாதுக்கள் மற்றும் அரிய வகை தனிமங்கள் குறித்த கட்டமைப்பு ஒப்பந்தத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் நேற்று கையெழுத்திட்டன.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தப் பயணத்தின் இறுதி நாளான நேற்று டெல்லியில் நடைபெற்ற ‘குவாட்' நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ரூபியோ பங்கேற்றார். ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய மற்ற நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும்...
பிஹார் மாநிலத்தில் உள்ளூர் சுற்றுலா உள் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து மாநில அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வது கட்டாயம் என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து மாநில அரசின் பொது நிர்வாகத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் மாநில அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், மூன்று மாதங்களுக்கு...
கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக மறுக்கும் சித்தராமையா – தீவிர ஆலோசனையில் டெல்லி தலைவர்கள்
admin - 0
கர்நாடக முதல்வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகுமார் முயற்சித்து வரும் நிலையில், டெல்லியில் கூட்டத்தில் சித்தராமையா தனது பதவியை விட்டுத்தர மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவியை டி.கே.சிவகுமாருக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீண்டும் போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் ஆலோசனை நடத்துவதற்காக டெல்லிக்கு வருமாறு சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இருவரும் டெல்லிக்கு சென்றனர்.
நேற்று மாலையில் டெல்லியில் உள்ள இந்திரா பவனில்...
சட்டவிரோத குடியேற்றத்தால் ஏற்பட்டுள்ள மக்கள் தொகை மாற்றங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை அமைத்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோத குடியேற்றம், ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் அசாதாரண மக்கள் தொகை மாற்றம், எந்தவொரு நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்குகிறது. இதைக் கருத்தில்...
திருமணத்துக்கு மணப் பெண்களை ஏற்பாடு செய்வதாக கூறி ம.பி.யில் 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதி கைது
admin - 0
திருமணத்துக்கு மணப்பெண்களை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி 42 குடும்பத்தாரை ஏமாற்றிய தம்பதியை மத்திய பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்கள் முகேஷ் பைரங்கி, சுனிதா தம்பதியினர். ஆனால், இவர்கள் பெரும்பாலும் வரன் பார்த்து தராமல் மணப்பெண் விவரம் கேட்டு வருபவர்களை ஏமாற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் மிகப்பெரிய கூட்டுத் திருமணத்தை நடத்தப் போகிறோம் என்று கூறி 42...
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வசதியாக ஆந்திராவில் 4 விமான நிலையங்களில் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் விற்பனை விரைவில் தொடங்க உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை வாணி அறக்கட்டளை மூலம் ரூ.10,500 கட்டணம் செலுத்தி தரிசிப்பதற்கு பக்தர்கள் அலைமோதுகின்றனர். ஒரு நபர் ரூ.10,000 நன்கொடை வழங்கியும், விஐபி பிரேக் தரிசனத்திற்கு கூடுதலாக ரூ.500 செலுத்தியும் இந்த தரிசனத்தை பெற முடியும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இது அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் முலம் வரும்...
உலகிலேயே இரண்டாவது நீளமான மற்றும் உயரமான ரோப் கார் சேவை காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘கோண்டோலா’ என அழைக்கப்படுகிறது. முதல் கட்ட ரோப் காரில் 8,694 அடி உயரமுள்ள காங்தோரி பள்ளத்தாக்கு பகுதிக்கும், 2-வது கட்ட ரோப் காரில் 13,058 அடி உயரத்தில் உள்ள காங்தோரி மலைப் பகுதிக்கும் செல்லலாம்.
இந்த ரோப் காரில் நேற்று சுமார் 300 சுற்றுலாப் பயணிகள் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தொழில்நுட்ப...
ஜூன் 18-ல் மாநிலங்களவை தேர்தல்: பாஜக கூட்டணி, எதிர்க்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் அதிகரிக்க வாய்ப்பு
admin - 0
வரும் மாநிலங்களவை தேர்தலுக்கு பிறகு, என்டிஏ மற்றும் எதிர்கட்சிகளுக்கு தலா 2 எம்.பி.க்கள் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 24 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு வரும் ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்துடன் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு எம்.பி. பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 24 எம்.பி. பதவிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி (என்டிஏ)...
தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா (33) கடந்த மே 12-ம் தேதி போபாலில் உள்ள அவரது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது தொடர்பாக வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக ட்விஷாவின் கணவரும் வழக்கறிஞருமான சமரத் சிங் மற்றும் முன்னாள் மாவட்ட நீதிபதியான ட்விஷாவின் மாமியார் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையில் இந்த வழக்கை மாநில அரசு கையாளும் விதம் குறித்து ட்விஷாவின்...
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய முதல்வராக வி.டி.சதீசன் கடந்த 18-ம் தேதி பதவியேற்றார்.
இந்நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியாக சமீபத்திய தேர்தலை கண்காணித்த ரத்தன் யு.கேல்கர் முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை நடத்திய அதிகாரியை நேரடியாக முதல்வர் அலுவலகத்துக்கு மாற்றுவது தேர்தல் நடுநிலைமை குறித்த மக்களின் பார்வையை சீர்குலைக்கும் என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
இந்த இடமாற்றம்...










