வாட்ஸ்-அப் தகவலை நம்பி கிரிப்டோ கும்பலிடம் ரூ.21 கோடியை இழந்த பட்டய கணக்காளர் – ம.பி போலீஸ் விசாரணை

0
15

மத்​தி​யப் பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த 70 வயது பட்​டயக் கணக்​காளர் (சிஏ) அசோக் விஜய​வர்​கி​யா. இவருக்கு கடந்த 2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் வாட்​ஸ்- அப் மூலம் ஒரு தகவல் வந்​துள்​ளது.

திவ்யா என்று அறி​முகப்​படுத்​திக் கொண்ட அந்த நபர், தான் ஒரு முதலீட்டு ஆலோ​சகர் எனக் கூறி​யுள்​ளார். அவர் ‘USDT டெதர்’ என்ற கிரிப்​டோ கரன்​சி​யில் முதலீடு செய்​தால் மிகக் குறுகிய காலத்​தில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை காட்டியுள்​ளார். இதை நம்​பிய வர்​கியா சிறிய தொகையை முதலீடு செய்​துள்​ளார். தொடக்​கத்​தில் அந்த முதலீட்​டுக்​குப் போலி இணை​ய தளம் மூலம் லாபம் காட்​டப்​பட்​டது.

மேலும், அவரது நம்​பிக்​கை​யைப் பெற உண்​மை​யில் ரூ.1.88 லட்சம் லாபத் தொகை அவரது வங்​கிக் கணக்​கில் வரவு வைக்கப்பட்​டது. நம்​பிக்கை வந்​தவுடன், விஜய​வர்​கியா மற்​றும் அவரது வணி​கக் கூட்​டாளி​கள் அடுத்​தடுத்து பெரும் தொகையை முதலீடு செய்​துள்​ளனர். போலி தளத்​தில் ரூ.33 கோடி லாபம் இருப்பது போலக் காட்​டியது. ஆனால், அதை சமீபத்​தில் எடுக்க முயன்​ற​போது வரு​மான வரி மற்​றும் ‘ரிஸ்க் மார்​ஜின்’ என்ற பெயரில் மேலும் பல கோடிகளைக் கேட்டு உள்​ளனர்.

இதனால் சந்​தேகமடைந்த அவர் சைபர் பிரிவு போலீ​ஸாரிடம் புகார் செய்​துள்​ளார். விஜய​வர்​கியா மொத்​தம் ரூ.21.06 கோடியை இழந்​துள்​ளார். இந்த மோசடி குறித்து குவாலியர் சைபர் பிரிவு போலீ​சார் தீவிர விசா​ரணை நடத்​தி, இது​வரை பல்​வேறு வங்​கிக் கணக்​கு​களில் இருந்த சுமார் ரூ.2 கோடியை முடக்​கி​யுள்​ளனர்.

திருடப்​பட்ட பணம் போலீ​ஸாரிடம் சிக்​காமல் இருக்க 4 அடுக்குகளாகப் பிரிக்​கப்​பட்​டு, நாடு முழு​வதும் உள்ள சுமார் 20,000-க்​கும் மேற்​பட்ட கணக்​கு​களுக்கு மிக வேக​மாக மாற்றப்பட்டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது. இதில் கர்​நாட​கா, தமிழ்நாடு உள்​ளிட்ட 12-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களைச் சேர்ந்த பிறரின் (மியூல்) கணக்​கு​கள் பயன்​படுத்​தப்​பட்​டுள்​ளன. இந்த கிரிப்டோ மோசடிக்கு பயன்​படுத்​திய அமெரிக்க குறியீடுகொண்ட வாட்​ஸ்​அப் எண் (+1) மற்​றும் போலி வர்த்தக இணை​ய தளத்​தின் ஐபி முகவரி​களைப்​ போலீ​ஸார்​ ஆராய்ந்​து வரு​கின்​றனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here