Google search engine
 சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்​கில் கேரள முன்​னாள் முதல்​வர் பினராயி விஜயன் வீடு உட்பட அவருடன் தொடர்​புடைய 10 இடங்​களில் அமலாக்​கத்​துறை நேற்று சோதனை நடத்​தி​யது. கடந்த மாதம் நடை​பெற்ற கேரள சட்​டப்​பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் தலை​மையி​லான கூட்​டணி வெற்றி பெற்​றதை தொடர்ந்​து, மார்க்​சிஸ்ட் மூத்த தலை​வர் பின​ராயி விஜயன் சமீபத்​தில் ஆட்​சியை இழந்​தார். இதையடுத்து அவர் கேரள சட்​டப் பேர​வை​யின் எதிர்க்​கட்சி தலை​வ​ராகப் பொறுப்​பேற்​றுள்​ளார். பின​ராயி விஜயனின் மகளும் முன்​னாள் தகவல்...
ராஜஸ்தானில் பாகிஸ்தானை ஒட்டிய எல்லை மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பான மறு ஆய்வுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பிகானெரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, மாநில அரசின் உயர் அதிகாரிகள், 5 எல்லை மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்லை மாவட்டங்களில் நடக்கும் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள்...
அனைத்து மக்​களுக்​கும் பொது​வான சட்​டங்​களை கொண்டு வர பொது சிவில் சட்​டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வரு​கின்​றன. உத்​த​ராகண்ட, குஜ​ராத் மாநிலங்​களை அடுத்து அசாம் சட்டப்பேரவை​யில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் ஒரு​வர் ஒன்​றுக்கு மேற்பட்ட திரு​மணம் செய்​தால் 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க​வும், திரு​மணம் செய்​யாமல் ஒன்​றாக சேர்ந்து வாழ்வதைபதிவு செய்​யா​விட்​டால் 3 ஆண்டு சிறை தண்​டனை...
இன்று நாட்​டின் பெரும்​பாலான மாநிலங்​களில் பக்ரீத் கொண்​டாடப்​படு​கிறது. ஜம்மு காஷ்மீர் உட்பட சில பகுதிகளில் பக்​ரீத் நேற்றே கொண்​டாடப்​பட்​டது. வழக்​க​மாகப் பக்ரீத் சிறப்பு தொழுகை​யின் போது மசூ​திக்​குள் போது​மான இட வசதி இருப்​ப​தில்​லை. அதனால், மசூ​திக்கு வெளியே சாலைகளிலும் தொழுகை நடத்தி வந்​தனர். தற்​போது இதற்கு எதிர்ப்​பு​கள் கிளம்பி உள்​ளன. உ.பி.​யில் சாலைகளில் தொழுகை நடத்த அனு​மதி இல்​லை. மத வழி​பாட்​டுத் தலங்​களில் மட்​டுமே தொழுகை நடத்த வேண்​டும். அதிக...
குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகத்​தில் கோகைன் போதைப்​பொருள் கடத்​தப்​படு​வ​தாக மாநில தீவிர​வாத தடுப்​புப் படை​யினருக்​குத் தகவல் கிடைத்​தது. இதையடுத்து கடந்த செவ்​வாய்க்​ கிழமை நள்​ளிரவு துறைமுகத்துக்கு வந்த குஜ​ராத் ஏடிஎஸ் படை அதி​காரி​கள், கடலோரக் காவல் படை அதி​காரி​களு​டன் சோதனை நடத்​தினர். அப்​போது கடல் பகு​தி​யில் ஒரு கப்​பல் நங்​கூரமிட்டு நிறுத்​தப்​பட்டு இருப்​ப​தைக் கண்ட அதி​காரி​கள் அந்​தக் கப்​பலில் சோதனை நடத்​தினர். அப்​போது அங்கு 6 பைகளில் 118 கிலோ எடை​யுடைய...
சீனா​வின் ஆதிக்​கத்​துக்​குப் போட்​டி​யாக, முக்​கிய தாதுக்கள் மற்​றும் அரிய வகை தனிமங்​கள் குறித்த கட்​டமைப்பு ஒப்​பந்​தத்​தில் இந்​தி​யா​வும் அமெரிக்கா​வும் நேற்று கையெழுத்திட்டன. அமெரிக்க வெளி​யுறவுத்​துறை அமைச்​சர் மார்கோ ரூபியோ 4 நாள் அரசு முறை பயண​மாக இந்​தியா வந்​திருந்​தார். இந்​தப் பயணத்​தின் இறுதி நாளான நேற்று டெல்​லி​யில் நடை​பெற்ற ‘குவாட்' நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​கள் கூட்​டத்​தில் ரூபியோ பங்​கேற்​றார். ஜப்​பான், ஆஸ்​திரேலி​யா, இந்​தியா ஆகிய மற்ற நாடு​களின் வெளி​யுறவு அமைச்​சர்​களும்...
பிஹார் மாநிலத்​தில் உள்​ளூர் சுற்​றுலா உள் ​கட்டமைப்பை மேம்​படுத்​தும் நோக்​கில், அனைத்து மாநில அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​ முறை தங்களது குடும்​பத்​தினருடன் சுற்​றுலா செல்​வது கட்​டா​யம் என்று அம்​மாநில அரசு அதிரடி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது குறித்து மாநில அரசின் பொது நிர்​வாகத் துறை வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநில அரசுத் துறை​களில் பணிபுரி​யும் அனைத்து அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள், மூன்று மாதங்​களுக்கு...
கர்​நாடக முதல்​வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகு​மார் முயற்​சித்து வரும் நிலை​யில், டெல்லியில் கூட்​டத்​தில் சித்​த​ராமையா தனது பதவியை விட்டுத்தர மறுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. கர்​நாட​கா​வில் முதல்​வர் பதவியை டி.கே.சிவகு​மாருக்கு வழங்க வேண்​டும் என அவரது ஆதரவு எம்​எல்​ஏக்​கள் மீண்டும் போர்க்கொடி தூக்​கினர். இதையடுத்து காங்​கிரஸ் மேலிடம் ஆலோ​சனை நடத்​து​வதற்​காக டெல்​லிக்கு வரு​மாறு சித்தராமையா​வுக்​கும், டி.கே.சிவகு​மாருக்​கும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இரு​வரும் டெல்​லிக்கு சென்​றனர். நேற்று மாலை​யில் டெல்​லி​யில் உள்ள‌ இந்​திரா பவனில்...
சட்​ட​விரோத குடியேற்​றத்​தால் ஏற்​பட்​டுள்ள மக்​கள் தொகை மாற்​றங்​களை ஆராய, ஓய்​வு​பெற்ற நீதிபதி தலைமையில் மத்​திய அரசு ஒரு உயர்​நிலைக் குழுவை அமைத்துள்​ளது. இது தொடர்​பாக மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: சட்​ட​விரோத குடியேற்​றம், ஊடுரு​வல் மற்​றும் பிற காரணங்​களால் ஏற்​படும் அசா​தாரண மக்​கள் தொகை மாற்​றம், எந்​தவொரு நாட்​டின் நிகழ்காலத்​துக்​கும் எதிர்​காலத்​துக்​கும் ஒரு மிகப் பெரிய சவாலாக விளங்​கு​கிறது. இதைக் கருத்​தில்...
திரு​மணத்​துக்கு மணப்​பெண்​களை ஏற்​பாடு செய்து தரு​வ​தாகக் கூறி 42 குடும்​பத்​தாரை ஏமாற்​றிய தம்​ப​தியை மத்திய பிரதேச போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். மத்​திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில் திருமண வரன் மையத்தை நடத்தி வருபவர்​கள் முகேஷ் பைரங்​கி, சுனிதா தம்பதி​யினர். ஆனால், இவர்​கள் பெரும்​பாலும் வரன் பார்த்து தராமல் மணப்​பெண் விவரம் கேட்டு வருபவர்​களை ஏமாற்றி வந்துள்​ளனர். இந்​நிலை​யில் அண்​மை​யில் மிகப்​பெரிய கூட்​டுத் திரு​மணத்தை நடத்​தப் போகிறோம் என்று கூறி 42...