நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பலரும் பங்கேற்ற கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணியில் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. மேலும், போராட்டம் காரணமாக நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகையின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள் கசிவு ஆகியவற்றுக்கு எதிராக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து, நாடாளுமன்றத்தை நோக்கிச்...
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மீண்டும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த 2 மசோதாக்களும் மக்களவையில் தோல்வியடைந்தன. ஆனால் இந்த முறை, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் (டிஎம்சி), உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (யுபிடி) ஆகியவற்றின் உட்கட்சிப் பூசல்களும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் திடீர் மனமாற்றமும் சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும், மூன்றில் இரண்டு...
ஓடிபி இல்லாமல் 1 மணி நேரத்தில் ரூ.78 லட்சம் சுருட்டிய மர்ம நபர்கள் – மும்பை போலீஸ் விசாரணை
admin - 0
மும்பையில் உள்ள ஒரு தங்க நகைக் கடன் நிறுவனத்தில் ஓடிபி ஏதுமின்றி ஒரு மணி நேரத்தில் ரூ.78.10 லட்சத்தை மர்ம நபர்கள் சுருட்டியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை பரேல் பகுதியில் ஒரு தங்க நகைக் கடன் நிறுவனம் உள்ளது. அதன் கடன் வழங்கும் மென்பொருள், வங்கியுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களுக்கு கடன் ஒப்புதலானதும், சிறப்பு மென்பொருள் இணைப்பு மூலம் வங்கிக்குத் தானாகவே தகவல் சென்றுவிடும் வசதி இருந்தது.
இதைப் பயன்படுத்திய...
ஆந்திரா, கேரளா, கர்நாடகா என தென்னிந்திய மாநிலங்களில் கரோனா தொற்று தற்போது மெல்ல பரவி வருகிறது.
ஆந்திராவைப் பொறுத்தவரை கடப்பா மாவட்டத்தில் தான் இத்தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து நெல்லூர், குண்டூர், ஓங்கோல், விசாகப்பட்டினம், காக்கிநாடா என மாநிலம் முழுவதும் தற்போது 22-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் கடப்பாவில் மட்டுமே 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குண்டூரில் 2 பேர், மற்ற...
மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்குப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.
அப்போது இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த முகமது யூசுப் (எ) காக்கி (எ) ஜாகிர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.85 கோடி மதிப்புள்ள 6.2 கிலோ எடையுள்ள செயற்கை போதைப் பொருள் (கிரிஸ்டல் மெத்த பெட்டமைன்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, போதைப் பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில்...
அமெரிக்கா, சீனாவைத் தொடர்ந்து இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து சாதனை படைத்துள்ளது.
‘விக்ரம்-1’ ராக்கெட் பயண வெற்றியைத் தொடர்ந்து, ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ நிறுவனத்தின் இணை நிறுவனர்கள் பவன்குமார் சந்தனா, நாகா பரத் தாகா ஆகியோரை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது பிரதமர், “இந்தியாவை நீங்கள் பெருமைப்படுத்தியுள்ளீர்கள். நம் விண்வெளி கனவுகள் குறித்து பலர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், விண்வெளியில் இந்தியாவின்...
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் பல்வேறு முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நீட் முறைகேடு, விலைவாசி உயர்வு, அயோத்தி ராமர் கோயில் காணிக்கை பணம் திருட்டு, சோனம் வாங்சுக் உண்ணாவிரதம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கி ஆக. 13-ம் தேதி வரை நடக்க உள்ளது. நாட்டில் உயர்கல்வியை நிர்வகிக்க தனித்தனியே செயல்படும்...
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டத்தில் நேற்று அதிகாலை பெய்த கனமழையால் திடீர் வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டன. இதில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் மாயமாகியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இதையடுத்து நேற்று அதிகாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் நிலச்சரிவும் ஏற்பட்டது. வெள்ளத்தில் 250-க்கும் மேற்பட்ட கார்கள் அடித்து செல்லப்பட்டன. பல வீடுகள் இடிந்தன....
திருமணமானவர் ‘லிவ்-இன்’ உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை: பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்
admin - 0
பொது சிவில் சட்ட மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இதுகுறி்த்து முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது: கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. விவாகரத்து என்பது சட்டப்பூர்வ நடைமுறை மற்றும் நீதிமன்ற தீர்ப்பு மூலமாக மட்டுமே செல்லுபடியாகும். மேலும், திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, லிவ்-இன் உறவில் இருக்கும் தம்பதிகள் ஒரு மாதத்திற்குள் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதற்கு...
நாட்டின் 80-வது சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக டெல்லி செங்கோட்டை நேற்று முன்தினம் முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய தொல்பொருள் ஆய்வு துறை வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 80-வது சுதந்திர தினம் அடுத்த மாதம் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். இதற்காக பிரம்மாண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போதே தொடங்கியுள்ளன.
டெல்லி செங்கோட்டை...










