Google search engine
ஹெலிகாப்டரில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பலை தகர்க்கும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்), டிஆர்டிஓ மற்றும் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தன. கடற்படை பயன்பாட்டுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்) டிஆர்டிஓ தயாரித்தது. சுமார் 50 கி.மீ தூரத்துக்குள் உள்ள இலக்கை, இந்த ஏவுகணை மூலம் துல்லியமாக தகர்க்கமுடியும். இந்த ஏவுகணையில் ‘மேன்-இன்- லூப்’ என்ற தனிச்சிறப்பான அம்சம் உள்ளது. இதன் மூலம் ஹெலிகாப்டரில்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது குறித்து இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பு ஒரே நாணயம், ஒரே விசா நடைமுறையை பின்பற்றுகின்றன. கடந்த 2019-ம் ஆண்டு...
நீதிமன்றம் உத்தரவிட்டும் அதை செங்கல் சூளை சுமைதூக்கும் தொழிலாளர்கள் மதிக்காததால் தான் நடத்தி வந்த செங்கல் சூளையை மூடும் நிலைமைக்கு பெண் உரிமையாளர் தள்ளப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் திருபுரம் அருகிலுள்ள பழையகடா பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பகுமாரி (57). இவர் தனது கணவர் தங்கப்பனுடன் சேர்ந்து பராசாலா பகுதியில் செங்கல் சூளையை நடத்தி வந்தார். கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் தங்கப்பன். இந்நிலையில் செங்கல் சூளையில்...
மணிப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைப்பினர் வரும் மார்ச் 6-ம் தேதிக்குள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையவேண்டும் என்று மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லா காலக்கெடுவை நீட்டித்துள்ளார். மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குக்கி இனத்தவரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரம் இன்று வரை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் வன்முறையில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்கள், பாதுகாப்புப் படையினரிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற ஆயுதங்களை தந்துவிட்டு...
பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையில் பாஜக செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: பட்டியலின சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் அரசியலமைப்பு சட்ட அமைப்புகளில் ஒன்றாகும். ஆனால் ஆணையத்தின் இரு முக்கிய பதவிகள் கடந்த ஓராண்டாக காலியாக உள்ளன. இதன்மூலம் ஆணையம் பலவீனப்படுத்தப்பட்டு உள்ளது. சமூக அநீதிகளை எதிர்கொள்ளும் பட்டியலின மக்களுக்காக எஸ்சி தேசிய...
டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து அம்பேத்கர் மற்றும் பகத்சிங் படங்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் கூச்சலிட்டனர். இதனால் 21 எம்எல்ஏக்கள் 3 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் அவர்கள் கடந்த இரண்டு நாட்களாக டெல்லி சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், சட்டப்பேரவை வளாகத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. இந்நிலையில் எதிர்க்கட்சி...
தலைநகர் அமராவதியில் உள்ள பேரவையில், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் கூட்டணி அரசு சார்பில் ஆந்திர மாநில நிதி அமைச்சர் வி. கேஷவ் ரூ.3.22 லட்சம் கோடியில் இந்த 2025-26ம் வருவாய் ஆண்டுக்காக நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், விவசாய நல திட்டங்களுக்காக ரூ.44 லட்சம் கோடியும், அன்ன தாதா சுக்கீ பவ திட்டத்துக்கா ரூ. 6,300 கோடியும், போலவரம் அணைக்கட்டும் திட்டத்துக்காக ரூ.6,705 கோடியும், அடிப்படை...
அரசின் நல திட்டங்களுக்கு கோயில் நிதியை பயன்படுத்தும் இமாச்சல காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இமாச்சல மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியாக நிகழ்ந்த பேரழிவுகரமான நிலச்சரிவு, திடீர் வெள்ளத்தால் அம்மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதையடுத்து, அரசு நில திட்டங்களுக்கான நிதியை திரட்ட அரசின் கவனம் கோயில்களை நோக்கி திரும்பியுள்ளது. இதுதொடர்பாக, கடந்த ஜனவரி 29-ம் தேதி இமாச்சலின்் சமூக...
மேற்கு அருணாச்சலில் வசிக்கும் மோன்பா சமூகத்தை சேர்ந்த 24 வயது பெண் லீகே சோமு. வேளாண் பட்டதாரியான இவர் 200 ஆண்டுகள் பழமையான தனது மூதாதையர் வீட்டை ஒரு வாழும் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளார். இங்குள்ள கலைப்பொருட்கள் மட்டுமின்றி மண் மற்றும் கல்லைக் கொண்டு பண்டைய மோன்பா தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட இந்த வீடும் ஒரு அருங்காட்சியகமாக உள்ளது. மோன்பா சமூகத்தின் கட்டிடக் கலை, வாழ்க்கை முறை மற்றும் பாரம்பரியத்தை இது காட்டுகிறது....
‘‘புதிய தொழில்நுட்பங்களை நாம் அறிந்துகொள்ள வேண்டும்’’ என மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுரை வழங்கினார். தேசிய அறிவியல் தினம், ஹைதராபாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டிஆர்டிஓ) அரங்கில் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு, மாணவர்களிடையே பேசியதாவது: நோபல் பரிசை வென்ற சர். சி.வி. ராமன் அவர்கள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி...