இந்தியா வளர்ந்த நாடாக மாற வாராணசியை முன்மாதிரியாக கொண்டு திட்டங்கள் அமல்படுத்தப்படும்: நிதி ஆயோக் துணைத் தலைவர் தகவல்
admin - 0
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் பழம்பெரும் கல்வி நிறுவனமான பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் உள்ளது. இதன் வளாகத்தில் இந்திய பொருளாதார அளவீட்டு சங்கத்தின் 59-வது மாநாடு நடைபெற்றது.
இதில் முக்கிய விருந்தினராக பங்கேற்ற மத்திய அரசின் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள நகரங்களில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து நவீன வளர்ச்சியை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வாராணசியின் வளர்ச்சி ஒரு முன்மாதிரியாக...
துபாயில் இருந்து 14.8 கிலோ தங்க நகைகளை கடத்தி வந்ததாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ரன்யா ராவ் துபாயில் இருந்து...
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் ஐஎஸ்ஐ சதி செய்தது அம்பலம்: உ.பி இளைஞர் கைது
admin - 0
அயோத்தி ராமர் கோயிலை குண்டு வீசி தகர்க்க பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ செய்த சதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உ.பி. இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 2 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் புதிதாக கட்டப்பட்டு கடந்தாண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. அப்போது முதல் அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாடு முழுவதும் இருந்து வந்து செல்கின்றனர்.
இங்கு 1529-ம் ஆண்டு முகலாயர்...
பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கு விவகாரத்தில் மகாராஷ்டிர அமைச்சரான தனஞ்செய் முண்டே நேற்று ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்த்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை விவகாரம் மகாராஷ்டிர மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பீட் மாவட்டத்தில் பிரபலமான பஞ்சாயத்துத் தலைவராகவும், மக்களின் நன்மதிப்பைப் பெற்றவராகவும் சந்தோஷ் தேஷ்முக் இருந்ததால் அவரது கொலை வழக்கு...
பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதியாக தகுதியானவர்கள்தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பார்வைக் குறைபாடு உடைய ஒருவர் நீதிபதி பணிக்கு விண்ணப்பிக்க விரும்பி உள்ளார். ஆனால், பார்வை குறைபாடு உடையவர்கள் நீதிபதி பணியிடத்துக்கான தேர்வில் பங்கேற்க முடியாது என மத்திய பிரதேச நீதித் துறை சேவை விதிகள் (6ஏ) கூறுகின்றன. இந்த விதிகளை ரத்து செய்யக் கோரி, பார்வைக் குறைபாடு உடையவரின்...
பூலன்தேவியை போல் கொலை, கொள்ளையில் ஈடுபட்டு உ.பி.யின் சம்பலில் அச்சுறுத்தலாக இருந்த குசுமா உயிரிழப்பு
admin - 0
உ.பி. ராஜஸ்தான் மற்றும் ம.பி. ஆகிய மாநிலங்களில் பரவியுள்ள பகுதி சம்பல் பள்ளத்தாக்கு. இந்த பள்ளத்தாக்கு கொள்ளை கும்பலின் கேந்திரமாக விளங்கியது. ஜலோனின் டிக்ரி கிராமத்தில் இருந்து சம்பல் கொள்ளை கும்பலுக்கு மாறிய குசுமா நைனின் வாழ்க்கை மர்மம் நிறைந்தது.
சமாஜ்வாதி கட்சியில் இணைந்து எம்.பி.யான கொள்ளை கும்பல் தலைவி பூலன் தேவியை அடுத்து குசுமா நைனின் பெயரும் பொதுமக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியது. குசுமா நைன் 7 ஆண்டாக ஆயுள்...
இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம்: உலக வன உயிரின தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம்
admin - 0
உலக வன உயிரின தினத்தையொட்டி குஜராத்தில் கிர் தேசிய பூங்காவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சிங்கங்களை பார்வையிட்டார். இயற்கையை பாதுகாப்பது இந்தியாவின் கலாச்சாரம் என்று அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த சனிக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தின் ஜாம் நகருக்கு சென்றார். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் குழுமத்தின் 3,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட வன்தாரா வனப்பகுதியை அவர் பார்வையிட்டார். இது யானைகள் சரணாலயமாக...
தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 ஆயிரம் கோழிகள் பரிதாபமாக உயிரிழந்தன. இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
ஆந்திராவின் கிருஷ்ணா, கோதாவரி மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் கடந்த மாதம் உயிரிழந்தன. பறவை காய்ச்சலே இதற்கு காரணம் என ரத்தப் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில் பண்ணை கோழிகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தமிழகம், கர்நாடகா, தெலங்கானாவிலும் ஆந்திராவின் கோழிகள் விற்பனை ஆகவில்லை. இதனால் கோழி...
மகாராஷ்டிராவில் கிராமத் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் தனஞ்சய் முண்டேவின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தின் மசாஜோக் கிராமத்தின் தலைவராக இருந்த சந்தோஷ் தேஷ்முக் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி கடத்தப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு எரிசக்தி நிறுவனத்தை குறிவைத்து மிரட்டிப் பணம் பறிக்கும் முயற்சியைத் தடுக்க முயன்றதாகக்...
உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், சிக்கிய 57 தொழிலாளர்களில் 32 தொழிலாளர்கள் உடனடியாக மீட்கப்பட்ட நிலையில் எஞ்சிய 25 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பத்ரிநாத் கோயிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மனா கிராமத்தில் நேற்று கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ) முகாமுக்கு அருகே இந்த பனிச்சரிவு ஏற்பட்டதால்...










