Google search engine
ஆபரேஷன் சிந்தூரால் இந்தியர்களின் தலைநிமிர்ந்தது. தீவிரவாதத்துக்கு எதிரான போரில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இதன்படி 122-வது மனதின் குரல் நேற்று ஒலிபரப்பானது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூரின்போது நமது எல்லைக்கு அப்பால் உள்ள தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த ராணுவ நடவடிக்கையால்...
தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் சேர்க்க உதவ வேண்டும் என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பஹ்ரைன் அரசிடம் வலியுறுத்தி உள்ளார். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து உலக நாடுகளிடம் எடுத்துரைக்க, அனைத்து கட்சி எம்பிக்கள் அடங்கிய 7 குழுக்களை மத்திய அரசு நியமித்து உள்ளது. இக்குழுவினர் தனித்தனியாக வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதில், பாஜக எம்.பி. வைஜெயந்த் பாண்டா தலைமையிலான குழு சவுதி அரேபியா,...
‘‘தீவிரவாத தாக்குதல் மீது நடவடிக்கை எடுக்க, பாகிஸ்தானுக்கு கடந்த 2015-ல் இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டது’’ என பதன்கோட் தாக்குதலை அமெரிக்காவில் இந்திய குழுவுக்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் எம்.பி சசிதரூர் நினைவுபடுத்தினார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. இதில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மற்றும் விமானப்படை தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 4 நாட்களாக நடைபெற்ற போர் கடந்த 10-ம்...
மூங்கில் பயிர் சேதமடைந்த விவகாரத்தில் விவசாயிக்கு மின் நிறுவன ஊழியர்கள் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர மாநில நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 68 வயது விவசாயி, தனது நிலத்தில் 5,000 மூங்கில் மரங்களை நட்டு வளர்த்துள்ளார். அந்த மூங்கில்கள் விற்பனைக்கு வர பாதி காய்ந்திருந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் 22-ல் அந்த நிலத்துக்கு மேலே சென்ற மகாராஷ்டிரா மாநில...
 மத்​தி​யப்​ பிரதேசத்​தைச்​ சேர்​ந்​த ​பாஜக அமைச்​சர்​ ​விஜய்​ ஷா, பெண்​ ​ராணுவ அ​தி​காரி சோபி​யா குரேஸியை தொடர்​புபடு​த்​தி தெரி​வித்​த கருத்​து சர்ச்​சை ஏற்​படு​த்​தி​யது. இதற்​கு கண்​டனம்​ வலுத்​த​தால்​ அவர்​ மன்​னிப்​பு கேட்​டார்​. இந்​நிலை​யில்​ ஹரி​யா​னா​வின்​ பி​வானி நகரில்​ நடை​பெற்​ற ம​ராட்​டிய ​ராணி அகில்​யா​பாய்​ ஹோல்​கர்​ 300-வது பிறந்​த ​தின நிகழ்ச்​சி​யில்​ பங்​கேற்​ற ​பாஜக ​மாநிலங்​களவை எம்​.பி ​ராம்​ சந்​தர்​ ஜங்​ரா பேசி​ய​தாவது: பஹல்​காம்​ தீ​விர​வாத ​தாக்​குதலின்​ ​போது கணவர்களை இழந்​த...
 ஹைதராபாத்தை சேர்ந்த பீபிள் பல்ஸ் நிறுவனம் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. இதில் 10 ஆயிரத்து 481 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, அதன் முடிவுகளை தொகுத்து வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: முதல்வர் சித்தராமையா தலைமையிலான‌ காங்கிரஸ் ஆட்சி 48.4% பேர் சிறப்பாக இருப்பதாக கூறியுள்ளனர். அடுத்த முதல்வராக யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என்ற கேள்விக்கு சித்தராமையா முதலிடத்தில் இருக்கிறார். அடுத்தடுத்த இடங்களில் டி.கே.சிவகுமார், எடியூரப்பா, விஜயேந்திரா (எடியூரப்பாவின்...
உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை காரணமாக பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா சீசன் தொடங்கியுள்ள நிலையில் இது போக்குவரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தாரி தேவி கோயிலில் இருந்து பத்ரிநாத் செல்லும் நெடுஞ்சாலையில் நேற்று மாலை 6 கி.மீ. தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பது கூகுள் ரியல்டைம் வரைபடம் மூலம் தெரியவந்தது. இந்த சாலை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த என்எச்-7 தேசிய நெடுஞ்சாலைதான்...
தேஜ் பிரதாப் யாதவ் தனது காதலியுடன் இருக்கும் படம் முகநூலில் வெளியானதை அடுத்து, அவரை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியிலிருந்தும், குடும்பத்திலிருந்தும் 6 ஆண்டுகள் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ்(37). இவருக்கும் பிஹார் முன்னாள் முதல்வர் தரோகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கணவர்...
அபாயகரமான ரசாயனங்களை ஏற்றிச் சென்ற சரக்கு கப்பல் கேரள கடல் பகுதியில் மூழ்கியது. அந்த கப்பலை இயக்கிய மாலுமிகள் உட்பட 24 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து லைபீரியாவை சேர்ந்த சரக்கு கப்பல் கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டது. இந்த கப்பலில் 100 கன்டெய்னர்கள் இருந்தன. இதில் 13 கன்டெய்னர்களில் அபாயகரமான ரசாயனங்களும் 12 கன்டெய்னர்களில் கால்சியம் கார்பைடும் இருந்தது. மேலும்...
டெல்லி சட்டப்பேரவையில் வீர சாவர்க்கர் மற்றும் தயானந்த் சரஸ்வதி படம் அமைக்கப்பட உள்ளது. இதற்கு டெல்லியின் எதிர்கட்சியான ஆம் ஆத்மி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டெல்லி சட்டமன்ற சபாநாயகர் விஜேந்தர் குப்தா நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதில் அவர், வீர சாவர்க்கர், மகரிஷி தயானந்த சரஸ்வதி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோரின் படங்கள் விரைவில் டெல்லி சட்டமன்ற வளாகத்தில் நிறுவப்படும் எனக் கூறினார். இதற்கான...