பஹல்காம் தாக்குதலை கண்டித்து டெல்லியில் நேற்று சந்தைகள் மூடப்படிருந்தன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் வர்த்தகர்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று சந்தைகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கான் மார்க்கெட் வியாபாரிகள் பேரணி நடத்தினர், இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி...
காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது சுற்றுலா பயணிகள் தப்பிப்பதற்கு உதவி செய்து துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான விமானப்படை வீரர் தாகே ஹைல்யாங்குக்கு மாநில அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும் என அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் சுபான்சிரி மாவட்டம் தஜாங் கிராமத்தை சேர்ந்தவர் தாகே ஹைல்யாங். விமானப்படையில் கார்போரல் அந்தஸ்தில் பணியாற்றும் இவர், விடுமுறையில் தனது மனைவியுடன் காஷ்மீருக்கு சுற்றுப் பயணம்...
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் 2 பேரின் வீடுகளை தரைமட்டமாக்கிய பாதுகாப்பு படை
admin - 0
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 2 தீவிரவாதிகளின் வீடுகளை பாதுகாப்புப் படையினர் வெடிவைத்து தகர்த்தனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் லஷ்கர் தீவிரவாத இயக்கத்தின் 4 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. தாக்குதல் நடத்தப்பட்ட பிறகு தீவிரவாதிகள் அடில் தோகர், ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர்.
அனந்தநாக் பகுதியில் உள்ள அடில் வீட்டிலும், அவந்திபோரா...
பஹல்காம் பகுதியில் பாதுகாப்பு இல்லாதது ஏன்? – எதிர்க்கட்சிகள் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம்
admin - 0
காஷ்மீரின் பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன் என்ற எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக டெல்லியில் நேற்று முன்தினம் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
குறிப்பாக, சுற்றுலா தலமான பஹல்காமில் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியமர்த்தப்படாதது ஏன்...
உ.பி.யில் முதல்வர் பயிற்சித் திட்டத்தின் 13 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் வென்று குடிமைப்பணி பெற்றுள்ளனர். மேலும் 280 மாணவர்கள், மாநில குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உ.பி.யில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக முதல்வர் அபியுதயா திட்டம் கடந்த 2021 முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் சமூக நலத்துறை நடத்தும் இத்திட்டம் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் பயின்ற...
குஜராத்தில் ரூ.21 ஆயிரம் கோடி போதைப்பொருள் பறிமுதலுக்கும் பஹல்காம் தாக்குதலுக்கும் தொடர்பு உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலக...
பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஜம்மு - காஷ்மீர் மக்களுக்கு மிகவும் நியாயமற்ற ஒரு ஆவணம்; நாங்கள் அதை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைப்புகளுடன் உமர் அப்துல்லா நேற்று (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்தினார். ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஆகியவற்றில் பஹல்காம்...
”பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவுடன் இணையுங்கள்” – பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி வலியுறுத்தல்
admin - 0
பாகிஸ்தானை இரண்டாக பிரித்து அதன் வசம் உள்ள காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தலைநகர் ஹைதராபாத்தில் மெழுகு வர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இதில், முதல்வர் ரேவந்த் ரெட்டி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் தலைவர் அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது...
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது: ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
admin - 0
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிரான பொறுப்பற்ற பேச்சுக்களை அனுமதிக்க முடியாது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், அலோகாவில் நடைபெற்ற பாரத் ஜோடோ நடைப்பயணத்தின்போது செய்தியாளர்களுடன் ராகுல் காந்தி பேசினார். அப்போது வீர சாவர்க்கர் குறித்து ராகுல் அவதூறு கருத்து தெரிவித்ததாக லக்னோ மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபபாய் படேல் போன்றோர்...
இந்திய கடற்படையில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றிய வினய் நர்வால் திருமணமான ஒரே வாரத்தில், காஷ்மீருக்கு தேன்நிலவு சென்றபோது தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலுக்கு நேற்று கடற்படை சார்பில் இறுதி மரியாதை அளிக்கப்பட்டது.
இந்திய கடற்படையில் லெப்டினன்ட்டாக பணியாற்றியவர் வினய் நர்வல் (26). ஹரியானாவைச் சேர்ந்த இவர் கொச்சியில் பணியாற்றுகிறார். இவருக்கும் ஹிமான்சி என்ற பள்ளி ஆசிரியைக்கும் கடந்த 16-ம் தேதிதான் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்கு சுவிட்சர்லாந்து செல்ல இவர்கள்...










