இந்தியா-நார்டிக் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, வரும் மே 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி நார்வே செல்கிறார். வடக்கு ஐரோப்பா, ஆர்க்டிக் மற்றும் வட அட்லான்டிக் கடல் பகுதியில் உள்ள டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகியவை நார்டிக் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், 3-வது இந்தியா-நார்டிக் உச்சி மாநாடு வரும் மே 15 மற்றும் 16 தேதிகளில் நார்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற உள்ளது.
இதில்,...
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர மேம்பாட்டு ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு மைசூருவின் பிரதான இடத்தில் 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட,...
சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து அம்மாநில காவல் துறையினர் நேற்று கூறியதாவது: சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தின் கொண்டகோன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிலாம்-பார்கம் கிராமங்களில் பாதுகாப்பு படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினர்.
அப்போது, மாவோயிட்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற இந்த என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி,...
‘‘வரலாற்று சிறப்பு மிக்க செய்திதாள் நிறுவனத்தை, சோனியா காந்தி குடும்பம் தனியார் தொழிலாகவும், ஏடிஎம்-ஆகவும் மாற்றியுள்ளது’’ என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஆங்கிலத்தில் நேஷனல் ஹெரால்டு, இந்தியில் நவஜீவன், உருது மொழியில் குவாமி ஆவாஸ் என்ற செய்திதாள்களை தொடங்க சுதந்திர போராட்ட வீரர்களிடம் நிதிபெற்று அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமிடெட் (ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு கடந்த 1937-ம் ஆண்டு தொடங்கினார்.
கடந்த 2008-ல் இந்நிறுவனம் முடங்கியது. இந்நிறுவனம்...
நாசிக் நகரிலுள்ள தர்கா இடிக்கப்பட்டபோது நடந்த வன்முறைச் சம்பவத்தில் 21 போலீஸார் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் காத்தேகள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சத்பீர் தர்கா என்ற பெயரில் தர்கா உள்ளது. இதையடுத்து அந்த தர்காவை இடித்து அகற்ற நாசிக் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தர்காவை இடித்து அகற்றலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து...
குடிநீர் தொட்டியில் விஷம் கலந்து அரசுப் பள்ளியில் படிக்கும் 30 மாணவர்கள் மர்ம நபர்கள் கொல்ல முயன்ற சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று முன்தினம் பள்ளிகள் திறக்கப்பட்டன.
தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டம், தரம்பூரி அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 30 மாணவ, மாணவியரும் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். இதற்கு சற்று முன்னதாக பள்ளிக்கு வந்த மதிய உணவு...
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த 2-ம் தேதி மக்களவையில் வக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு...
நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
1937ல் சுதந்திர போராட்ட வீரர்கள் சுமார் 5,000 பேரிடம் இருந்து நிதி பெற்று அவர்களை பங்குதாரர்களாக சேர்த்து அசோசியேட்டட் ஜேர்னல்ஸ் லிமெிடெட்(ஏஜெஎல்) என்ற நிறுவனத்தை ரூ.5 லட்சம் முதலீட்டில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு உருவாக்கினார். கடந்த 2010-ம் ஆண்டு நிலவரப்படி,...
நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? – வக்பு திருத்த சட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி
admin - 0
நீதித் துறையும் நாடாளுமன்றமும் பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும். ஒருவேளை நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? இரு தரப்புகளுக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
பல்வேறு ஆய்வுகள், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த...
சர்வதேச சைபர் மோசடி தொடர்பாக 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதை தடுக்க சிபிஐ தரப்பில் 'ஆபரேஷன் சக்ரா' என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி அனைத்து மாநில காவல் துறைகள் மற்றும் சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், அமெரிக்காவின் எப்பிஐ, கனடா காவல் துறை, ஆஸ்திரேலிய காவல் துறை, பல்வேறு தனியார் புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து சிபிஐ செயல்பட்டு...










