தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் கண்டன வாசகத்துடன் டி-ஷர்ட்: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
admin - 0
மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது மக்களவையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள், ஆங்கிலத்தில் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து பங்கேற்றனர்.
“நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும். தமிழ்நாடு போராடும்....
சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் ஓராண்டில் இந்தியா, நக்சலைட்கள் இல்லாத நாடாக மாறும் என்றும் உறுதிபட கூறினார்.
இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில்...
மகாராஷ்டிராவில் நாக்பூர் கலவரத்தை தூண்டியதாக கூறி சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், “ நாக்பூரில் கலவரம் ஏற்பட காரணமாக இருந்த சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பகீம் கான் என்பவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் அரசியல்வாதியான இவரை வெள்ளிக்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாக்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 60...
பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பான வழக்கில் ஜம்மு காஷ்மீரில் 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில மாதங்களாக தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லை (ஐபி) மற்றும் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி) வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதாக உளவுத் துறைக்கு கடந்த ஆண்டு தகவல்...
நாட்டின் 28 மாநிலங்களை சேர்ந்த 4.092 எம்எல்ஏக்கள் தேர்தலுக்கு முன் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை ஜனநாய சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன்படி மும்பையின் காட்கோபர் கிழக்கு தொகுதி பாஜக எம்எல்ஏ பராக் ஷா, சுமார் ரூ.3,400 கோடி சொத்துகளுடன் நாட்டின் பணக்கார எம்எல்ஏவாக திகழ்கிறார். இதையடுத்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். காங்கிரஸ் மூத்த...
குஜராத்தில் பூட்டப்பட்டிருந்த வீட்டில் இருந்து 88 கிலோ தங்க கட்டிகள், 20 கிலோ நகைகள் மற்றும் ஆடம்பர கைக்கடிகாரங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குஜராத்தின் அகமதாபாத் நகரில் பூட்டப்பட்டிருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கடந்த 17-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் 87.92 கிலோ தங்க கட்டிகள், வைரம் மற்றும் பிற அரிய வகை...
ஹைதராபாத்தில் ரூ.200 கோடியில் உலக அழகி போட்டி நடத்த எதிர்கட்சியான பிஆர்எஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத்தில் 72-வது உலக அழகி போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கு, பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், கே.சந்திரசேகர ராவின் மகனுமான கே.டி ராமாராவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ரூ.71 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார். ஆனால், இது போன்ற சமயத்தில் ரூ.200 கோடி செலவு செய்து...
பால், உர உற்பத்தி, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் ரூ.16 ஆயிரம் கோடி திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பால் உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு கால்நடை இனங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் வகை செய்யும் ராஷ்ட்ரிய கோகுல் திட்டத்துக்கு ரூ.3,400 கோடி ஒதுக்க...
2025-26 வருவாய் ஆண்டின் நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) தெலங்கானா மாநில நிதி அமைச்சர் பட்டி விக்ரமார்க்கா சட்டப்பேரவையில் நேற்று ரூ.3,04,965 கோடியில் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டுக்கு எதிர்கட்சியின் செயல் தலைவர் கே.டி ராமராவ் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த பட்ஜெட் குறித்து கே.டி. ராமாராவ் பேசும் போது, “விவசாயிகளுக்கு தேர்தல் வாக்குறுதியின் படி, விவசாய கடன் தள்ளுபடி செய்யவில்லை. தெலங்கானா அரசு 36 சதவீத கிருஷ்ணா நீரை உபயோகப்படுத்தி...
விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் - ஹரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீஸார் நேற்றிரவு (புதன்கிழமை) கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை அப்புறப்படுத்தி அவர்களின் தற்காலிக...










