Google search engine
குரோஷியா பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு சென்றிருந்தார். இதில், முதலில் சைப்ரஸ் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபரை சந்தித்து இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்ற அவர், 18-ம் தேதி அங்கிருந்து குரோஷியாவுக்கு சென்றார்....
ஆந்​தி​ரா​வில் ஜெகன் ஆட்​சி​யின் போது நடை​பெற்ற மது​பான கொள்கை ஊழல் குறித்த விசா​ரணை​யில் ரூ.1000 கோடிக்​கும் மேல் ஊழல் நடந்​துள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்​கில் சந்​திரகிரி பேரவை தொகு​தி​யின் முன்​னாள் எம்எல்ஏ​வும், திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​தின் முன்​னாள் சிறப்பு அறங்​காவலர் குழு உறுப்​பினரு​மான செவிரெட்டி பாஸ்​கர் ரெட்​டியை ஆந்​திர போலீ​ஸார் செவ்​வாய்க்கிழமை இரவு பெங்​களூரு விமான நிலை​யத்​தில் கைது செய்​தனர். இவர் இலங்கை தப்​பிச்செல்ல முயன்​ற​தாக கூறப்​படுகிறது. இவ்​வழக்​கில் ஏற்​கெனவே கைதான முக்​கிய...
உத்தராகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் கோயிலுக்கு செல்லும் நடைபாதையில் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் மலையேற்றப் பாதையில் ஜங்கில்சாட்டி காட் அருகே நேற்று காலை 11.20 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அவ்வழியே சென்ற பக்தர்கள் மற்றும் போர்ட்டர்கள் இடிபாடுகளில் சிக்கி ஒரு...
ஏர் இந்​தியா விமான விபத்​தில் பயணம் செய்த பெரும்​பாலான காப்​பீட்​டு​தா​ரரும், அவர் நியமித்த நாமினி​யும் ஒருசேர உயி​ரிழந்​துள்​ளனர். இதனால், இழப்​பீட்டு தொகையை வழங்குவதில் காப்​பீட்டு நிறு​வனங்​களுக்கு மிகப்​பெரிய குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. ஜூன் 12-ம் தேதி அகம​தா​பாத்​தில் இருந்து லண்​டன் புறப்​பட்ட ஏர் இந்​தியா விமானம் விபத்​துக்​குள்​ளானது. விமானத்​தில் பயணம் செய்த 241 பேர், கட்​டிடத்​துக்​குள் இருந்த 29 பேர் என மொத்​தம் 270 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். பலர் குடும்​பத்​துடன் லண்​டன்...
கர்நாடகாவில் காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கன‌ மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 5 மணி வரை தொடர்ந்த கனமழையால் காவிரி, கன்னிகா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடகில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து 29 ஆயிரத்து 369 கன அடியாக‌ அதிகரித்தது. இதேபோல ஹாரங்கி அணைக்கு 3 ஆயிரத்து 810 கன அடி நீரும், ஹேமாவதி அணைக்கு 5 ஆயிரத்து...
மத்திய அரசு பணிகளில் நேரடி நியமனக் கொள்கை கைவிடப்படவில்லை என்று மத்திய அறிவியல், பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சமீபத்தில், லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி நியமனம் மூலம் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 இணைச் செயலாளர்கள் மற்றும் 35 இயக்குநர்கள் அல்லது துணைச் செயலாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. மத்திய அரசு இவ்வாறு இட ஒதுக்கீடு...
பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு 33 வயதான சிவில் காண்டிராக்டர் ஒருவருடன் கடந்த ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தனது தாய்மாமன் உதவியுடன் தாய் வீட்டுக்கு அந்த சிறுமி 10-ம் வகுப்பு தேர்வு எழுத வந்திருந்தார். தேர்வு முடிந்த பின்னர் கணவர் வீட்டுக்கு அவர் செல்லவில்லை. இந்நிலையில் கணவர் வீட்டில் தன்னை கொடு மைப்படுத்துகிறார்கள் என்று கூறி, தனது நண்பர் ஒருவருடன்...
குஜராத் விமான விபத்து காட்சியை செல்போனில் தற்செயலாக படம் பிடித்த சிறுவன் தீப்பிழம்பை பார்த்து அதிர்ச்சியடைந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையம் அருகே ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் தாழ்வாக பறந்து விழுந்து தீப்பிழப்பு ஏற்பட்ட வீடியோ காட்சி உலகம் முழவதும் வைரலாக பரவியது. அந்த வீடியோவை செல்போனில் எடுத்தது அகமதாபாத் விமான நிலையம் அருகே வாடகை வீட்டில்...
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்காக வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது விழுந்து எரிந்து சாம்பலானது. இதில் பயணித்த ஒருவர் தவிர 241 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த சுமார்...
ஜம்மு காஷ்மீரில் 2 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா தலங்கள் நாளை முதல் திறக்கப்படும் என துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால், காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தவர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர். இதனால்...