Google search engine
கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மத...
அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் தொடர்புடைய அறக்கட்டளை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் (என்ஜிஓக்கள்) அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் (92). இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.61,000 கோடி ஆகும். கடந்த 1993-ம் ஆண்டில் ஓபன் சொசைட்டி பவுண்டேசன்ஸ் (ஓஎஸ்எப்) என்ற அறக்கட்டளையை சோரஸ் உருவாக்கினார். இந்தியா உட்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓஎஸ்எப் செயல்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளின்...
‘இசை மேதை இளையராஜா, அனைத்து வகையிலும் ஒரு முன்னோடி’ என பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசையை லண்டனில் கடந்த 9-ம் தேதி அரங்கேற்றினார். ஆசியாவிலிருந்து சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்நிலையில் பிரதமர் மோடியை, இளையராஜா நேற்று சந்தித்தார். இதுகுறித்து மோடி எக்ஸ் தளத்தில் கூறியிருப்பது: "நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை...
மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், நாக்பூரில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ என்ற பெயரில் திரைப்படமாக இந்தி மொழியில் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி,...
சத்தீஸ்கரில் சட்டவிரோத மதமாற்றத்தை எதிர்கொள்ள புதிய கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் விஜய் சர்மா கூறினார். சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர் அஜய் சந்திரகர் பேசுகையில், "மாநிலத்தில் அப்பாவிகள், ஆதரவற்றோர் மற்றும் ஏழைகளை தவறாக வழிநடத்தி மதமாற்றம் செய்யும் முயற்சி நடைபெறுகிறது. சுகாதாரம், கல்வி, சமூகப் பணி போன்ற நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு சாரா அமைப்புகள் வெளிநாட்டிலிருந்து நிதியை பெற்று, அந்தப் பணத்தை மதமாற்றப்...
கேரளாவில் சிஎஸ்ஆர் நிதியை பயன்படுத்தி பாதி விலையில் ஸ்கூட்டர் தருவதாக கூறி ரூ.281 கோடி மோசடி செய்யப்பட்டது தொடர்பாக 1,343 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளாவின் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன் (26). இவர் கடந்த 2022-ல் சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு சங்கம் மற்றும் தன்னார்வ அமைப்புகளின் கூட்டமைப்பை தொடங்கினார். பல்வேறு தொழில் நிறுவனங்களிடம் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (சிஎஸ்ஆர்)...
ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டம் நெலபர்த்திபாடு பஞ்சாயத்துக்குட்பட்ட கஜபதி நகரில் பில்லி ராஜு என்பவர் பைனானஸ் தொழில் செய்து வந்தார். இவருக்கு மனைவி விஜயா, மகன் ராம் சந்தீப் (10) மற்றும் காருண்யா என்ற 7 வயது மகளும் இருந்தனர். ராமச்சந்திரபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சந்தீப் 4-ம் வகுப்பும், காருண்யா 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். ராஜு வழக்கம் போல் குழந்தைகளை வென்டூரில் உள்ள தனது வீட்டிலிருந்து...
முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பரசுராமர் மற்றும் நாதுராம் கோட்சேவுடன் ஒப்பிட்டு அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்திருப்பது உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உ.பி.யின் மிர்சாபூரில் ராஷ்ட்ரிய ஷோசித் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் சுவாமி பிரசாத் மவுரியா நேற்று கூறும்போது, "அவுரங்கசீப் கொடூரமானவர் என்றால், நம் தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே மிகவும் கொடூரமானவர். காந்தியின் படுகொலை பற்றி பாஜக விவாதிக்கவில்லை. முதலில் நாதுராம் கோட்சே பற்றி...
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) கீழ் கிராமப்புற மக்களுக்கு 100 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை மத்திய பாஜக அரசு திட்டமிட்டு பலவீனப்படுத்தி வருகிறது என மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நேற்று பேசிய சோனியா காந்தி இதுகுறித்து மேலும் கூறியதாவது: பாஜக தலைமையிலான மத்திய அரசு, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை படிப்படியாக...
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தீவிரவாதத்தை எதிர்த்து போரிடுவதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார். நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தார். பின்னர் அவர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். டெல்லியில் நேற்று நடைபெற்ற ‘ரைசினா டயலாக்’ நிகழ்ச்சியில்...