மேற்கு ஆசியா மற்றும் உக்ரைன் போர்களுக்கு விரைவில் முடிவு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மோதல்கள் மூலம் எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என்பதை பின்லாந்து அதிபர் உடனான சந்திப்பின்போது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு நான்கு நாள் அரசு முறைப் பயணமாக வந்துள்ள பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப்புடன், பிரதமர் மோடி நேற்று விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு தரப்பு உறவுகளை...
கடந்த இரண்டு வருடங்களில் மக்களுக்காக அமைச்சகங்கள் செய்த பணிகளின் விவரத்தைக் கேட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. இவற்றை புள்ளிவிவரங்களுடன் சமர்ப்பிக்கும்படி மத்திய அமைச்சர்களுக்கு அவர் அறிவுறுத்தி உள்ளார்.
கடந்த 2024-ல் நாடாளுமன்ற மக்களவைக்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில், முக்கியப் போட்டியாளரான பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறை பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்றார். இவருடன் பதவியில் அமர்ந்த மத்திய...
இந்திய கடற்படை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி அதிகாலை ஈரான் போர்க் கப்பல் ஐஆர்ஐஎஸ் டேனாவில் இருந்து அவசர உதவி கோரி கொழும்பு கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இலங்கையின் காலே பகுதியில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் ஈரான் போர்க்கப்பல் கடலில் மூழ்கியது. இது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதி ஆகும். இந்திய கடற்படைக்கு தகவல் கிடைத்ததும் உடனடியாக...
மாநிலங்களவை உறுப்பினராகும் முதல்வர் நிதிஷ் குமாரால் பிஹார் அரசியலில் பாஜக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதையொட்டி நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியினர் ஆதரவு, எதிர்ப்பு என இரு வேறு கருத்துகளுடன் பிளவுபட்டுள்ளனர்.
பிஹாரில் 10-வது முறை முதல்வராக சுமார் 20 வருடங்களாகத் தொடர்கிறார் ஜேடியுவின் தலைவரான நிதிஷ் குமார். தற்போது அவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக செல்வது பிஹார் அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம்,...
இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் குவாஹாத்தியிலுள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அதனுடனான தொடர்பு அறுந்துபோனது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணிகளை இந்திய விமானப் படை அதிகாரிகள் தொடங்கினர். இந்நிலையில் அந்த விமானம் அசாம் மாநில கார்பி அங்கிலாங் அருகிலுள்ள சோக்கி ஹோலா என்ற இடத்தில் நொறுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்தில் மீட்புப் பணியில்...
இந்தியா முழுவதிலும் நேற்று ஹோலி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
வண்ணம் பூசுதல், சேற்றை இறைத்தல், உடைகளை கிழித்து விளையாடுதல் என பல்வேறு வகையில் மக்கள் ஹோலியை கொண்டாடி மகிழ்ந்தனர். புராண வரலாற்றின் அடிப்படையில் ஹோலி பண்டிகை நாளில் ‘ஹோலிகா தெஹன்‘ எனும் பெயரில் ஒரு சடங்கு நடத்தப்படுகிறது. இதற்காக, 10 நாட்கள் முன்பாக ஒவ்வொரு நகரம் அல்லது கிராமங்களின் முக்கிய சந்திப்புகளில் காய்ந்த மரக்கிளைகளை கொண்டுவந்து குவிக்கின்றனர்.
இதற்கு நாள்தோறும் அப்பகுதி...
ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் பெங்களூருவை சேர்ந்த 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜாஜி நகரை சேர்ந்த மோகன் தாஸ் (71), நாகராஜு ராவ் (61), குசுமா (61), ஜெயந்தி (59), பூஜா (33) ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் காரில் நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து சித்தூர் வழியாக திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெங்களூரு - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில்,...
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த வழக்கு – தீவிரவாதிகள் சீனாவில் கேமரா வாங்கியது அம்பலம்
admin - 0
காஷ்மீரின் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள், சீனாவில் அதிநவீன கேமரா வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சீனாவிடம் உதவிகள் கோர தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 25 பேர், உள்ளூர் குதிரை பராமரிப்பாளர் ஒருவர் என 26 பேர்...
வரும் மாநிலங்களவை தேர்தலில் பிஹாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. இதில் ஒன்றில் மத்திய அமைச்சர் ராம்நாத் தாக்கூர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. மற்றொரு இடத்துக்கு இன்னும் வேட்பாளர் உறுதியாகவில்லை.
இந்நிலையில் நிதிஷ் குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகி, மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவரது மகன் நிஷாந்த் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்பார் எனவும் பாஜகவை சேர்ந்த...
ஸ்ரீநகர் மத்திய சிறையின் கண்காணிப்பாளராக முதன்முறையாக பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை மாலை வெளியான அரசு உத்தரவின்படி, ஜம்மு காஷ்மீரில் உள்ள வெவ்வேறு சிறைகளுக்கு 4 அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஸ்ரீநகர் மத்திய சிறைக்கான பொறுப்பு 2012ம் ஆண்டு பேட்ச் அதிகாரி சபா ஷாலுக்கு வழங்கப்பட்டது. சபா ஷால் இந்த நியமனத்துக்கு முன், ஜம்மு காஷ்மீர் சிறைகள் துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில்...










