மேற்கு வங்கத்தில் 28.25 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ3,000 நிதியுதவி வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.
மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு முதன்முறையாக பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிப்படி முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ‘அன்னபூர்ணா யோஜனா' திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது: அன்னபூர்ணா திட்டத்துக்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக இணைய தளத்தில், கடந்த மூன்று நாட்களில் 28,25,769 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர். பிரதமர்...
விமான எரிபொருளின் விலை உயர்வை சமாளிக்க ரூ.10,000 கோடியில் நிதியம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
admin - 0
விமான எரிபொருளின் திடீர் விலை உயர்வை சமாளிக்க விமானப் போக்குவரத்துத் துறைக்கு ரூ.10,000 கோடியில் ஒரு நிதியத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து எரிபொருள் விலை உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, போர் முடியும் வரை உள்ளூர் விமானங்களுக்கான எரிபொருள் (ஏடிஎப்)...
எச்ஐவி பாதித்த பெண் பலருக்கு காதல் வலை வீசி பணம் பறிப்பு: பாதிக்கப்பட்டவர்களை தேடுகிறது போலீஸ்
admin - 0
மத்தியப் பிரதேசம் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் எச்ஐவி பாதிப்புக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் சமீபத்தில் 60 வயது விவசாயி ஒருவரிடம் அவரது வாகனத்தில் லிப்ட் கேட்டுள்ளார். தனக்கு கால் வலி இருப்பதாக அவர் கூறியதால், அவர் மீது இரக்கப்பட்ட முதியவர் அவரை தனது வாகனத்தில் அழைத்துச் சென்று வீட்டில் இறக்கிவிட்டுள்ளார். அப்போது அந்தப் பெண் தேநீர் சாப்பிட தனது வீட்டுக்கு...
ஏர் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் – ரூ.1,601 கோடிக்கு வாங்கியது மகாராஷ்டிர மாநில அரசு
admin - 0
தெற்கு மும்பையின் வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் புகழ்பெற்ற ‘ஏர் இந்தியா’ பலமாடிக் கட்டடத்தை, மகாராஷ்டிர மாநில அரசு ரூ.1,601 கோடிக்கு முறைப்படி வாங்கியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத் தலைமைச் செயலகமான மந்த்ராலயாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஏர் இந்தியா அஸெட்ஸ் ஹோல்டிங் நிறுவனம் (ஏஐஏஹெச்எல்) மற்றும் மாநிலப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் இதில் கையெழுத்திட்டதாக அரசுத்...
நாட்டின் பிரதமராக முதன்முதலில் 2014 மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவியேற்றார். அவர் வரும் ஜூன் 10ம் தேதி தொடர்ச்சியாக 4,399 நாட்களை பதவியில் நிறைவு செய்யவுள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே 13ம் தேதி பதவியேற்று, மறையும் வரை (1964 மே 27 வரை) 4,398 நாட்கள் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் சாதனையை மோடி முறியடிக்க உள்ளார். இந்த...
உத்தர பிரதேசத்தில் மோசடி கும்பலிடம் சிக்கியிருந்த 453 நேபாள குடிமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லைப் பகுதிகளில் நேபாள நாட்டினரின் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் அந்நாட்டினர் மோசடி செயலில் ஈடுபடுத்தப்படுவதாகவும் உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம் குஷி நகரின் பல இடங்களில் காவல் துறையினர் கடந்த வாரம் சோதனை நடத்தினர்.
இதில் மோசடி கும்பலின் பிடியில் இருந்த 115 பெண்கள் மற்றும் 338 ஆண்கள் உட்பட...
இந்தியாவில் 180 நாட்களுக்கு மேல் தங்கி வசிக்க விரும்பும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான பதிவு விதிகளில் மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 180 நாட்கள் தங்கும் காலம் முடிவடைந்த பிறகு பதிவு செய்வதற்கு பதிலாக, அவர்கள் அதற்கு முன்பே தங்களை பதிவு செய்து கொள்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மாற்றப்பட்ட விதிகளின்படி, 180 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான கால அவகாசம் கொண்ட விசாக்களில் இந்திய வருவோர், அனுமதி காலத்தை நீட்டிக்க விரும்பினால்,...
வரும் 2028ல் நடைபெறும் தேர்தலில் தெலங்கானாவில் ஜனசேனா போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் பவன் கல்யாண் கூறினார்.
தெலங்கானா மாநிலத்தின் 13-வது உதய தினம் நேற்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தெலங்கானா உதயமான நாளை கொண்டாட ஜனசேனா கட்சி ஹைதராபாத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.
ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி தெலங்கானா போலீஸார் இதற்கு அனுமதி தர மறுத்துவிட்டனர். இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர மனுவாக...
மகாராஷ்டிராவின் துலே நகரில் இருந்து மாநில அரசுப் பேருந்து ஒன்று நேற்று குஜராத் மாநிலம் சூரத் நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்தப் பேருந்து சூரத் மாவட்டத்தின் பர்டோலி தாலுகா உவா- மானேக்பூர் கிராமத்துக்கு அருகில் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்தப் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி எதிர்திசையில் வந்து கொண்டிருந்த மற்றொரு மகாராஷ்டிர அரசுப் பேருந்து மீது...
ஒன்றரை வயது ஆண் குழந்தையை, வளர்ப்பு தந்தை அடித்து கொலை செய்து உள்ளார். அந்த குழந்தையின் உடலில் 51 இடங்களில் பலத்த காயங்கள் இருந்தன. இது தொடர்பாக குழந்தையின் தாயும், வளர்ப்பு தந்தையும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், நெடுமங்காடு அருகேயுள்ள பனவூரைச் சேர்ந்தவர் அகிலா (24). இவரது கணவர் அகில் இரு ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். கணவரை இழந்த அகிலா ஒன்றரை...










