Google search engine
நாட்​டின் குறைந்த சொத்​துடைய முதல்​வர்​கள் பட்டியலில் உமர் அப்​துல்லா முதலிடத்​தி​லும், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதி​காரி 2-ம் இடமும் பிடித்​துள்​ளனர். மக்​களாட்சி சீர்​திருத்​தங்​களுக்​கான அமைப்பு (ஏடிஆர்) மற்​றும் தேசிய தேர்​தல் கண்​காணிப்​பகம் ஆகியவை தேர்​தல் பிர​மாணப் பத்​திரங்​களை பகுப்​பாய்வு செய்து அறிக்கை வெளி​யிட்​டுள்​ளன. இந்த ஆய்​வின்​படி, ஜம்​மு-​காஷ்மீர் முதல்​வர் உமர் அப்​துல்லா ரூ.55.24 லட்​சம் மதிப்​புள்ள சொத்​துகளு​டன் நாட்​டிலேயே மிகக் குறைந்த சொத்​துடைய முதல்​வ​ராக உள்​ளார். நாட்​டின் முதல்வர்களி​லேயே மேற்கு வங்க...
 கர்​நாட​கா​வில் கல்​லூரி மாணவர்​கள் 7 ஆயிரம் பேருக்கு எச்​ஐவி தொற்று இருப்​பது உறு​தி​யான​தாக அண்​மை​யில் செய்​தி​கள் வெளி​யாகின. இந்​நிலை​யில் கர்​நாடக மாநில எய்ட்ஸ் தடுப்பு சங்​கத்​தின் இயக்குநர் பத்மா பசவந்​தப்பா விடுத்​துள்ள அறிக்​கை​யில் கூறியுள்​ள​தாவது: அண்​மை​யில் ஊடகங்​களில் வெளி​யான செய்தி​கள் தவறானவை. கர்​நாட​கா​வில் 2004-ம் ஆண்​டில் இருந்து 18 முதல் 35 வயதுக்​குட்​பட்ட சுமார் 7000 பேருக்கு எச்​ஐவி தொற்று இருக்​கிறது. இதனை திரித்​து, கல்​லூரி மாணவர்​களுக்கு எய்ட்ஸ் நோய்...
மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படும் நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தரப்பில், “பிவாண்டியில் 4 மாடி கட்டிடம் ஒன்றில் நேற்றிவு 11.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. அந்தக் கட்டிடத்தின் ஒவ்வொரு தளத்திலும் தலா 12 வீடுகள் வீதம் மொத்தம்...
மக்களவையைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவை​யிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வு வினாத்​தாள் கசிவை கண்​டித்து நாடு முழு​வதும் மாணவ, மாண​வியர் போராட்​டம் நடத்​தினர். இதைத் தொடர்ந்து வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்​றப்​படும் என்று பிரதமர் நரேந்​திர மோடி உறுதி அளித்​தார். இதன்​படி கடந்த 27-ம் தேதி மக்​களவை​யில் பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்த மசோதா 2026 தாக்​கல் செய்​யப்​பட்​டது. கடந்த 28-ம் தேதி மசோதா மீது...
அருணாச்சல பிரதேசத்​தில் பரு​வ​மழை தீவிரமடைந்திருக்​கிறது. இதனால் மாநிலத்​தின் 26 மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்​கப்​பட்டு உள்​ளன. மழை, வெள்ள பாதிப்​பு​களால் இது​வரை 7 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். சுமார் ஒரு லட்​சம் பேர் பாதிக்​கப்​பட்டு உள்​ளனர். 19 நீர்​மின் நிலை​யங்​கள், 150 சாலைகள், 19 பாலங்​கள் வெள்​ளத்​தால் சேதமடைந்​துள்​ளன. இதுபோல நாகாலாந்​தில் மழை, வெள்ள பாதிப்​பு​களால் இது​வரை 11 பேர் உயி​ரிழந்​துள்​ளனர். மோன், திமாபூர், மோகாக்​சங் உள்ளிட்ட மாவட்​டங்​களில் நிலச்​சரிவு​ ஏற்​பட்டு என்​எச்...
வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. தற்போதுள்ள, ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்புச் சட்டம் 1971’-ஐ, திருத்துவதற்கான இந்த மசோதாவை, உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் தாக்கல் செய்தார். ‘தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026’-ன் படி, தேசியப் பாடலான ‘வந்தே மாதர’-த்தை பாடும் கூட்டத்தை வேண்டுமென்றே தடுப்பதாகவோ அல்லது இடையூறு விளைவிப்பதாகவோ கண்டறியப்படும்...
நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்த உத்தரவிட்டவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று ராகுல் காந்தி கூறியதற்கு, பாஜக எம்பிக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. பொதுத் தேர்வு (முறைகேடு தடுத்தல்) திருத்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக மாணவர்கள் போராடியபோது, அவர்களுக்கு எதிராக காவல்துறை...
மக்​களவை​யில் எதிர்க்​கட்​சிகளின் பலத்த அமளி மற்றும் கூச்​சலுக்கு இடையே, பொதுத் தேர்​வு​கள் (முறை​கேடு​கள் தடுப்​பு) திருத்​தச் சட்ட மசோதா 2026, குரல் வாக்​கெடுப்பு மூலம் நேற்று நிறைவேற்​றப்​பட்​டது. வினாத்​தாள் கசிவு தடுப்​புச் சட்ட மசோதா தொடர்​பாக மக்களவை​யில் நேற்று விவாதம் நடை​பெற்​றது. இதில், எதிர்க்கட்சித் தலை​வர் ராகுல் காந்தி பங்​கேற்று பேசி​ய​தாவது: “இந்​தி​யக் கல்வி முறையை ஆர்​எஸ்​எஸ் சீரழித்து வரு​கிறது. மத்தியக் கல்வி அமைச்​சகத்தை அந்த துறை​யின் அமைச்​சர் இயக்​க​வில்​லை....
மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம் டியூச்சா கிராமத்​தைச் சேர்ந்த மினார் மொண்​டல் அரசு பேருந்து ஓட்​டுந​ராக பணி​யாற்றி உள்​ளார். பின்​னர் அப்​பணியி​லிருந்து வில​கிய அவர், கல் குவாரி வியா​பாரத்​தில் ஈடு​பட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்​தகம் செய்து வந்​துள்​ளார். குறுகிய...
கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் டெல்​லி​யில் நாடாளு​மன்ற வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: “கர்​நாட​கா​வில் பரு​வ​மழை பெய்​யாத​தால் அணை​களில் போதிய அளவுக்கு நீர் இல்​லை. கடந்த இரு​முறை தமிழகம் நீர் கேட்டபோது, காவிரி ஒழுங்​காற்று குழு அவர்​களின் கோரிக்கையை நிராகரித்​திருந்​தது. தற்​போது தமிழகத்​துக்கு 3500 கன அடி நீர் திறந்​து​விடு​மாறு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்​தர​வுக்கு எதி​ராக மேல்​முறை​யீடு செய்​வது குறித்து அமைச்​சர்​கள், அதி​காரி​களு​டன் ஆலோ​சனை நடத்​தினேன். அதில் மேல்​முறை​யீடு செய்​வதென முடி​வெடுத்​துள்​ளோம். தமிழக...