மேற்கு வங்கத்தில் முன்னாள் அரசுப் பேருந்து ஓட்டுநர் வீட்டில் சோதனை: ரூ.20 கோடி ரொக்கம், 15 கிலோ தங்கம் பறிமுதல்

0
14

மேற்கு வங்​கத்​தில் முன்​னாள் அரசுப் பேருந்து ஓட்டுநரின் வீட்​டில் நேற்று நடை​பெற்ற சோதனை​யின்​போது, ரூ.20 கோடி ரொக்​கம், 15 கிலோ தங்​கம் பறி​முதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்​பும் மாவட்​டம் டியூச்சா கிராமத்​தைச் சேர்ந்த மினார் மொண்​டல் அரசு பேருந்து ஓட்​டுந​ராக பணி​யாற்றி உள்​ளார். பின்​னர் அப்​பணியி​லிருந்து வில​கிய அவர், கல் குவாரி வியா​பாரத்​தில் ஈடு​பட்டு வந்த தனது உறவினர் துளுமொண்டலுடன் இணைந்து வர்த்​தகம் செய்து வந்​துள்​ளார். குறுகிய காலத்​தில் அதிக பணம் சம்​பா​தித்த அவர், ஆரடம்பர வாழ்க்கை வாழ்ந்​துள்​ளார்.

இதுகுறித்து போலீ​ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​துள்​ளது. இதையடுத்​து, மினார் மொண்​டலின் வீட்​டில் போலீ​ஸார் நேற்று சோதனை நடத்​தினர். அப்​போது பல மூட்​டைகளில் பதுக்கி வைக்கப்​பட்​டிருந்த பணம் மற்​றும் தங்​கத்தை பறி​முதல் செய்துள்ளனர்.

அங்கு கைப்​பற்​றப்​பட்ட பணத்தை 5 இயந்​திரங்​கள் மூலம் என்னும் பணி நடந்து வரு​வ​தாக​வும், அது முடிந்த பின்​னர் ​தான் கைப்​பற்​றப்​பட்ட துல்​லிய​மான தொகை தெரிய​வரும் என்​றும் அதி​காரி​கள் தெரி​வித்​தனர். இதனிடையே, சுமார் ரூ.20 கோடி ரொக்​கம் மற்​றும் 15 கிலோ தங்​கம் கைப்​பற்​றப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.

சோதனை நடவடிக்கை தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தால், அந்த வீட்​டுக்கு வெளியே பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே, தலைமறை​வாகி உள்ள துளு மொண்​டலை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

மேற்கு வங்​கத்​தின் பிர்​பும் மாவட்​டத்​தில் கல் குவாரி வர்த்தகத்துடன் தொடர்​புடைய சட்​ட​விரோதச் சுரங்​கத் தொழில் மற்​றும் அமைப்​பு​சார் குற்​றங்​கள் நடை​பெறு​வ​தாக புகார் எழுந்தது.

இதுகுறித்த நீண்ட கால​மாக போலீ​ஸார் தீவிரக் கண்​காணிப்​பில் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில்​தான் இந்த சோதனை நடை​பெற்​றுள்​ளது. இது அனு​ம​திக்​கப்​ப​டாத சட்​ட​விரோதச் சுரங்​கங்​கள் மற்​றும் வரு​வாய் இழப்​பு​களுக்கு எதி​ரான பரவலான நடவடிக்​கை​யின் ஒரு பகு​தி​யாகும்.

மேற்கு வங்க முன்​னாள் அமைச்​சர் பார்த்தா சட்​டர்​ஜி​யின் நெருங்கிய கூட்​டாளிக்​குச் சொந்​த​மான இடங்​களில் அமலாக்கத்துறை அதி​காரி​கள் 4 ஆண்​டு​களுக்கு முன்பு சோதனை நடத்​தி​ய​போது பல கோடி ரொக்​கம் கைப்பற்றப்பட்டது. அதன்​ பிறகு அதிக அளவிலான ரொக்​கம்​ கைப்​பற்​றப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here