இஸ்ரேலில் பல்வேறு கட்டிடப்பணிக்காக 50 ஆயிரம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இதற்காக அந்த அரசின் சார்பில் இந்தியாவின் உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் அரசுகளுக்கு ஆட்களை அனுப்பக் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் கட்டிடப் பணிகளுக்கு ஆட்கள் சேர்ப்பு பணி வரும் ஜூன் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்நாட்டின் பணிகளுக்கு தேவைப்படும் தொழிலாளர்களின் வயது 25 முதல் 32 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்கள், கட்டிட...
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் மனைவி அன்னா லெஸ்னவா திருமலையில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். மேலும் அன்னதானத்துக்கு ரூ.17 லட்சம் நன்கொடையும் அவர் வழங்கினார்.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் பள்ளி படிப்பு படித்து வருகிறார். இவர் படிக்கும் பள்ளியில் அண்மையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் மார்க் சங்கர் உட்பட பலர் தீக்காயமடைந்தனர். ஒரு மாணவி...
ஒடிசா பல்கலைக்கழக துணைவேந்தரிடம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ஈடுபட்ட 2 நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஒடிசாவின் பீரம்பூர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணியாற்றி வருபவர் கீதாஞ்சலி தாஸ். இவரிடம் அமலாக்கத் துறையில் இருந்து பேசுவதாக கூறி இரண்டு பேர் அறிமுகமாகினர். பின்னர், கீதாஞ்சலி தாஸ் பணமோசடியில் ஈடுபட்டதாக கூறி அவரை பிப்ரவரி 14 முதல் 22 வரை டிஜிட்டல் அரெஸ்ட்டில் வைத்திருப்பதாக கூறி விசாரணை முன்னுரிமைக்காக ரூ.14 லட்சத்தை டெபாசிட்...
நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் ரூ.10 லட்சம் கோடியில் மேம்படுத்தப்படும். இதில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: உலகத் தரத்துக்கு இணையாக இந்தியாவில் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அடுத்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். இதன்படி ரூ.10 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் வடகிழக்கு...
மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- கேரள ஆளுநர் கேள்வி
admin - 0
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயிப்பது வரம்பு மீறிய செயல் என கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் குற்றம்சாட்டி உள்ளார்.
தமிழக அரசின் சில மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டதை எதிர்த்தும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பு நிர்ணயம் செய்யக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததுடன் கிடப்பில் இருந்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல்...
கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியின் போது ஒப்பந்ததாரர் சங்கத்தினர் தெரிவித்த 40 சதவீத கமிஷன் புகார் மீது சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை மீதான பாஜக அரசு மீது அம்மாநில ஒப்பந்ததாரர் சங்கத்தினர் 40 சதவீத கமிஷன் ஊழல் புகாரை தெரிவித்தனர். அதாவது அரசின் ஒப்பந்த பணிகளை ஒதுக்குவதற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் 40 சதவீதத்தை கமிஷனாக...
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம் ரெட்டிபல்லி கிராமத்தை சேர்ந்தவர் ராமய்யா (87). விவசாயியான ராமய்யா 50 வருடங்களுக்கும் மேலாக கம்மம் உட்பட அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் மரக்கன்றுகளை நடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இதனால் இவரை சிலர் கேலியும் செய்ததுண்டு. ஆனால், அவர் அதனை பொருட்படுத்துவதில்லை. இவர் தன் சட்டை மீதும், தலையிலும் “இயற்கையை...
மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்க காலக்கெடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மறுஆய்வு கோரி மத்திய அரசு விரைவில் மனு
admin - 0
மசோதாக்கள் குறித்து முடிவெடுக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து உள்ளது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்தும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலவரம்பை நிர்ணயம் செய்யக் கோரியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை...
விசாகப்பட்டினம்: ஆந்திராவில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 2 பெண்கள் உட்பட 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்துக்கு உட்பட்ட கொத்தவுட்ல மண்டலம் கைலாசபுரத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலை முழுவதும் தீ மளமளவென பரவியதால் அங்கிருந்தபட்டாசுகள் சரமாரியாக வெடித்து...
வக்பு போராட்டத்தால் வன்முறை: மேற்கு வங்கத்தில் பதற்றம் நீடிப்பு; கூடுதல் துணை ராணுவ படையினர் குவிப்பு
admin - 0
வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியதால் மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதையடுத்து, மேலும் 5 கம்பெனி துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் வக்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையே, வக்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து...










