இந்தியா – பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு பங்கு இல்லை: விக்ரம் மிஸ்ரி தகவல்
admin - 0
இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பங்கு எதுவும் இல்லை என்று மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற குழு முன் வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேற்று மாலை ஆஜராகி ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் வழக்கமான ஆயுதங்களை கொண்ட மோதலாகவே...
பெங்களூரில் நேற்று முன் தினம் இரவு விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. கனமழை தொடர்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய கனமழை அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது. இதனால்...
ஏழுமலையானுக்கு 100 கிலோ வெள்ளி குத்துவிளக்கு காணிக்கை: மைசூரு அரச குடும்பத்தினர் வழங்கினர்
admin - 0
திருப்பதி ஏழுமலையானுக்கு மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி 100 கிலோ எடையில் 2 அகண்ட வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக வழங்கினார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் கர்ப்பகிரகத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் மைசூரு மகாராஜா குடும்பத்தினர் மிகப்பெரிய (அகண்ட) வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக அளித்துள்ளனர். இந்த விளக்குகள் தான் சுவாமியின் இருபுறமும் எப்போதும் சுடர்விட்டு எரிந்துகொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், இவ்விளக்குகள் வழங்கி 300 ஆண்டுகள் ஆகிவிட்டதால்,...
ஹைதராபாத் சார்மினார் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குல்ஜார் ஹவுஸ் என்றழைக்கப்படும் பிரஹல்லாத் மோடி என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் 10 வயதுக்கு உட்பட்ட 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மிகவும் துயரமான இந்த சம்பவம், அந்த கட்டிடத்திற்குள் காற்று வசதி இல்லாத காரணத்தினால் தான் நடந்தது...
பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேச மாநிலங்களில் கைது செய்யப்பட்ட பாக். உளவாளி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
admin - 0
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பஞ்சாப், ஹரியானா, உ.பி. ஆகிய 3 மாநிலங்களில் யூடியூபர் முதல் மாணவர் வரை 11 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்தியாவில் நாசவேலைகளை அரங்கேற்ற எல்லையில் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவச் செய்கிறது. மேலும் இந்தியாவில் பணத்துக்கு மயங்கும் ஆட்களை பிடித்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பெற்று சதி வேலையில் ஈடுபடுகிறது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாகிஸ்தானின் உளவு நெட்வொர்க்கை தகர்க்கும் நடவடிக்கையில்...
கேரள தொழிலதிபரிடம் ரூ.2 கோடி லஞ்சம் கேட்டது தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரி உட்பட நான்கு பேர் மீது விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்துள்ள இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக அமலாக்கத் துறை உதவி இயக்குநர் சேகர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார். எர்ணாகுளத்தைச் சேர்ந்த வில்சன் வர்கீஸ், ராஜஸ்தானைச் சேர்ந்த முகேஷ் குமார் மற்றும் கொச்சியைச்...
ஜம்மு காஷ்மீர் கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் லடாக்கிற்கான தேசிய சமத்துவக் கட்சியின் தலைவரும், சமூக ஆர்வலருமான பேராசிரியர் சஜ்ஜாத் ராஜா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தீவிரவாத குழுக்கள் மற்றும் பாகிஸ்தானிடம் பயத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால், உலகளவில் தற்போது அவர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதால் இனிமேல் மிகவும் எச்சரிக்கையாக செயல்படுவார்கள்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் பல தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. உண்மையில், பாகிஸ்தானில் உள்ள சுமார் 50...
ஹைதராபாத்தில் பயங்கர தீ விபத்து; சிறுவர்கள், பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்
admin - 0
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 சிறுவர்கள், 5 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசு சார்பில் ரூ.2 லட்சம், மாநில அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் புகழ்பெற்ற சார்மினார் அருகே குல்சார் ஹவுஸ் என்ற வணிக வளாகம் செயல்படுகிறது. இந்த வளாகத்தின் தரைதளத்தில் நகைக் கடைகளும், மேல்தளங்களில் வீடுகளும் உள்ளன....
உத்தரபிரதேச அரசு, சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, கட்டார்னியாகாட் வனவிலங்கு சரணாலயத்தை துத்வா புலிகள் காப்பகத்துடன் இணைக்கும் நாட்டின் முதல் விஸ்டாடோம் ரயில்பெட்டி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முயற்சி ரயில் வழியாக ஒரு தனித்துவமான ஜங்கிள் (காட்டு) சபாரி அனுபவத்தை வழங்குவதன் மூலம் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளதாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுலா ரயிலில் பெரிய கண்ணாடி ஜன்னல்கள் மற்றும் வெளிப்படையான கூரைகள் கொண்ட...
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் உளவாளிகளாக செயல்பட்ட ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா மற்றும் குசாலா, யமீன், தேவிந்தர் அர்மான் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்பவர் உளவாளி கும்பலின் தலைவராக செயல்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக ஹரியானா போலீஸார் கூறியதாவது: ஹரியானாவின் ஹிசார் பகுதியை சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. இவரது தந்தை ஹரிஷ் மல்ஹோத்ரா தச்சு தொழிலாளி ஆவார். மிகச்...










