ஜெய்ப்பூரில் ‘கூலி’ படப்பிடிப்பின்போது 74-வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார் ரஜினிகாந்த்
admin - 0
நடிகர் ரஜினிகாந்த் தனது 74-வது பிறந்தநாளை, ஜெய்ப்பூரில் நடக்கும் கூலி படப்பிடிப்பில் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு முதல்வர், அரசியல் தலைவர்கள், திரையுலகினர் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
‘கூலி’ படத்தின் படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், அங்கு படக்குழுவினருடன் சேர்ந்து கேக் வெட்டி தனது 74-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவரது பிறந்தநாளையொட்டி வழக்கம்போல் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்துக்கு ரசிகர்கள் பலர்...
‘நானும் ரவுடிதான்’ படக் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தொடர்ந்த வழக்கில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி மற்றும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண நிகழ்வை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஆவண படமாக தயாரித்தது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிப்பில், நயன்தாரா நடித்து,...
சில சினிமாக்கள்தான், படம் வெளியாவதற்கு முன்பாகவே மக்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமான எதிர்பார்ப்பை உருவாக்கும். அதற்குப் பல காரணங்கள் இருப்பினும் பகுத்தறிய முடியாத காரணங்களும் அதன் பின்னால் தொழிற்படுகின்றன. ஏற்கெனவே சூப்பர் ஸ்டாராகியிருந்த ரஜினியை ஒரு கடவுள் உருவாக மாற்றிய ‘தளபதி’ படத்துக்கும் அப்படியான எதிர்பார்ப்பு படம் வருவதற்கு முன்பே உருவாகியிருந்தது.
மகாபாரதக் கதையைச் சமகாலக் கதையாக மாற்றியுள்ளார் மணிரத்னம் என்ற செய்தி முன்பே வெளியானது. ரஜினி கர்ணன் என்றும்,...
மோகன்லால் இயக்கி நடிக்கும் ‘பரோஸ்’ திரைப்படம் டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘பரோஸ்’. ஃபேன்டஸி கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் குரு சோமசுந்தரம், மீரா ஜாஸ்மின், ஸ்பானிஷ் நடிகை பாஸ் வேகா, ரபேல் அமர்கோ உட்பட பலர் நடித்துள்ளனர். அந்தோணி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். குழந்தைகளைக் கவரும் விதமாக 3டி-யில் உருவான இந்தப் படம் பான் இந்தியா...
நடிகை மேனகா - மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் ஆகியோரது மகள் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய அவர், ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, ரஜினி முருகன், பைரவா, சர்க்கார், ரெமோ, அண்ணாத்த, ரகு தாத்தா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். நடிகை சாவித்திரியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தெலுங்கில் உருவான மகாநடி...
எதிர்பார்ப்புகளை எகிற வைத்து ஏமாற்றம் கொடுக்கும் படங்கள் எல்லா வருடங்களும் டிசம்பர் மழையை போல தவறாமல் ஆஜராகத்தான் செய்கின்றன. ஆனால், பட ‘புரமோஷன்’களில் காட்டும் மெனக்கெடலையும், ‘சக்சஸ் மீட் பாஸ்’ நம்பிக்கையையும், திரைக்கதையில் காட்டியிருந்தால் நேரம் மிச்சம்; தாக்கம் நிச்சயம். இருபக்க கூர் தீட்டிய கத்தியான சமூக வலைதளங்கள் படத்தின் மொத்த ஹைப்பையும் முதல் ஷோவிலே காலி செய்துவிடுகின்றன. சிறப்பாக இருந்தால் அதுவே புரமோஷனாக மாறியும் விடுகிறது. அந்த...
மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘காதல் தி கோர்’ மலையாளத் திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதை புதுச்சேரி அரசு வரும் 13-ம் தேதி வழங்குகிறது. 2023-ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக இப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விருதை இயக்குநர் ஜியோ பேபி பெறுகிறார்.
புதுச்சேரி செய்தி விளம்பரத்துறை , நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் சார்பில் இந்திய திரைப்படவிழா 2024 வரும் டிச.13-ம் தேதி தொடங்குகிறது. அலையன்ஸ் பிரான்சேஸ் அரங்கில் மாலை...
தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.
இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாகவும் விஜய்யின் 69-வது படத்திலும் நடித்து வருகிறார். இவர் அடுத்து துல்கர் சல்மான் ஜோடியாக பான் இந்தியா படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’, தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கு தவிர, தமிழ், இந்தியிலும் இந்தப்...
விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘வீர தீர சூரன்-பார்ட் 2’. அருண்குமார் இயக்கியுள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஆக்ஷன் திரில்லர் படமாகத் தயாராகியுள்ள இந்தப் படத்தை ஹெச்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. ஜனவரி மாதம் வெளியாக இருக்கும் இந்தப்...
ஆனந்த் நாக், ஜனனி, பாய்ஸ் ராஜன், பிர்லா போஸ், கவுரி சங்கர், சரத்ராஜ் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘அறிவான்’. எம்டி பிக்சர்ஸ் சார்பில் துரை மகாதேவன் தயாரிக்கும் இந்தப் படத்தை அருண் பிரசாத் இயக்கியுள்ளார். கார்த்திக் ராம் எரா இசையமைக்கிறார். யஷ்வந்த் ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குநர் அருண் பிரசாத் கூறும் போது, “ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, என்கவுன்ட்டரால் வேறு ஊருக்கு மாற்றப்படுகிறார். அங்கு அடுத்தடுத்து...










