துல்கர் சல்மான் ஜோடியாகிறார் பூஜா ஹெக்டே!

0
369

தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’ படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே, தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார்.

இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் சூர்யா ஜோடியாகவும் விஜய்யின் 69-வது படத்திலும் நடித்து வருகிறார். இவர் அடுத்து துல்கர் சல்மான் ஜோடியாக பான் இந்தியா படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’, தெலுங்கில் உருவாகி, பான் இந்தியா படமாக வெளியானது. தெலுங்கு தவிர, தமிழ், இந்தியிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார் துல்கர் சல்மான்.

ரொமான்டிக் படமான இதில் துல்கர் சல்மான் ஜோடியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படம் அடுத்த வருட பின்பகுதியில் தொடங்க இருக்கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here