Google search engine
ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ஷிஹான் ஹுசைனி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 60. மதுரையைச் சேர்ந்தவரான ஷிஹான் ஹுசைனி கராத்தே பயிற்சியாளர். சென்னையில் கராத்தே பயிற்சியளித்து வந்த இவர், கே.பாலசந்தரின் ‘புன்னகை மன்னன்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ரஜினியின் ‘வேலைக்காரன்’, கார்த்திக்கின் ‘உன்னைச் சொல்லி குற்றமில்லை’, சரத்குமார் நடித்த ‘வேடன்’, விஜய்யின் ‘பத்ரி’ ஆங்கில படமான ‘பிளட் ஸ்டோன்’ என பல படங்களில்...
சினிமா நடிகர் சோனு சூட் மனைவி சோனாலி சூட் கார் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அவருக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல். தற்போது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மும்பை - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. சோனாலி சூட் உடன் அவரது சகோதரி மற்றும் ஒரு உறவினர் ஓவரும் காரில் இருந்துள்ளார். விபத்தில் சோனாலி சூட் மற்றும்...
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் இன்று (மார்ச் 25) காலமானார். அவருக்கு வயது 48. இயக்குநர் பாராதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் அவரது மகன் மனோஜ். தொடர்ந்து அவரது இயக்கத்தில் ஈரநிலம் கடல் பூக்கள் உள்ளிட்ட பாரதிராஜாவின் திரைப்படங்களிலும், அல்லி அர்ஜுனா, மகா நடிகன், சமுத்திரம், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அண்மையில், மனோஜ் தனது...
‘ரெட்ரோ’ படத்தில் 15 நிமிட சிங்கள் ஷாட் காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறது படக்குழு. ‘ரெட்ரோ’ படத்தின் ‘கனிமா’ என்ற பாடல் இணையத்தில் பெரும் வைரலாகி இருக்கிறது. இதில் பூஜா ஹெக்டேவின் நடனம் இணையவாசிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை ஒட்டி 15 நிமிடக் காட்சி ஒன்றை ஒரே டேக்கில் காட்சிப்படுத்தி இருக்கிறது படக்குழு. ‘கனிமா’ பாடலைத் தொடர்ந்து சண்டைக் காட்சி, அதனைத் தொடர்ந்து ஒரு காட்சி என 15...
‘சலார் 2’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு பிருத்விராஜ் பதிலளித்துள்ளார். ’சலார்’ படத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகம் எப்போது என்ற கேள்வி அப்படம் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கேட்கப்பட்டு வருகிறது. தற்போது ‘எம்புரான்’ படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்வில் பிருத்விராஜிடம் ‘சலார் 2’ எப்போது என்ற கேள்விக்கு கேட்கப்பட்டது. அதற்கு பிருத்விராஜ், “பிரசாந்த் நீல் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தில் மும்முரமாக இருக்கிறார். நானும் அடுத்டுத்த படங்களில் மும்முரமாக இருக்கிறேன். பிரபாஸும் ‘ஸ்பிரிட்’...
நலன் குமரசாமி இயக்கும் ‘வா வாத்தியார்’, பி.எஸ்.மித்ரன் இயக்கும் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. இதையடுத்து ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அது, கார்த்தியின் 29-வது படம். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் அவர் ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘ஹீரோ’, சிம்புவின் ‘மாநாடு’ படங்களில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து...
மோகன்லால், மஞ்சு வாரியர் நடித்து, 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிஃபர்’ படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். இதில் டோவினோ தாமஸ், விவேக் ஓபராய், ஜான் விஜய் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தின் அடுத்த பாகம் ‘எல் 2: எம்புரான்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. பிருத்விராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 27-ம்தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி...
சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்திப் படம், ‘சிக்கந்தர்’. இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் சத்யராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர். காஜல் அகர்வால், சர்மான் ஜோஷி உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படம் வரும் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது: கடந்த 47 ஆண்டுகளாகத் திரைப்படத் துறையில் இருக்கிறேன். சுமார் 258 படங்களில்...
நடிகை சோனா, தனது வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடரை இயக்கியுள்ளார். ஓடிடி தளம் ஒன்றில் வெளியாக உள்ள இந்த வெப் தொடருக்கு எதிராக பலர் கடுமையாக எச்சரிக்கை விடுத்ததாகவும் பல அவமானங்களைச் சந்தித்ததாகவும் சோனா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் தனது வெப் தொடரின் ஹார்ட் டிஸ்க்கை சங்கர் என்ற மேலாளர் எடுத்துச் சென்றுவிட்டதாகக் கூறி தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர் சம்மேளன (பெப்சி)...
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் பயோபிக்கான ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘கேதார்நாத்’, ‘சிச்சோரே’ என சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி, மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணம் இந்தியா முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த தற்கொலைக்குப்...