சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘டிசி’  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு புதிய பிஎம்டபிள்யூ கார்களைப் பரிசளித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 7 அன்று வெளியான 'டிசி' படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், சன் குழுமத் தலைவரும் தயாரிப்பாளருமான கலாநிதி மாறன், படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், ஹீரோவாக நடித்த லோகேஷ் கனகராஜ் மற்றும்...
பதிப்​புரிமை உத்​தரவை மீறியதற்​காக இசையமைப்​பாளர் இளையராஜா மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக்​ கோரி சரி​கமா நிறு​வனம் தாக்​கல் செய்த மனு மீது பதிலளிக்க இளை​ய​ராஜாவுக்கு டெல்லி உயர் நீதி​மன்​றம் நோட்​டீஸ் பிறப்​பித்து உத்​தர​விட்​டுள்​ளது. டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் சரி​கமா நிறு​வனம் தாக்​கல் செய்​துள்ள மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: இசையமைப்​பாளர் இளை​ய​ராஜாவுக்கு எதி​ராக தொடுத்த பதிப்​புரிமை வழக்கை விசா​ரித்த டெல்லி உயர் நீதி​மன்​றம், சரி​கமா உரிமை கோரும் பதிப்​புரிமை பெற்ற பாடல்​களுக்கு...
காமெடி நடிகராக திரைப் பயணத்தைத் தொடங்கி, கதாநாயகனாகப் பரிணமித்துள்ள நடிகர் சூரியின் வளர்ச்சி அசாத்தியமானது. ‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுப்பது மட்டுமின்றி, தனது கதைத் தேர்விலும் வியக்க வைக்கிறார். அந்த வரிசையில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்த்திராத பாரம்பரியப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். ராமநாதபுரத்தின் கடலோர...
சூர்யா நடிப்பில், ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படத்துக்கு ‘சீன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக இந்தப் படம் ‘சூர்யா 47’ என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வந்தது. போலீஸ் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கும் இந்தப் படத்தில், பிரேமலு நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்த ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த 2025 டிசம்பரில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு 2026 ஜூலையில் நிறைவடைந்தது....
சஜீவ் பழூர் இயக்​கி​யுள்ள ‘என்ன விலை’ படத்​தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்​ளிட்​டப் பலர் நடித்​துள்​ளனர். ஜித்​தேஷ் விஸ்வம்​பரன், அனுகோ​பால் வேணுகோ​பாலன் ஆகியோர் தயாரித்துள்ள இப்​படம் செப். 17-ல் வெளி​யாகிறது. இதன் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர். நடிகர் கருணாஸ் பேசும்​போது, “கடந்த 2001-ம் ஆண்டு ராமேஸ்​வரத்​தில் பாலா அண்​ணன் இயக்​கத்​தில் லொடுக்கு பாண்​டி​யாகத் திரை​யுல​கில் எனது பயணத்தை ஆரம்பித்​தேன். நான் அதி​கம் மலை​யாள படங்​களை விரும்பிபார்ப்பேன். அதனால்...
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்​துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்​கி​யுள்​ளார். கவுதம் ராஜேந்​திரன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்​துள்​ளார். ஐங்​கரன் இன்​டர்​நேஷனல் மற்​றும் ஹேப்பி ஹை பிக்​சர்ஸ் சார்​பில் கே. கருணா​மூர்த்​தி, அசோக் செல்​வன், அபிநயா செல்​வம் ஆகியோர் இணைந்து தயாரித்​துள்​ளனர். “காதல் கதைக்களத்துடன், அழகான உணர்​வு​களை​யும்...
சித்தி இட்​னானி, அஞ்​சலி நாயர், தேவதர்​ஷினி, பரி​தாபங்​கள் டிரா​விட் செல்​வம், குரேஷி உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘ட்ரோன்ஸ்’. ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்​துக்கு ஹரி எஸ்​.ஆர்​. இசை அமைத்​துள்​ளார். ஜிஎம் மோர்​கன் பிலிம்ஸ் நிறு​வனம் தயாரித்​துள்ள இப்​படத்தை ஆர்​.​ராகவ் மிர்தாத் இயக்​கி​யுள்​ளார். இப்​படத்தை ஃபைவ் ஸ்டார் செந்​தில் இந்​தி​யா​வில் வெளி​யிடு​கிறார். வித்​தி​யாச​மான ஃபேன்​டஸி திரைப்​பட​மான இதன் ஃபர்​ஸ்ட் லுக் போஸ்​டர்​கள் வெளி​யாகி​யுள்​ளன. “கனவு​களில் மட்​டுமே நிகழக்​கூடிய விசித்​திர​மான...
அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அன்பில் அவன்’ படம் செப்டம்பர் 25-ம் தேதி வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐங்கரன் இன்டர்நேஷனல் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘அளவு கடந்த அன்பு, அதிகமான உற்சாகம். ‘அன்பில் அவன்’ படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது. ஆர்.கார்த்திகேயனின் இயக்கத்தில் அசோக் செல்வன் – பிரீத்தி முகுந்தன் நடித்திருக்கும் படம் ‘அன்பில் அவன்’....
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தத் தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அதன் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘சேயோனில் இணைகிறார் செந்தமிழன் சீமான்’ என்று தெரிவித்து சிறு வீடியோ ஒன்றையும் இணைத்துள்ளது. மதுரை பின்​னணி​யைக் கொண்ட கிராமத்​துக் கதை​யான இதன் 2-வது கட்​டப் படப்​பிடிப்பு மதுரையில் சமீபத்தில் தொடங்கியது. இதற்​காகப் பிரம்​மாண்ட செட் அமைக்​கப்​பட்​டுப் படப்​பிடிப்பு...
மறைந்த இயக்குநர் பாரதிராஜா இறுதியாக நடித்த ‘புலவர்’ படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த டீசர், காவல் நிலையம் போல போல வடிவமைக்கப்பட்ட ஓர் அறையில் வேஷ்டி, பனியனில் இருக்கும் பாரதிராஜா, நான்கு பேரிடம் ஒரு கொலை பற்றி விசாரிக்கிறார். வார்த்தைகளில் தீவிரம் காட்டும் அவரின் விசாரணையானது கேரம், டேபிள் டென்னிஸ் விளையாட்டு என செயல்களில் கலகலப்பூட்டுகிறது. 1.08 நிமிடம் ஓடும் டீசர் படம் பற்றி அதிகம் யூகிக்க இடமளிக்கவில்லை...