சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள டார்க் காமெடி படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இதில் சுரேஷ் ரவி, கருணாகரன், புகழ், மோனிகா, மானசா சவுத்ரி, ஐஸ்வர்யா தத்தா, பாவல் நவநீதன் என பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார்.
மார்ச் 6-ல் வெளியாகும் இப்படம் பற்றி நடிகர் சதீஷ் கூறும்போது, “இது ஜாலியான படமாக இருக்கும். ‘முஸ்தபா முஸ்தபா’ என்றால் நமக்கு நட்பு பாடல் தான் ஞாபகம் வரும். அதை...
எழுத்தாளர்களின் படைப்புகள் திரைப்படமாவது இப்போது அதிகரித்து வருகின்றன. ஜெயமோகன், பூமணி, பெருமாள் முருகன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் கதைகள் படமாக்கப் பட்டு வரும் நிலையில் இப்போது பிரபல எழுத்தாளரும் நடிகரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை எழுதிய ‘நீர்’ என்ற கதை திரைப்படமாகிறது.
இதை ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் உள்பட பலர் நடித்து வெளியான ‘பராரி’ படத்தை இயக்கிய எழில் பெரியவேடி இயக்குகிறார்.
சினிமாவுக்காக ‘நீர்’ கதையில் சில மாற்றங்களைச் செய்து இயக்க...
பியார் பிரேமா காதல்’ ரைசா வில்சன், ‘ஆண்மை தவறேல்’ துருவா நடிக்கும் படம், ‘நோவா: பேஸ் ஒன் - தி அரைவல்’. இதில் அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர்.
ஆதி, ஹன்சிகா நடித்த ‘பார்ட்னர்’ படத்தைத் தொடர்ந்து ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் இதைத் தயாரித்துள்ளது. விளம்பர படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட மைலோ...
மலையாள இயக்குநரான ஜிதின் லால் இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் விக்ரம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் விக்ரம். இப்படத்தை அருண் விஸ்வா தயாரிக்கவுள்ளார். இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் 4 படங்கள் நடிப்பதற்கு கதைகள் கேட்டு முடிவு செய்திருப்பதாக விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதில் ஒரு படத்தை ‘இருமுகன்’...
முழுமையான சயின்ஸ் ஃபிக்ஷன் கதையுடன் உருவாகியுள்ள திரைப்படம், ‘மகரம்’. அகஸ்டின் பிரபு இயக்கியுள்ள இப்படத்தை ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. ஆதர்ஷ் சந்திர சேகரன் இசை அமைத்துள்ளார். அமல் டோமி ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜித், இஷிதா, அமர் ரமேஷ், நிர்மல், சாமி, அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் அகஸ்டின் பிரபு கூறும்போது, “4 கதைகளை ஒன்றோடொன்று இணைத்து ஒரு...
விமல் நடிக்கும் ‘வடம்’ படத்தை வி.கேந்திரன் இயக்கியுள்ளார். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இதில் நட்டி நட்ராஜ், சனஸ்கா ஸ்ரீ, முனீஸ்காந்த், பால சரவணன், ‘ஆடுகளம்’ நரேன், மது சூதன் ராவ், தீபா, இந்து மதி மணிகண்டன், ஷரவண சக்தி, மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மஞ்சு விரட்டுப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ். குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மார்ச் 6ல் வெளியாகும் இப்படத்தின்...
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
‘அரசன்’ படத்தை முடித்துவிட்டு, அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதன் கதை மற்றும் திரைக்கதையினை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் சிம்பு. தற்போது சிம்பு, அஸ்வத் மாரிமுத்து மற்றும் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் சந்தித்து படத்தின் பணிகளைத் துரிதப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட படங்களை...
நடிகர் அஜித் சார் ஒரு சிறந்த மனிதர் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் ரேஸ் சம்பந்தப்பட்ட படமொன்று தயாராகி வருகிறது. இது முதலில் ஆவணப்படம் என்றே கூறப்பட்டு வந்தது. ஆனால் இது முழுமையான படம் என்றும், ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாக இருக்கும் என்றும் விஜய் பேட்டி யொன்றில் தெரிவித்திருந்தார்.
இப்படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். நேற்று தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு...
‘கனா’ படம் மூலம் தயாரிப்பாளராகவும் மாறிய நடிகர் சிவகார்த்திகேயன் சிறிய பட்ஜெட்களில் நல்ல கதைகளை தொடர்ந்து தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் புதுமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தாய் கிழவி’ எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.
கருமாத்தூர் எனும் கிராமத்தில் வாழும் முதிய பெண் பவுனுத்தாயி (ராதிகா சரத்குமார்). கணவனை இழந்த பின்னரும், யாருடைய தயவும் இன்றி, வட்டிக்குக் கடன் கொடுத்த பணத்தை...
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்துக்கு 'டெக்ஸ்லா' எனப் தலைப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கிராமத்துப் பின்னணியில், சிறுவர்களின் உலகத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.
'3', 'வை ராஜா வை', ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' ஆகிய படங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா இயக்கும் நான்காவது திரைப்படம் இதுவாகும்.
'வை ராஜா வை' படத்துக்குப் பிறகு மீண்டும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் அவர்...










