அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் ‘அன்பே டயானா’. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம் ஆகஸ்ட் 28-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் பணிகள் முன்பே முடிக்கப்பட்டாலும், அனைத்து தரப்பினருக்கும் திருப்தி அளிக்கும் வகையில் படம் தற்போது...
துருவ் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கரண் இயக்குநராக அறிமுகமாகும் படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பூஜை முடிந்து, முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது துருவ் விக்ரம் உடன் நடிக்கவிருப்பவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘மகான்’ படத்துக்குப் பிறகு சந்தோஷ் நாராயணன் இசையில்...
கார்த்தி நடிக்கவுள்ள புதிய படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார்.
தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மார்ஷல்’ மற்றும் கல்யாண் ஷங்கர் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. இதில் கல்யாண் ஷங்கர் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கார்த்தி.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்தை மோகன் ராஜா இயக்கவுள்ளார். 2017-ம் ஆண்டு தமிழில் வெளியான ‘வேலைக்காரன்’...
“என்னை வெற்றி பெற வைத்த ரசிகர்களின் கனவுகளும் நிறைவேற வேண்டும். நிச்சயம் நிறைவேறும்” என்று நடிகர் சூர்யா உருக்கமாக பேசினார்.
‘கருப்பு’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞயிற்றுக்கிழமை கோயம்புத்தூரில் நடந்தது.
விழாவில் நடிகர் சூர்யா ரசிகர்களுக்கும் தனக்குமான உறவை நினைவுகூர்ந்து உருக்கமாக பேசினார். அவர் பேசுகையில், “என் படத்தின் வசனம் ஒன்றுதான் ஞாபகத்துக்கு வருகிறது. அதை சொல்லி...
நடிகர் அஜித் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றி வந்தார். ‘ஏகே64’ என அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் தலைப்பு ‘டேர் டெவில்’ என அறிவிக்கப்பட்டது. அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார்.
இது குறித்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் தள...
சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீணா டாண்டன், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ள படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’.
வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரித்துள்ளது. ஆக.14-ல் வெளியாக இருக்கும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். இதன் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சூர்யதேவர நாக வம்சி, வெங்கி அட்லூரி, ஜிவி பிரகாஷ் குமார்,...
ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தை ‘கிடா’ படத்தை இயக்கிய ரா.வெங்கட் இயக்குகிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். நாயகியாக ரஜிஷா விஜயன் நடிக்கிறார். ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் சார்பில் குமார் தயாரிக்கும் இப்படத்துக்குச் சுயாதீன இசைக்கலைஞர் மார்ஷல் ராபின்சன் இசையமைக்கிறார்.
அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் முதல் தோற்றம்...
ஆண்டனி எழுதி, இயக்கி, தயாரித்து, கதாநாயகனாக நடித்துள்ள படம்,‘ஏன் என்னை ஏதோ செய்தாய்’.
இதில் மதுமிதா தாஸ், ஜீவா ரவி, ரெஜின் ரோஸ், ஆலம் ஷா, நவ்யா சுஜி, மாதங்கி சதீஷ், ரியா மனோஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். பியட்ரோ வில்லானி ஒளிப்பதிவு செய்துள்ளார். பாடல்களுக்கு ஜெய்கார் ஹரிநாத், அசோக் ஸ்ரீதரன் இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை ஜோயி ரிடா அமைத்துள்ளார்.
“தாயை இழந்து தனிமையில் வளர்ந்த இளைஞன், மதுவுக்கு அடிமையாகி வாழ்ந்து...
கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
தனது இயக்குநர் மற்றும் நடிகர்கள் நண்பர்களின் பல்வேறு படங்களில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. தற்போது அதனை நிறுத்திவிட்டதாக விஜய் சேதுபதி பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
அப்பேட்டியில் விஜய் சேதுபதி, “கவுரவ தோற்றத்தில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டேன். ரஜினி சார் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் மட்டுமே இதில் விதிவிலக்கு. ஏனென்றால் அப்படத்தின் போஸ்டரில் எனது முகம் இடம்பெற்றாலும்,...
ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7-ம் தேதி ‘நூறுசாமி’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி நடித்து தயாரித்து வெளியான படம் ‘நூறுசாமி’. இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. ஜூன் 19-ம் தேதி வெளியான இப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றாலும், திரையுலகினர் பலரும் இப்படத்தினை பார்த்து பாராட்டு தெரிவித்தார்கள்.
இப்படம் ஆகஸ்ட் 7-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனை விளம்பரப்படுத்தும்...








