ரவி மோகன் நடித்து வரும் ’ப்ரோ கோட்’ படத்தின் தலைப்பு ‘ப்ரோ க்ளப்’ என மாற்றப்பட்டுள்ளது. நடிகரும், தயாரிப்பாளருமான ரவி மோகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் தனது தயாரிப்பில் அடுத்தடுத்து வர இருக்கும் படங்கள் பற்றி கூறும்போது, “ஜீனி படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. ‘கராத்தே பாபு’ படத்தில் ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டும். 2 மாதத்தில் படம்...
ரியோ ராஜின் ‘ராம் IN லீலா’ படம் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் வெளியீடு குறித்து ரியோ ராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தீவிரமான கொண்டாட்டத்துக்கு தயாராகுங்கள். ‘ராம் IN லீலா’ திரையரங்குகளில் ஆகஸ்ட் 21-ம் தேதி வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளார். ‘ஆண் பாவம் பொல்லாதது’ படத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ரியோ ‘ராம் IN லீலா’ படத்தில் நடித்து வந்தார்....
புதுச்​சேரி​யில் 3-வது உலகத் திரைப்​பட​ விழா இன்று தொடங்​கு​கிறது. பார்​வை​யாளர்​கள் 10 நாடு​களைச் சேர்ந்த 10 மொழிப் படங்​களை இலவச​மாக பார்க்​கலாம். புதுவை திரை இயக்​கம், பிரெஞ்சு மொழி மற்​றும் பண்​பாட்டை உலகெங்​கும் பரப்​பும் அலை​யன்ஸ் பிரான்​சிஸ் நிறு​வனத்​துடன் இணைந்து 3-வது உலக திரைப்பட விழாவை நடத்​துகிறது. அலை​யன்ஸ் பிரான்​சிஸ் கருத்​தரங்கு கூடத்​தில் இன்று (ஆக.7) தொடங்கி 9-ம் தேதி வரை 3 நாட்​கள் இந்த திரைப்பட விழா நடக்​கிறது. இன்று...
விஷால் இயக்கி நடித்திருக்கு ‘மகுடம்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 7-ம் வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விஷால் இயக்கி நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. துஷாரா விஜயன் நாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். முதலில், ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்கும், விஷாலுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால், படத்தை...
நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மணிகண்டன் நடிக்கும் படத்துக்கு ‘மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டு, படத்தின் முதல் தோற்றமும் வெளியிடப்பட்டுள்ளது. ‘ஜெய் பீம்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படங்களில் மூலம் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றவர் மணிகண்டன். ‘குடும்பஸ்தன்’ படத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர், தற்போது பா.ரஞ்சித் தயாரிப்பில் படத்தில் நடிக்கிறார். ’மக்கள் காவலன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை மணிகண்டன் தனது எக்ஸ் தள பக்கத்தில்...
இந்த வாரம் எந்தெந்த மொழிகளில் என்னென்ன படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன என்பது பற்றிய பட்டியல் இது. ஜிடிஎன்: தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம்  (GDN) ‘ஜிடிஎன்’. மாதவன், பிரியாமணி, துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி உள்ளார். ஆக.7-ம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது. டிசி: போலீஸாரின் வன்முறையிலிருந்து ஒரு அப்பாவி குடும்பத்தை காப்பாற்ற  தேவதாஸும்...
இளையராஜா இசையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘டோரதி’ படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. தான் இயக்கும் புதிய படத்தின் பெயர் டோரதி  என செவ்வாய்க்கிழமை கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1.28 நிமிடங்கள் ஓடும் டீசரில், அகலமான சாலையோரத்தில் வலதுபுறத்தில் இருந்து கிளம்பிவரும் புழுதி திரையை நிறைக்கிறது. புழுதி மங்கி திரை தெளிவாகும் போது, தூரத்தில் ஆடுகளின் சத்தம்...
‘இந்தியாவின் எடிசன்’ என்று அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கைக் கதை ‘ஜி.டி.என்’ என்ற பெயரில் திரைப்படமாகி உள்ளது. ஜி.டி.நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார். சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன் உள்பட பலர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ள இப்படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் எழுதி இயக்கியுள்ளார். ‘ராக்கெட்ரி’ படத்தைத் தயாரித்த வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் மூலன், வர்கீஸ் மூலன் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ்...
நடிகரும், கார் ரேஸருமான அஜித் குமாரின் கார் ரேஸிங் முயற்சிகளைச் சொல்லும் ‘கிளாடியேட்டர்ஸ்’ எனும் ஆவணப்படத்தின் முதல் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது.    இந்த ஆவணப்படத்தை ‘தெய்வத்திருமகள்’, ‘மதராசப்பட்டிணம்’ படங்களை இயக்கிய விஜய் இயக்குகிறார். இதனை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி ‘கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்‌ஷன்’ கீழ் தயாரிக்கிறார். இந்த ஆவணப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இதில் வீடியோகிராபர் நியோல் கெம்மன், ஒளிப்பதிவாளர்கள் ரிப்ஹு சர்மா, கபிலன் விநாயக், படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரும்...
சினிமாவில் 30 ஆண்டுகளைக் கடந்த பின்பும், படங்களின் வெற்றிகளை கணிக்க முடியாது என்று ‘கங்குவா’ தோல்வியும், ‘கருப்பு’ வெற்றியும் தனக்கு உணர்த்தின என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து சூர்யா அளித்த பேட்டி ஒன்றில், ‘முழு நம்பிக்கையுடன் உறுதியுடன் ஒரு படத்துக்கு (கங்குவா) கிட்டத்தட்ட 200 நாட்கள் வேலை செய்தோம். அந்தப் படம்  ரசிகர்களின் ஆதரவைப் பெறாமல்  தோல்வியடைந்தது. 45 நாட்கள் வேலை செய்த ஒரு படம் (கருப்பு)...