நடிகை ஹனி ரோஸ், தொழிலதிபர் ஒருவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் அது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அந்த தொழிலதிபரின் வணிக நிறுவன திறப்பு மற்றும் சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற நடிகைகளைப் போல நானும் சென்றுள்ளேன். அவர் பொது நிகழ்ச்சியில், எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதைத் தெளிவாகத் தெரிவித்தேன்....
‘திருநெல்வேலி' படம் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் உதயாவுக்கு இது 25-வது ஆண்டு. இப்போது அவர் நடிக்கும் படத்துக்கு ‘அக்யூஸ்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அஜ்மல், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். ஜேசன் ஸ்டுடியோஸ், ஸ்ரீ தயாகாரன் சினி புரொடக்‌ஷன் மற்றும் எம் ஐ ஒய் ஸ்டூடியோஸ் சார்பில் ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம். தங்கவேல் தயாரிக்கும் இப்படத்தைப் பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். குற்றம்...
ஜெயம்யம் ரவி, நித்யாமேனன், யோகி பாபு, வினய், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘காதலிக்க நேரமில்லை’. ரெட் ஜெயன்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 14-ம் தேதி வெளியாகிறது. படத்தை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி கூறும்போது, “இது ரொமான்ஸ் கதைதான். இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படம் இது. காதலில் இருக்கும் எமோஷன், புரிந்து கொள்ளாத தன்மை, சண்டை, பிரேக் அப் எல்லாமே...
தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார், பூஜா ஹெக்டே. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக ‘ரெட்ரோ’ படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அவர், விஜய்யின் 69-வது படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ரோஷன் ஆண்ட்ரூ இயக்கத்தில் ஷாகித் கபூருடன் அவர் நடித்துள்ள ‘தேவா’ என்ற இந்திப் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பூஜா ஹெக்டே கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை நடிப்பு என்பது எப்போதும் மாறிக் கொண்டிருப்பது. நான்...
இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை வேலுநாச்சியாரின் வரலாற்றை மையமாக வைத்து ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ என்ற திரைப்படம் உருவாகிறது. டிரண்ட்ஸ் சினிமாஸ் சார்பில் ஜெ.எம்.பஷீர் தயாரிக்கும் இந்தப்படத்தை ஆர்.அரவிந்தராஜ் இயக்குகிறார். வேலுநாச்சியாராக அறிமுக நடிகை ஆயிஷா நடிக்கிறார். முக்கிய பாத்திரமான பெரிய மருதாக ஜெ.எம்.பஷீர் நடிக்கிறார். இப்படத்தின் மோஷன் பிக்சர் டீஸர், வேலுநாச்சியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதன் படப்பிடிப்பு லண்டனில் அடுத்த மாதம் தொடங்குகிறது. அடுத்த...
அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் பொங்கலுக்கு வெளிவருவதாக இருந்தது. இதனால் மீடியம் மற்றும் சிறு பட்ஜெட் படங்கள் தங்கள் ரிலீஸை தள்ளி வைத்திருந்தன. இந்நிலையில் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தள்ளிப் போனதால் பொங்கலுக்கு பல்வேறு படங்கள் வெளியாக இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி பெரிய பட்ஜெட் படங்களில், ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ 10-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் பாலாவின் ‘வணங்கான்’, ஷேன் நிகம் நடிக்கும் ‘மெட்ராஸ்காரன்’ ஆகிய படங்களும் ரிலீஸ்...
‘மதகஜராஜா’ விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் விஷாலின் உடல்நிலையைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மதகஜராஜா’ திரைப்படம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகிறது. இதன் விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட விஷாலின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. கையில் மைக்கை பிடித்து அவரால் பேசவே முடியவில்லை. கை நடுங்கிக் கொண்டே இருந்தது. விஷால் முழுமையாக பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி “விஷாலுக்கு வைரஸ்...
மலையாள நடிகர் ஷேன் நிகம் தமிழில் நடிக்கும் படம், ‘மெட்ராஸ்காரன்’. இதில் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கலையரசன், கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரித்துள்ளார். சாம் சி. எஸ். இசை அமைத்துள்ளார். வரும் 10-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படம் பற்றி இயக்குநர், வாலி மோகன்தாஸ் கூறும்போது, “சென்னையில் வேலை பார்க்கும் ஹீரோ, சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு காதலியை திருமணம் செய்வதற்காக செல்கிறார்....
‘புஷ்பா 2’ படத்தின் கொண்டாட்டத்தை முழுமையாக அல்லு அர்ஜுன் தவிர்த்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் ரூ.1,800 கோடி வசூலை நெருங்கி வருகிறது ‘புஷ்பா 2’. ‘பாகுபலி 2’ படத்தின் வசூலைத் தாண்டி, தற்போது உலகளவில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 2-ம் இடத்தில் இருக்கிறது. முதல் இடத்தில் ‘டங்கல்’ திரைப்படம் இருக்கிறது. ‘புஷ்பா 2’ பட வெளியீட்டின் போது சந்தியா திரையரங்கில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர்...
“சினிமா விமர்சனங்கள் பலவும் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறி போகின்றன, இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார் 2024-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’. சிதம்பரம் இயக்கத்தில் வெளியான இப்படத்துக்கு தமிழிலும் அமோக வரவேற்பு கிடைத்தது. பல திரையரங்குகளில் 2024-ம் ஆண்டு அதிக டிக்கெட் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 படங்கள் பட்டியலில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு...