தொடர்ந்து அவமதிப்பதா? – ஹனி ரோஸ் எச்சரிக்கை

0
23

நடிகை ஹனி ரோஸ், தொழிலதிபர் ஒருவர் தன்னை இழிவுபடுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் அது தொடர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் பெயரைக் குறிப்பிடாமல் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “அந்த தொழிலதிபரின் வணிக நிறுவன திறப்பு மற்றும் சில நிகழ்ச்சிகளுக்கு மற்ற நடிகைகளைப் போல நானும் சென்றுள்ளேன். அவர் பொது நிகழ்ச்சியில், எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். என்னைப் பற்றி இதுபோன்ற கருத்துகளைச் சொல்வதை ஏற்க முடியாது என்றேன்.

பிறகு அவர் நிறுவன நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் செல்ல மறுத்துவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து எனது பெயரைத் பயன்படுத்தி தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவர் செயல் என்னைப் பழிவாங்குவது போல் இருக்கிறது. ஒருவரிடம் பணம் இருக்கிறது என்பதற்காக எந்த பெண்ணையும் அவமதிக்க முடியுமா? இது தொடர்ந்தால், சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here