அருமனை அருகே வெள்ளச்சி பாறையில் பத்திரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மலை மீது அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு கோயில் உடைக்கப்பட்டு அங்கிருந்த நான்கு தூக்கு விளக்குகள், ஒரு குத்துவிளக்கு மற்றும் அம்மனின் நெற்றியில் இருந்த ஒரு தங்க போட்டு ஆகியவை திருட்டு போயிருந்தன. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அருமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று காலை அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் பொருட்களை மூட்டைகட்டி வைத்துக்கொண்டு சென்றபோது பொதுமக்கள் விரைந்து அந்த நபரை போலீசில் பிடித்து ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் அதே பகுதியைச் சேர்ந்த ரிஜியூ (37) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.