மலையாளம், தமிழ் என கலக்கிக் கொண்டிருக்கும் நிமிஷா சஜயன் இன்ஸ்டாகிராமிலும் தனது புகைப்படங்களின் வாயிலாக ரசிகர்களை அசரடித்துக் கொண்டிருக்கிறார்.மலையாளத்தில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நிமிஷா சஜயன்.தமிழில் ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘மிஷன்’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.மலையாள சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராக புகழப்படும் நிமிஷா, ’தி கிரேட் இண்டியன் கிச்சன், ‘மாலிக்’, ‘தொண்டிமுதலும் திரிக்ஷாக்ஷியும்’, ‘நாயாட்டு’ உள்ளிட்ட படங்களின் மூலம் பேசப்பட்டார்.2019ஆம் ஆண்டு கேரள...
4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலையாளத்தில் நடிக்கும் நஸ்ரியாவின் ‘சூக்ஷமதர்ஷினி’ திரைப்படம் வரும் நவம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வந்த நடிகை நஸ்ரியா, நானி நடிப்பில் வெளியான ‘அன்டே சுந்தராணிகி’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்தப் படம் 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்துக்குப் பிறகு 2 ஆண்டுகளாக நஸ்ரியா நடிக்கும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாமல்...
நடிகர் விஜய்யின் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல், பிரகாஷ்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், மமிதா பைஜு உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
அதிரடியான ஆக் ஷன் கதையை கொண்ட இந்தப் படத்தில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. அரசியலில் நடிகர் விஜய் முழு வீச்சில் ஈடுபட இருப்பதால் இது அவரது...
தமிழில் ‘தடையற தாக்க', ‘என்னமோ ஏதோ', ‘ஸ்பைடர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', சமீபத்தில் வெளியான ‘இந்தியன் 2’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் தேவ்கன் மற்றும் ஆர். மாதவனுடன் ‘தே தே பியார் தே 2’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.
உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங், ஜிம்மில் 80 கிலோ எடையை தூக்கும் போது பலத்த காயம் அடைந்தள்ளார். வழக்கமாகக்...
“அப்பா இருந்திருந்தால் கொண்டாடியிருப்பார்” – ஏ.பீம்சிங் 100-வது பிறந்தநாளில் பிரபு நெகிழ்ச்சி
admin - 0
தமிழில் பல மறக்க முடியாத வெற்றிப் படங்களை இயக்கியவர், ஏ.பீம்சிங். குடும்பப் படங்களை யதார்த்தமாக இயக்குபவர் எனக் கூறப்படும் இவர், சிவாஜி நடிப்பில் மட்டும் 19 படங்களை இயக்கியுள்ளார். அதில்பாசமலர், பாகப்பிரிவினை, படிக்காத மேதை, பாவ மன்னிப்பு உட்பட 15 ‘பா’ வரிசை படங்களும் உண்டு. பீம்சிங்கிற்கு நேற்று நூறாவது பிறந்தநாள். இதையொட்டி, நடிகர் பிரபு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “அப்பா நடித்த படங்களில் உதவி இயக்குநராக...
நடிகர் கமல்ஹாசன், மணிரத்னம் இயக்கத்தில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்துள்ளார். அவருடன் சிம்பு, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், அபிராமி என பலர் நடித்துள்ளனர். ‘நாயகன்’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைந்துள்ளதால் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள இருக்கும் அவர், அடுத்து, சண்டை இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கும்...
‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.பி.சக்திவேல் அடுத்து இயக்கும் படம், ‘அலங்கு’. இதில் நாயகனாக குணாநிதி நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பன் வினோத், காளி வெங்கட், சரத் அப்பானி, ஸ்ரீரேகா, கொற்றவை, ரெஜின் ரோஸ், சண்முகம் முத்துசாமி என பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் நாய் ஒன்றும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறது. எஸ்.பாண்டிகுமார்ஒளிப்பதிவு செய்துள்ளஇந்தப் படத்துக்கு அஜீஷ் இசை அமைக்கிறார். டிஜி பிலிம் கம்பெனி மற்றும் மக்னாஸ்புரொடக்ஷன்ஸ்...
அறிமுக இயக்குநர் கலா அல்லூரி எழுதி இயக்கியுள்ள படம், ‘பரிசு’. நாயகியை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜான்விகா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெய்பாலா, கிரண் பிரதீப், ஆடுகளம் நரேன், சென்ராயன், சச்சு உட்பட பலர் நடித்துள்ளனர். கலா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி இயக்குநர் கலா அல்லூரி கூறும்போது, “ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான தந்தை, மகளையும் ராணுவத்தில் சேர சொல்கிறார்....
பிரபல இந்தி மற்றும் மராத்தி பட நகைச்சுவை நடிகர் அதுல் பர்சுரே காலமானார். அவருக்கு வயது 57.
நாடகங்களில் இருந்து சினிமாவுக்கு வந்த இவர் இந்தியில், ஜிந்தகி 50 50, லவ் ரெசிபி, கட்டா மிட்டா, கல்கத்தா மெயில் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரை தொடர்களிலும் பங்கேற்று வந்த அவர், புகழ்பெற்ற சின்னத்திரை நிகழ்ச்சியான கபில் சர்மா காமெடி ஷோவிலும் பங்கேற்றிருந்தார்.
கடந்த சில வருடங்களுக்கு முன் அதுல் பர்சுரேவுக்கு...
போயபதி சீனு - பாலகிருஷ்ணா இணையும் ‘அகண்டா 2 - தாண்டவம்’ படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
போயபதி சீனு இயக்கத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த படம் ‘அகண்டா’. இதில் ப்ரக்யா ஜைஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு தமன் இசையமைத்திருந்தார். 2021-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தெலுங்குப்...










