Google search engine
நடிகர் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஜெயராம், கருணாகரன் உட்பட பலர் நடிக்கின்றனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. சூர்யாவின் 44-வது படமான இதன் படப்பிடிப்பு அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் ஊட்டியில் நடைபெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தில் தனது காட்சிக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே. இதற்காகப் படக்குழுவினர் கேக் வெட்டி...
சொத்துப் பிரச்சினையில் பூர்வீக வீடு சொந்தத்துக்குச் சென்று விட இதற்கு மேல் அங்கு வாழக் கூடாது என்று , தஞ்சாவூரின் நீடாமங்கலத்தில் இருந்து, தனது மனைவி, மகன் அருள்மொழி (அரவிந்த்சாமி) ஆகியோருடன் சென்னைக்கு இடம் பெயர்கிறார் அறிவுடை நம்பி (ஜெயப்பிரகாஷ்). இருபது வருடமாக ஊருக்குச் செல்லாமல் இருக்கும் அவர்களுக்குள் கோபம் இருந்தாலும் ஊர் பாசம் ஊறிக் கிடக்கிறது. இந்நிலையில் தன் மீது பாசம் கொண்ட சித்தப்பா மகள் புவனா...
நடிகை சிம்ரன், தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டதாகவும் அதற்கு அவர் மறுத்துவிட்டதாகவும் கடந்த சில நாட்களாகச் செய்திகள் வெளியாயின. அதோடு அவருடைய கடைசிப் படமான விஜய் 69-ல் நடிக்க வாய்ப்புக் கேட்டதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அதை மறுத்துள்ள சிம்ரன் காட்டமாகப் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுவரை எந்த பெரிய கதாநாயகர்களுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்பட்டதில்லை. வாய்ப்புகள் வந்தபோது நடித்திருக்கிறேன். இப்போது என்...
சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் (ஏகன்), அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் (சத்யா) கோழிப்பண்ணை வைத்திருக்கும் பெரியசாமி (யோகிபாபு) ஆதரவளிக்கிறார். பின் பெரியசாமியின் கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான்செல்லதுரை. அவரை, அருகில் பானைக்கடை வைத்திருக்கும் தாமரைச்செல்வி (பிரிகிடா சகா), காதலிக்கிறார். சூழ்நிலை காரணமாக அதை அவன் புறக்கணிக்கிறான். இந்நிலையில் தன் கல்லூரியில் அறிமுகமாகும் ஒருவருடன் தங்கைக்கு காதல் ஏற்படுகிறது. இதனால் செல்லதுரை வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள்...
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் சினிமாவின் விதிமுறைகளை மறுசீரமைப்பு செய்து மேம்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நவ.1 முதல் புதிய விதிமுறைகளோடு படப்பிடிப்பைத் தொடங்குவது என்றும் இல்லை என்றால் சுமுக முடிவு எடுக்கும் வரை அனைத்து பணிகளையும் நிறுத்தி வைப்பது என்றும் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டது. இது தொடர்பாகத் தொழிலாளர் சம்மேளனத்துக்கு அனுப்பிய மறு சீரமைப்பிற்கான விதிமுறைகள்...
விஜய் ஆண்டனி, ரியா சுமன் நடித்துள்ள படம் ‘ஹிட்லர்’. சரண்ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, இயக்குநர் தமிழ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக், மெர்வின் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு நவீன்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா, டி.ஆர்.சஞ்சய் குமார் தயாரித்துள்ளனர். வரும் 27-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் தனா கூறும்போது, “இது...
வில்லனாக நடித்து வந்த நடிகர் அர்ஜுன் தாஸ், இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். அநீதி, ரசவாதி படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர் மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு ‘பாம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். காளி வெங்கட், ஷிவாத்மிகா ராஜசேகர், நாசர், அபிராமி, சிங்கம் புலி, பால சரவணன் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை விஷால் வெங்கட் இயக்கியுள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். மகிழ்நன் வசனம்...
நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் தனுஷ் பட பஞ்சாயத்து முடிவுக்கு வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கக் கூட்டத்தில் நடிகர்களின் சம்பள உயர்வு, ஓடிடி விவகாரம் உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் பேசி முடிவுக்குக் வர வேண்டும். அதற்குப் பிறகே புதிய படங்களின் படப்பிடிப்பு தொடங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இதில் விஷால் மற்றும் தனுஷுக்கு ரெட் கார்டு எனவும் தெரிவிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக...
சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள முக்கியமான திரையரங்குகள் அனைத்திலுமே வெளியாகவுள்ள புதிய படங்களின் விளம்பரப் பலகைகள் வைக்கப்படுவது வழக்கம். இது குறித்து சென்னை மாநகராட்சி பலமுறை எச்சரிக்கை விடுத்து வந்தது. ஆனால், இது குறித்து திரையரங்க நிர்வாகம் எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் இருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால், முக்கிய திரையரங்குகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன....
‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2-ம் பாகம் வெளியீடு குறித்த தகவல் இணையத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கல்கி 2898 ஏடி’. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட இந்தப் படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. கடந்த வாரம்...